சூறைக் காற்றுடன் கனமழை; ராமேஸ்வரத்தில் 10 படகுகள் சேதம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த பலத்த மழைக்கு 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமடைந்தன. ராமேஸ்வரத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இரவு நேரத்தில் கடலில் பலத்த காற்றும் வீசி வருகிறது. அது போல் நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் படகு நிறுத்தும் ஜெட்டி பாலத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி பக்கப்பலகைகள் உடைந்தன. இதில் பத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் விசைப்படகுகள் … Read more

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கனமழை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை பெய்து வருகிறது. சோதனை சாவடி, அம்மன்கோவில் தெரு, டோல்கேட், விராலூர் உள்ளிட்ட ஊர்களில் கனம்ழை பெய்து வருகிறது.

உத்தரகாண்டிலும் இந்தியில் எம்பிபிஎஸ்

டேராடூன்: நாட்டிலேயே முதல் முறையாக கடந்த அக்டோபர் 16ம் தேதி மத்தியப்பிரதேசத்தில் இந்தியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இரண்டாவது மாநிலமாக உத்தரகாண்டிலும் இந்தியில் மருத்துவ படிப்பு தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பாக அம்மாநில கல்வி துறை அமைச்சர் தான் சிங் ராவத் கூறுகையில், ‘‘இந்தி மொழிக்கு ஒன்றிய அரசு சிறப்பு கவனம் செலுத்துவதை கருத்தில் கொண்டு அடுத்த கல்வியாண்டு முதல் அரசு மருத்துவ கல்லூரிகளில் ஆங்கிலம் … Read more

ராமநாதபுரம் மாவட்டத்தில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்; திரளாக திமுகவினர் பங்கேற்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அளவிலான திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகிக்க, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ் கண்ணா வரவேற்றார். திராவிட இயக்க வரலாறு குறித்து பேராசிரியர் கொளத்தூர் மணியும், … Read more

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணி வெற்றி பெற 128 ரன் இலக்கு

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தானுக்கு 128 ரன் இலக்கை வங்கதேசம்  அணி நிர்ணயத்தது.  முதலில் ஆடிய வங்கதேசம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ரன் எடுத்துள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மறுதாக்கல் செய்யப்படுமா? அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்து ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2010ம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 2014ல் ஆட்சி மாற்றத்திற்கு பின் இந்த மசோதா காலாவதியானது. இதன் பின் மீண்டும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமலேயே உள்ளது. இந்நிலையில், மகளிர் இடஒதுக்கீடு … Read more

திருவண்ணாமலை மின்தடை குறித்த புகார் தெரிவிக்க தொலைபேணி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது

திருவண்ணாமலை: மின்தடை குறித்த புகார் தெரிவிக்க தொலைபேணி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் திருவண்ணாமலை மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் சேவை மையத்தினை 9445855768 என்ற வாட்ஸ் அப் எண், தொலைபேசி எண் 04175-232363 மற்றும் கைபேசி எண் 9499970214 ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் தகவல் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் … Read more

இந்தோனேசியாவின் சுலாவேசி மாகாணத்தில் பலத்த நிலநடுக்கம்

இந்தோனேசியா: இந்தோனேசியாவின் சுலாவேசி மாகாணத்தில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு புவி ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்ததுள்ளது. கடலுக்கு அடியில் 255 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவில் காலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து ஏதுமில்லை என புவி ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்தது.

தொற்று நோய்தடுப்புக்கான தனிமைப்படுத்துதலுக்கு பின் 2 சிறுத்தை புலிகள் வன பகுதியில் விடுவிப்பு: பிரதமர் மோடி ட்விட்

டெல்லி: தொற்று நோய்தடுப்புக்கான தனிமைப்படுத்துதலுக்கு பின் 2 சிறுத்தை புலிகள் (சீட்டா) வன பகுதியில் விடுவிக்கப்பட்டு உள்ளன என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். இந்தியாவில், வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ‘சீட்டா’ ரக சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952-ம் ஆண்டு அரசு அறிவித்தது. அதேநேரம் அவற்றை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. … Read more

குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்வது குறைந்ததால் மெயின் அருவி, புலியருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. பழைய குற்றாலத்தில் மட்டும் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டது.