எங்களுக்கு அந்த ஒரு வீரர் வேண்டும் – தோனி சொன்னது யாரை தெரியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு எதுவுமே சரியாக நடக்கவில்லை. இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் மூன்று போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று, 10 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளனர். இதனால் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை உறுதி செய்துள்ளனர். இன்னும் அடுத்ததாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தங்களது கடைசி லீக் போட்டியில் விளையாட உள்ளனர். தொடக்கப் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பேட்டிங் சரியாக கை கொடுக்கவில்லை, ஒவ்வொரு போட்டியாக மாற்று வீரர்களை வைத்து அதனை தற்போது சரி செய்துள்ளனர். ஆனால் தற்போது பவுலிங் சரியாக அமையவில்லை. மேலும் பில்டிங்களும் பல கேட்களை தவறவிட்டு வருகின்றனர். ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸின் தோல்வியை சந்தித்துள்ளது.

மேலும் படிங்க: ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை.. தவிர்ப்பாரா ரிஷப் பண்ட்!

கேப்டன் தோனி சொன்ன முக்கிய வார்த்தைகள்

“எங்கள் பேட்டிங் துறையில் நன்றாக செயல்பட விரும்புகிறோம். அடுத்த ஆண்டு எந்த இடத்தில் எந்த வீரர் சிறப்பாக செயல்படுவார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். எங்கள் பந்துவீச்சில் இன்னும் சரியான திட்டமிடல் வேண்டும். நாங்கள் போட்டியிலிருந்து வெளியேறியதும், அடுத்த ஆண்டுக்கான பதில்களைக் கண்டுபிடிக்க விரும்பினோம். அடுத்த ஏலத்தில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். நாங்கள் பேட்டிங்கில் அதிக மாற்றங்களை செய்து வருகிறோம். குறிப்பாக சீசனின் தொடக்கத்தில் நாங்கள் சிரமப்பட்டோம். நீங்கள் தொடர்ந்து அழுத்தத்தில் இருக்கும்போது அது வேலை செய்யாது. நீங்கள் எல்லா வகையான ஷாட்களையும் விளையாடத் தேவையில்லை, தேவையான நேரத்தில் ரன்களை அடிக்க வேண்டும்” என்று கூறினார்.

தோல்விக்கு பிறகு பேசிய தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் அடித்து இருந்தது. 10 ஓவரிலேயே 5 விக்கெட்களை இழந்து இருந்தாலும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். அதன்பிறகு களமிறங்கிய ராஜஸ்தான் அணி 17.1 ஓவரில் 188 ரன்கள் அடித்து வெற்றி பெற்றனர். இதன் மூலம் சென்னை அணிக்கு புள்ளி பட்டியலில் 10வது இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. போட்டி முடிந்த பிறகு பேசிய தோனி, “நாங்கள் அடித்த ரன்கள் மிகவும் நன்றாக இருந்தது, ஆனால் விக்கெட்டுகள் அடுத்தடுத்து போனது. மிடில் ஓவரில் கூடுதல் ரன்கள் அடித்து இருக்க வேண்டும். பிரெவிஸின் இன்னிங்ஸ் மிகவும் நன்றாக இருந்தது என்று நான் நினைக்கிறேன், அவர் வாய்ப்புகளை எடுத்துக் கொண்டார், ரன்-ரேட் நன்றாக இருந்தது என்று நான் நினைக்கிறேன், அதுதான் நாங்கள் சற்று மேம்படுத்த விரும்பும் கட்டம்.

ரன்-ரேட் உயர்ந்ததாக உணர்ந்தேன், ஆனால் கூடுதல் விக்கெட்களை இழந்தோம். பவுலிங்கில் கம்போஜ் ஸ்விங் செய்யாமல் பந்து வீச கூடியவர். ஆனாலும் அவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார், அவர் நல்ல யார்க்கர்களை வீசக்கூடிய ஒருவர். முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் அதிக ரன்கள் கொடுக்க விரும்பவில்லை. அவர் பவர்பிளேயில் 3 ஓவர்கள் பந்து வீசியுள்ளார், பந்து அதிகம் நகராதபோதும், பேட்ஸ்மேன்கள் நன்றாக இருக்கும்போதும் இது கடினமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். 200 ஸ்ட்ரைக் ரேட்டைத் தேடும்போது நிலைத்தன்மையைக் கண்டுபிடிப்பது கடினம் என்று நான் நினைக்கிறேன். பேட்ஸ்மேன்கள் தங்களைத் தாங்களே ஆதரித்துக்கொள்ள வேண்டும். முக்கியமானது என்னவென்றால், உங்கள் முதல் சீசனைப் போலவே அனைத்து இளம் பேட்ஸ்மேன்களும் இருக்க வேண்டும். எதிர்காலத்தில் ஒரு பேட்ஸ்மேனாக வளர உதவும் வகையில் நீங்கள் இன்னும் சீராக இருக்க வேண்டும்” என்று தோனி தெரிவித்தார். அடுத்ததாக சென்னை அணி வரும் மே 25ம் தேதி குஜராத் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

மேலும் படிங்க: இனி மஞ்சள் ஜெர்ஸியில் சஞ்சு சாம்சன்? – இந்த ஸ்டார் வீரரை RR உடன் டிரேட் செய்யும் CSK?!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.