சென்னை: சென்னையை அடுத்த திருப்போரூரில் அமைந்துள்ள வொண்டர்லா பொழுதுப்போக்கு பூங்காவை முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து இன்று முதல் இது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்மூலம் ; 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே ரூ.611 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள ‘சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிச.1) வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். […]