டெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியின் முக்கிய பகுதியான செங்கோட்டை பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாவது நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, கடந்த 10ஆம் தேதி (10.11.2025) மாலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால், அருகே இருந்த சில வாகனங்கள் தீப்பற்றி எரிந்து தீக்கிரையாகி உருக்குலைந்தன. இந்த […]