பிரேசிலில் டெலிகிராம் செயலிக்கு தடை

ப்ரசிலியா: பிரேசிலில் டெலிகிராம் செயலிக்கு தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுத்த புகாரில் டெலிகிராம் செயலிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 50,000 மையங்களில் இன்று 25வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

சென்னை: 25வது மெகா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் 50,000 இடங்களில் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் இதுநாள் வரை 9.93 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மகிழ்ச்சியான நாடு பட்டியல் இந்தியா 3 இடம் முன்னேறியது

புதுடெல்லி: உலகத்தின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கடந்தாண்டை விட இந்தியா 3 இடங்கள் முன்னேறி இருக்கிறது. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் ஐநா. வெளியிட்டு வருகிறது. இதன்படி, ‘ஐநா உலக மகிழ்ச்சி அறிக்கை -2022’ நேற்று வெளியிடப்பட்டது. இதில், மொத்தம் 146 நாடுகள் இடம் பெற்றுள்ளன. வழக்கம்போல், இந்தாண்டும் உலகின் நம்பர் 1 மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையை பின்லாந்து பெற்றுள்ளது. தொடர்ந்து, 5வது ஆண்டாக முதலிடத்தை அது பெற்று வருகிறது,  இதற்கு அடுத்து 2, … Read more

மதுரை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

மதுரை: மேலூர் அருகே திருவாதவூரில் அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் அர்ச்சுனன் (20), ஸ்ரீகாந்த் (21)  என்ற இளைஞர்கள் உயிரிழந்தனர். போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப்பில் 17 அமைச்சர்களுடன் மான் அமைச்சரவை இன்று பதவியேற்பு

சண்டிகர்: பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளது. நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பஞ்சாப்பில் மொத்தமுள்ள 117 இடங்களில் 92 தொகுதிகளை கைப்பற்றி, ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனால், டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப்பிலும் அக்கட்சியின் ஆட்சி அமைந்துள்ளது. இக்கட்சியை சேர்ந்த பகவந்த் மான், கடந்த புதன்கிழமை முதல்வராக பதவியேற்றார். அன்றைய தினம் மானுடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.இந்நிலையில், பஞ்சாப் ஆளுநர் மாளிகையில் இன்று … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,093,107 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60. 93 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,093,107 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 467,755,956 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 399,043,601 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 62,7809 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஷ்மீர் பைல்ஸ் இயக்குனருக்கு ‘ஒய்’ பாதுகாப்பு

புதுடெல்லி: இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி, ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற சர்ச்சைக்குரிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். தீவிரவாதிகளின் பகிரங்க எச்சரிக்கை, தாக்குதல் காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் பாஜ.வினரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 11ம் தேதி வெளியான இந்த திரைப்படத்துக்கு ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், காஷ்மீர் பைல்ஸ் திரைப்பட இயக்குனருக்கு ஒய் … Read more

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான ரூ.300 டிக்கெட் 21 முதல் ஆன்லைனில் வெளியீடு: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான ₹300 தரிசன டிக்கெட் 21, 22, 23ம் தேதிகளில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான டிக்கெட்கள் வருகிற 21ம் தேதி(நாளை மறுதினம்) முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது. இதில் ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட்   21ம் தேதியும், மே மாதத்திற்கான டிக்கெட்  22ம் தேதியும், ஜூன் மாத … Read more

வீட்டிற்கே சென்று திடீர் சந்திப்பு; சோனியா காந்தி பதவி விலக கோரவில்லை: ஜி-23 குழுவின் தலைவர் குலாம் நபி அறிவிப்பு

புதுடெல்லி: ‘காங்கிரஸ் கட்சி தலைமை குறித்து எந்த கேள்விக்கும் இடமில்லை’ என சோனியாவை சந்தித்த பின் ஜி-23 குழுவின் தலைவரான குலாம் நபி ஆசாத் பேட்டி அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சி கடந்த 2014, 2019 ஆகிய இரு மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், பல மாநிலங்களிலும் ஆட்சியை பறிகொடுத்து வருகிறது. இதனால், கட்சி தலைமை குறித்து காங்கிரசில் அதிருப்தி ஏற்பட்டது. மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 தலைவர்கள் அதிருப்தி அணியில் சேர்ந்தனர். … Read more

பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் 2 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய ஹோலி: வண்ணப்பொடிகளை பூசி மகிழ்ந்த மக்கள்

சண்டிகர்: நாட்டில் பரவிய கொரோனா அச்சுறுத்தல், ஊரடங்கு, கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது, கொரோனா தொற்று வெகுவாக சரிந்து கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘வண்ணங்களின் பண்டிகை’ எனப்படும் ஹோலியை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நேற்று உற்சாகமாக கொண்டாடினர். 2 ஆண்டுகளுக்கு பின் கொண்டாடப்பட்டதால் வழக்கத்தை விடவும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா மாநிலங்களில் வெகுவிமரிசையாக ஹோலியை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்தந்த … Read more