தில்லியில் கூடுதல் தளர்வுகள்: சந்தைகள், உணவகங்களுக்கு அனுமதி 

தில்லியில் கரோன பரவல் குறைந்ததை தொடர்ந்து கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தில்லியில் கரோனா தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த ஏப்.19 ஆம் தேதி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் 300க்கும் கீழ் குறைந்ததைத் தொடர்ந்து நாளை முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறுகையில், நாளை காலை முதல் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதிக்கப்படுகின்றன. இருப்பினும், சிலவற்றிற்கு கட்டுப்பாடுகள் தொடரும். சந்தைகள் மற்றும் பெரு வணிக வளாகங்கள் காலை 10 … Read more தில்லியில் கூடுதல் தளர்வுகள்: சந்தைகள், உணவகங்களுக்கு அனுமதி 

6 தொகுதிகளில் மட்டுமே பாமகவுக்கு செல்வாக்கு: புகழேந்தி

6 தொகுதிகளில் மட்டுமே பாமகவுக்கு செல்வாக்கு உள்ளது அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், போளூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 தொகுதிகளில் மட்டுமே பாமகவுக்கு செல்வாக்கு உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் பொருட்டாக மதிப்பதில்லை என பாமகவின் அன்புமணி தெரிவித்திருக்கிறார். அவர் பேசுவது பற்றி கவலையில்லை. ஆனால், ஓபிஎஸ் கையெழுத்து போட்டதால்தான் இன்று அன்புமணி எம்.பி.,ஆக உள்ளார்.  தவறாக ஒரு கட்சியை பேசக்கூடாது. 10 தொகுதியை … Read more 6 தொகுதிகளில் மட்டுமே பாமகவுக்கு செல்வாக்கு: புகழேந்தி

சாலை விபத்து: உயிருக்கு போராடும் கன்னட நடிகர்

  பெங்களூரு: பெங்களூரு: சாலையில் விபத்துக்குள்ளான கன்னட நடிகரான சஞ்சாரி விஜய், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது சகோதரர் சித்திஸ் குமார் தெரிவித்துள்ளார். தேசிய திரைப்பட விருது பெற்ற கன்னட நடிகரான சஞ்சாரி விஜய், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தீடீரென வாகனத்தில் இருந்து  சறுக்கி விழுந்ததில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், அடுத்த 48 மணி நேரம் அவருக்கு மிகவும் … Read more சாலை விபத்து: உயிருக்கு போராடும் கன்னட நடிகர்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் பாஜக நடத்தாதது ஏன்?- செந்தில் பாலாஜி கேள்வி

தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு போராட்டம் நடத்தும் பாஜக அரசு, பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தாதது ஏன் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாட்டில் உச்சகட்டமாக 36 ஆயிரம் பேருக்கு தொற்றிருந்தது. ஆனால் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை காரணமாக தற்போது தொற்றூ பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் கரோனா … Read more பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் பாஜக நடத்தாதது ஏன்?- செந்தில் பாலாஜி கேள்வி

ஹாசன் விமான நிலையத்துக்கு விரைவில் அடிக்கல்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா

ஹாசன் விமான நிலையத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், ஹாசன் மற்றும் சிவமோகா மாவட்டங்களுக்குச் சென்று வளர்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா சூழ்நிலை குறித்து ஆய்வு செய்தேன். முன்னாள் பிரதமர் தேவெகௌடாவும் நானும் ஹாசன் விமான நிலையத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்ட இருக்கிறோம்.  தளர்வுகளுக்குப் பின் மாநிலத்துக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள சுகாதாரத்துறையினரை அறிவுறுத்தியுள்ளேன் என்றார்.  ஹாசன், விஜயாப்புரா, கார்வாரில் புதிய விமான … Read more ஹாசன் விமான நிலையத்துக்கு விரைவில் அடிக்கல்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா

சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகார் குறித்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.  சென்னை கே.கே.நகர் தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனைத் தொடர்ந்து பல்வேறு பள்ளி மாணவிகள் பாலியல் புகார்களை பதிவிட்டு வருகின்றனர். அதன்படி தமிழக காவல்துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது.  இந்நிலையில், சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதனடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் … Read more சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள கருவடத் தெருவில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அறிவித்ததை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் கடந்த 2017 -ம் ஆண்டு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, நெடுவாசல் உள்ளிட்ட  கிராம மக்கள் பல்வேறு கட்டங்களாக 200 நாட்களுக்கு மேல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது என மத்திய, மாநில அரசுகள் … Read more மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

இந்திய அணியின் பயிற்சி ஆட்டம்: 2-ம் நாள் ஆட்ட விடியோ வெளியீடு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான இந்திய அணியின் பயிற்சி ஆட்டத்தின் 2-ம் நாள் ஆட்டநேர விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்காக இந்திய அணி சௌதாம்ப்டனில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக இந்திய அணியே விராட் கோலி தலைமையிலும் கேஎல் ராகுல் தலைமையிலும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதன் 2-ம் நாள் ஆட்டத்தில் ஷுப்மன் கில் சிறப்பான தொடக்கம் தந்து 135 பந்துகளில் 85 ரன் … Read more இந்திய அணியின் பயிற்சி ஆட்டம்: 2-ம் நாள் ஆட்ட விடியோ வெளியீடு

காரைக்குடி அருகே கார் மோதி காவலர் பலி

காரைக்குடி: காரைக்குடி அருகே காவல் நிலைய பணிக்குச் சென்ற காவலரின் இரண்டு சக்கர வாகனம் மீது கார் மோதி ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் காவலர் சம்பவ இடத்திலேயே உயிழந்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (29). இவர் காரைக்குடி அருகே சாக்கோட்டை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். ராஜா தனது ஊரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டு சக்கர வாகனத்தில் காவல் நிலைய பணிக்குச் சென்றார். அப்போது ஆவுடைப் பொய்கை என்ற … Read more காரைக்குடி அருகே கார் மோதி காவலர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,303 பேர் கரோனாவுக்கு பலி

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 3,303 பேர் பலியாகியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 80,834 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,94,39,989 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,32,062 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3,303 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை … Read more நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,303 பேர் கரோனாவுக்கு பலி