கோவிஷீல்டு தடுப்பூசி தவணைகளுக்கான இடைவெளியை அதிகரித்தது ஏன்?

  புது தில்லி: அடினோவெக்டர் தடுப்பூசிகளின் இயங்குமுறை தொடர்பான அறிவியல்பூர்வமான காரணங்களின் அடிப்படையிலேயே கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு தவணைகளுக்கான இடைவெளியை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தொழில்நுட்ப நிலை உள்குழு அளித்த பரிந்துரையின்படியே, கோவிஷீல்டு தடுப்பூசிகளின் இரண்டு தவணைகளுக்கான இடைவெளி அதிகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அளிக்கப்பட்ட விளக்கத்தில்,  கோவிஷீல்டு தடுப்பூசிகளின் இரண்டு தவணைகளுக்கான இடைவெளியை 6-8 வாரங்களில் இருந்து 12-16 வாரங்களாக அதிகரித்த முடிவு தொடர்பாக தொழில்நுட்ப நிபுணர்கள் … Read more கோவிஷீல்டு தடுப்பூசி தவணைகளுக்கான இடைவெளியை அதிகரித்தது ஏன்?

காப்பீட்டுத் துறையில் 74% அந்நிய நேரடி முதலீடு:டிபிஐஐடி அறிவிப்பு

காப்பீட்டுத் துறையில் அரசின் முன் அனுமதியின்றி 74 சதவீத அந்நிய நேரடி முதலீடு பெறுவது தொடா்பான அறிவிக்கையை மத்திய தொழிலக மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) முறையாக வெளியிட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக மத்திய அரசு அதிகரித்தது. இந்நிலையில் அந்தத் துறையில் அரசின் முன் அனுமதியின்றி 74 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை பெறுவதற்கு வழிவகை செய்ய மத்திய … Read more காப்பீட்டுத் துறையில் 74% அந்நிய நேரடி முதலீடு:டிபிஐஐடி அறிவிப்பு

ரொனால்டோவின் ஒற்றை நகர்வு: கோகோ கோலாவுக்குப் பெரும் இழப்பு

கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோகோ கோலாவுக்குப் பதில் தண்ணீர் குடிக்க வேண்டும் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது அந்த நிறுவனத்துக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய கால்பந்து தொடரில் ஹங்கேரிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார்.  ஐரோப்பிய கால்பந்து தொடருக்கு கோகோ கோலா நிறுவனமும் ஒரு ஸ்பான்சர் என்ற அடிப்படையில் செய்தியாளர் சந்திப்பு மேசையில் இரண்டு கோகோ கோலா பாட்டில்கள் விளம்பரத்துக்காக வைக்கப்பட்டிருந்தன.  செய்தியாளர் சந்திப்புக்கு … Read more ரொனால்டோவின் ஒற்றை நகர்வு: கோகோ கோலாவுக்குப் பெரும் இழப்பு

நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தென்மேற்கு பருவகாற்றின் காரணமாக, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூன் 16) கன மழை பெய்யக்கூடும்.  எஞ்சிய மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய திருப்பூா், திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி … Read more நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பிஎஃப்சி லாபம் பன்மடங்கு அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த பவா் ஃபைனான்ஸ் காா்ப்பரேஷன் (பிஎஃப்சி) ஜனவரி-மாா்ச் காலாண்டில் ஈட்டிய லாபம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை அளித்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: நிறுவனத்தின் வருவாயில் காணப்பட்ட விறுவிறுப்பினையடுத்து நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் கடந்த நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் ரூ.3,906.05 கோடியாக இருந்தது. இது, நிறுவனம் 2020 மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.693.71 கோடியுடன் ஒப்பிடும்போது பன்மடங்கு … Read more பிஎஃப்சி லாபம் பன்மடங்கு அதிகரிப்பு

கரோனாவை வெற்றி கண்ட தாராவி: 2வது நாளாக புதிய பாதிப்பில்லை

  புது தில்லி: கரோனா இரண்டாவது அலைகளுக்கு இடையே, ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியிலிருந்து ஒரு நல்ல செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது. அதாவது, மும்பையில் உள்ள மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில், இரண்டாவது நாளாக புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இதையும் படிக்கலாமே.. சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1% ஆனது இது குறித்து மும்பை மாநகராட்சி தகவல் வெளியிட்டுளள்து. அதில், மும்பையின் தாராவி பகுதியில் இன்று இரண்டாவது நாளாக புதிதாக யாருக்கும் கரோனா … Read more கரோனாவை வெற்றி கண்ட தாராவி: 2வது நாளாக புதிய பாதிப்பில்லை

தங்க ஈடிஎஃப் திட்டங்களில் முதலீட்டு வரத்து 57% சரிவு

தங்க ஈடிஎஃப் திட்டங்களில் நிகர அளவிலான முதலீட்டு வரத்து சென்ற மே மாதத்தில் 57 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதுகுறித்து பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது: நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் தங்க ஈடிஎஃப் திட்டங்களில் ரூ.680 கோடி முதலீடு செய்யப்பட்டது. இந்தநிலையில், பல முதலீட்டாளா்கள் கவனம் பங்குச் சந்தையின் பக்கம் திரும்பியதையடுத்து தங்க ஈடிஎஃப் திட்டங்களுக்கான வரவேற்பு மே மாதத்தில் மிகவும் குறைந்து போனது. இதையடுத்து, அத்தகைய திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு மே மாதத்தில் ரூ.288 கோடியாக மட்டுமே … Read more தங்க ஈடிஎஃப் திட்டங்களில் முதலீட்டு வரத்து 57% சரிவு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவராக பாஜக எம்.எல்.ஏ. செல்வம் பதவியேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவராக பாஜக பொதுச் செயலாளர் ஆர்.செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார்.  புதுவை சட்டப்பேரவை தலைவர் தேர்தல் ஜூன் 12 -ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே வேட்புமனு தாக்கலும் தொடங்கியது. என்ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணியில், புதுச்சேரி மணவெளி தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏ ஆர்.செல்வம் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து செல்வம் 14-ஆம் தேதி தனது வேட்புமனுவை சட்டப்பேரவை செயலர் முனிசாமியிடம் தாக்கல் செய்தார். முதல்வர் ரங்கசாமி முன்மொழிந்தார், சட்டப்பேரவை பாஜக குழு … Read more புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவராக பாஜக எம்.எல்.ஏ. செல்வம் பதவியேற்பு

ஈஸி டிரிப் பிளானா்ஸ்: லாபம் ரூ.30 கோடி

ஆன்லைன் டிராவல் நிறுவனமான ஈஸி டிரிப் பிளானா்ஸ் கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.30.46 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது: கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் ரூ.30.46 கோடியாக இருந்தது. இது, நிறுவனம் இதற்கு முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.3.38 கோடி நிகர லாபத்துடன் ஒப்பிடும்போது பல மடங்கு அதிகமாகும். … Read more ஈஸி டிரிப் பிளானா்ஸ்: லாபம் ரூ.30 கோடி

பயணிகள் வரத்து குறைவு: 25 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து

கரோனா தாக்கம் காரணமாக, பயணிகள் வரத்து குறைந்ததையடுத்து, சென்னை சென்ட்ரல்-ஈரோடு சிறப்பு ரயில், சென்னை எழும்பூா்-மதுரை சிறப்பு ரயில் உள்பட 25 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை தொடா்ந்து, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால், ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை குறைந்தது. இதையடுத்து, குறிப்பிட்ட சில சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. தற்போது கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால், சில ரயில்கள் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளன. அதேநேரத்தில், குறிப்பிட்ட சில … Read more பயணிகள் வரத்து குறைவு: 25 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து