தெரு நாய்களை கட்டுப்படுத்தும் வழக்கில் தலைமைச் செயலர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தெரு நாய்​கள் விவ​காரத்​தில் பதில் மனு தாக்​கல் செய்​யாத தமிழகம் உள்​ளிட்ட மாநிலங்​களின் தலை​மைச் செய​லா​ளர்​கள் நவம்​பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்ளது.

தெரு நாய்​கள் தொல்லை தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளது. இந்த வழக்கு கடந்த 27-ம் தேதி விசா​ரணைக்கு வந்​த​போது, பதில் மனு தாக்​கல் செய்​யாத தமிழ்​நாடு உள்​ளிட்ட மாநில தலை​மைச் செய​லா​ளர்​கள் நவம்​பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக வேண்​டும் என் உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில் உச்ச நீதி​மன்ற நீதிபதி விக்​ரம் நாத் தலை​மையி​லான அமர்வு முன், மத்​திய அரசின் சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா நேற்று ஆஜராகி, “பதில் மனு தாக்​கல் செய்​யாத மாநிலங்​களின் தலை​மைச் செய​லா​ளர்​கள் நேரில் வரு​வதற்கு பதிலாக காணொலி​யில் ஆஜராக அனு​ம​திக்க வேண்​டும்” என முறை​யிட்​டார்.

முறை​யீட்டை நிராகரித்த நீதிப​தி​கள், “விலங்கு கருத்​தடை விதி​களை நாடாளு​மன்​றம் ஏற்​படுத்​தி​யும் எவ்​வித நடவடிக்​கை​யும் இல்​லை. இது தொடர்​பாக பதில் மனு தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டோம். அதற்​கும் நடவடிக்கை இல்​லாமல் தூங்​கிக் கொண்​டுள்​ளனர். நீதி​மன்ற உத்​தர​வுக்கு மதிப்பு இல்​லை. நேரில் வந்து விளக்​கம் அளிக்​கட்​டும்​” என்​று திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.