திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஒன்றியக்குழு தலைவர் ஆலோசனை நடத்தினார். திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயலலிதா, மகேஸ்வரி, சுந்தர்ராஜன், தமிழரசு, சோமசேகர், லதா, சாமுண்டீஸ்வரி, ஒன்றிய பொறியாளர்கள் … Read more

சென்னை அண்ணாநகர் டவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்படும்

சென்னை: சென்னை அண்ணாநகர் டவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்படும். அமைச்சர்கள் நேரு, சுப்பிரமணியன் ஆகியோர் அண்ணா நகர் டவரை திறந்து வைத்தார்.

மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான சிசோடியாவுக்கு ஏப்ரல் 2ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடந்த 9ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். டெல்லி மதுபானக்கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரிகள் கலால் துறை அதிகாரிகள் மற்றும் தொழிலதிபா்கள் சிலரை கைது … Read more

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இந்திய கடலோர காவல் படை

தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 6 பேரை இந்திய கடலோர காவல்  படை கைது செய்தது. 6 இலங்கை மீனவர்களையும் தூத்துக்குடி தருவைகுளம் கடலோர காவல் நிலையத்தில் கடலோர காவல் படை ஒப்படைத்தது. இந்திய பெருங்கடல் பகுதியில் ஆதேஷ் என்ற ரோந்து கப்பலில் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த இலங்கையை சேர்ந்த 6 மீனவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களின் … Read more

வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது சரி செய்யப்பட்டு 600 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்..!!

சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது சரி செய்யப்பட்டு 600 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 2-வது நிலையின் 2-வது அலகில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளை சேர்ந்த 3,295 நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் நடத்தி வருகின்றன: நிர்மலா சீதாராமன் பதில்

டெல்லி: வெளிநாடுகளை சேர்ந்த 3,295 நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் நடத்தி வருகின்றன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் உறுப்பினர் பாரிவேந்தரின் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். வெளிநாட்டு நிறுவனங்களின் 14,173 துணை நிறுவனங்களும் இந்தியாவில் தொழில் நடத்தி வருகின்றன என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

அதானி ஊழல் செய்தது குறித்து பேசினால் தேசத்துக்கு எதிராக பேசுவதாக கூறுகின்றனர்: மதுரையில் கே.எஸ்.அழகிரி பேட்டி

மதுரை: கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு தமிழகத்தை சீரழித்து வைத்திருந்தது என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.  தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  இந்தியாவில் ஜனநாயகத்தை மத்திய அரசு சிதைத்து வருகிறது என்று ராகுல்காந்தி பேசி உள்ளார். ஜனநாயக முறைப்பாடுகளை அவர் குற்றம் சாட்டவில்லை. சிறந்த இந்திய ஜனநாயகத்தை அவர்கள் பாழ்படுத்துகிறார்கள் என்று தெரிவித்து உள்ளார். இதில் எந்த தவறும் இல்லை. … Read more

மருத்துவ கழிவுகளை அகற்ற தாம்பரம் நகராட்சிக்கு ஆணை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: திருநீர்மலை நைனா ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ, ஆலை கழிவுகளை அகற்ற தாம்பரம் நகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கழிவுகளை அகற்றும் பணி தொடர்பாக விரிவான அறிக்கை தர தாம்பரம் மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலாளரின் இ-மெயில் மூலம் சல்மானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்: மும்பை போலீசார் வழக்குபதிவு

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து சல்மான் கானின் மேனேஜர் பாந்த்ரா காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 18ம் தேதி சல்மான் கானின் மேலாளரின் மின்னஞ்சலுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் தாதா கோல்டி பிரார், நடிகர் சல்மான் கானுடன் பேச … Read more

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் இருசக்கர வாகனம், சரக்கு வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் இருசக்கர வாகனம், சரக்கு வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அக்கா, தம்பி உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்ற கொடிவேரி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது அக்கா ஞானசவுந்தர்யா விபத்தில் உயிரிழந்துள்ளனர்.