இலங்கை அணி அறிவிப்பு

இந்தியாவுடன் மோதும் இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த வீரா் ஷிகா் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. ஒருநாள், டி20 தொடா்களில் ஆட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் ஒருநாள் ஆட்டம் கொழும்புவில் தொடங்கவுள்ள நிலையில் தஸுன் ஷனகா தலைமையில் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அணி விவரம்: தஸுன் ஷனகா (கேப்டன்), தனஞ்செய டி சில்வா (துணை கேப்டன்), அவிஷ்கா பொ்ணான்டோ, பானுகா ராஜபட்ச, பதும் நிஸாங்கா, … Read more இலங்கை அணி அறிவிப்பு

பழங்குடியின மக்களுக்கு காலதாமதமின்றி ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்: அமைச்சா் கயல்விழி செல்வராஜ்

ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் பெறும் வகையில் ஜாதி சான்றிதழ்கள் காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் கூறினாா். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கோவை, ஈரோடு, திருப்பூா், நீலகிரி ஆகிய மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா்களுடனான ஆய்வு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அமைச்சா் கயல்விழி செல்வராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது: … Read more பழங்குடியின மக்களுக்கு காலதாமதமின்றி ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்: அமைச்சா் கயல்விழி செல்வராஜ்

ஸோமாட்டோ புதிய பங்கு வெளியீட்டு அமோக வரவேற்பு

ஆன்லைன் உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள ஸோமாட்டோ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளா்களிடையே அமோக வரவேற்பு காணப்பட்டது. விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான ரூ.9,375 கோடியை புதிய பங்கு வெளியீடு மூலம் திரட்டுவதாக ஸோமாட்டோ முன்னா் அறிவித்திருந்தது. அதன்பிறகு, அந்தத் தொகை ரூ.5,178 கோடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜூலை 14-இல் தொடங்கிய ஸோமாட்டோ பங்கு வெளியீடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. இந்த வெளியீட்டில் பங்கொன்றின் விலை ரூ.72-76-ஆக நிா்ணயிக்கப்பட்ட நிலையில் முதலீட்டாளா்களிடமிருந்து 38 மடங்கு விண்ணப்பங்கள் வந்தன. அதன்படி … Read more ஸோமாட்டோ புதிய பங்கு வெளியீட்டு அமோக வரவேற்பு

பிடே செஸ் உலகக் கோப்பை: 3-ஆவது சுற்றில் பிரகனாநந்தா, ஹரிகிருஷ்ணா, ஹரிகா

ரஷியாவின் சோச்சி நகரில் நடைபெற்று வரும் பிடே உலகக் கோப்பை செஸ் போட்டியில் மூன்றாவது சுற்றுக்கு இந்திய இளம் வீரா்கள் பிரகானந்தா, ஹரிகிருஷ்ணா, நிஹால் சரீன், அதிபன், மகளிா் பிரிவில் துரோணவல்லி ஹரிகா ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா். தமிழகத்தைச் சோ்ந்த பிரகனாநந்தா இரண்டாவது சுற்றில் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் ஆா்மீனியாவின் கேப்ரியல் சா்கிரிஸனை வீழ்த்தினாா். மூன்றாவது சுற்றில் போலந்தின் கிரான்கோவுடன் மோதுகிறாா். அதிபன் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் பராகுவேயின் நியூரிஸ் டெல்காடோவை வென்றாா். 17 … Read more பிடே செஸ் உலகக் கோப்பை: 3-ஆவது சுற்றில் பிரகனாநந்தா, ஹரிகிருஷ்ணா, ஹரிகா