டோக்கியோவில் தொடங்கியது ஒலிம்பிக் திருவிழா

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான நான்கரை மணிநேர தொடக்கவிழா பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகின்றது. முன்னேறி செல்வோம், உணர்வால் இணைவோம் என்ற தலைப்பின் கீழ் துவங்கியுள்ள தொடக்கவிழாவை ஜப்பான் நாட்டு பேரரசர் நருஹிடோ தொடங்கி வைத்தார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளின் வீரர்கள் அணிவகுப்பின் போது அனைத்து வீரர், வீராங்கனைகளும் பங்குபெற அளிக்கப்படவில்லை. மேலும், துவக்க விழாவில் மிக முக்கிய விருந்தினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 33 போட்டிகளில் 339 தங்கப் பதக்கங்களுக்காக 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்குபெற்றுள்ளனர். … Read more டோக்கியோவில் தொடங்கியது ஒலிம்பிக் திருவிழா

உலகை விட்டு சென்ற வயதான மாணவி

கேரள கொல்லம் நகரில் உள்ள பிரகுலத்தை சேர்ந்தவர் பாகீரதி அம்மா. இவருக்கு வயது 107. உலகின் வயதான மாணவியான இவர் இன்று காலமானார். வயது மதிர்ந்த நிலையிலும், கற்று கொள்வதில் ஆர்வம் மிகுந்த அவரின் மூலம் கல்வியறிவு குறித்த வழிப்புணர்வை ஏற்படுத்த கேரள அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுவந்தது. இதனிடையே, இரு கனவுகளை நிறைவேற்ற முடியாமலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது. 7ஆம் வகுப்புக்கு நிகரான தேர்வில் வெற்றிபெற்று பத்தாம் வகுப்பு தேர்வை எழுத வேண்டும் என்பதையும் நடிகர் … Read more உலகை விட்டு சென்ற வயதான மாணவி

மைக் மற்றும் ஸ்பீக்கருடன் எல்ஜி அறிமுகப்படுத்தியுள்ள முகக்கவசம் – வேறு என்ன சிறப்புகள் ?

பேசுவதை இலகுவாக்க மைக் மற்றும் ஸ்பீக்கருடன் முகக்கவசத்தை எல்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.  கரோனா தொற்று பரவலைத் தடுப்பதில் முகக்கவசம்  முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் முகக்கவசம் அணிந்திருக்கும்போது ஒரு சிலருக்கு பேசுவது மற்றும் மூச்சு விடுவது சிரமமாக இருக்கும். ஆனால் இதற்காக முகக்கவசம் அணிவதைத் தவிர்க்க முடியாது.  இந்த சிக்கலைத் தீர்க்க எல்ஜி நிறுவனம் ஒரு புதிய முகக்கவசத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. காற்றை சுத்தப்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த முகக்கவசத்தில் நாம் பேசுவது வெளியில் கேட்கும் வகையில் … Read more மைக் மற்றும் ஸ்பீக்கருடன் எல்ஜி அறிமுகப்படுத்தியுள்ள முகக்கவசம் – வேறு என்ன சிறப்புகள் ?

ஒலிம்பிக் நினைவலைகள்…

1988 சியோல் ஒலிம்பிக்ஸ் (ஸ்டெஃபி கிராஃபின் ‘கோல்டன் கிராண்ட்ஸ்லாம்’) ஒலிம்பிக்ஸ் போட்டியில் 64 ஆண்டுகளுக்குப் பிறகு டென்னிஸ் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டது. இந்த ஒலிம்பிக்ஸில்தான் ஜொ்மனி வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப் தங்கம் வென்று, ‘கோல்டன் கிராண்ட்ஸ்லாம்’ பெற்ற ஒரே டென்னிஸ் போட்டியாளா் என்ற பெருமையை பெற்றாா். ஊக்கமருந்து பயன்படுத்தியதாக 10 போட்டியாளா்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 7 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை ஸ்வீடனைச் சோ்ந்த கொ்ஸ்டின் பால்ம் பெற்றாா். ஆடவருக்கான 100 மீ ஓட்டத்தில் … Read more ஒலிம்பிக் நினைவலைகள்…

தலிபான்களை பின்னுக்கு தள்ள மீண்டும் களமிறங்கிய அமெரிக்கா

சமீபத்தில், ஆப்கன் அரசு படைகளுக்கு ஆதரவாக தலிபான்கள் மீது விமான படை தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகிவரும் நிலையில், தலிபான்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்துவந்தது. இந்நிலையில், ஆப்கன் அரசு படைகளுக்கு ஆதரவாக தலிபான்களை பின்னுக்கு தள்ள சமீபத்தில் விமான படை தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு துறையின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், “கடந்த சில நாள்களாக, ஆப்கன் தேசிய பாதுகாப்பு படைக்கு … Read more தலிபான்களை பின்னுக்கு தள்ள மீண்டும் களமிறங்கிய அமெரிக்கா

இந்தியாவில் வெளியாகும் ' ரியல் மீ புக் ' மடிக்கணினி

 ஸ்மார்ட்போன் தயாரிப்பில் தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்திருக்கிற ‘ரியல் மீ ‘ நிறுவனம் அடுத்ததாக மடிக்கணினியை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வந்த நிலையில் தற்போது அதன் புதிய மடிக்கணினியின் விற்பனையை அடுத்த மாதம்  இந்தியாவில் தொடங்க உள்ளது.  ‘ ரியல் மீ புக் ‘ என பெயர் வைக்கப்பட்டிருக்கிற இந்த மடிக்கணினி  நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கியிருக்கிறது. 14 இன்ச் திரையுடன் நவீன ஆடியோ வசதிகளுடன் வெளியாக இருக்கும் இந்த மடிக்கணினியை  குறைந்த விலையில் வழங்கவும் முடிவு செய்திருப்பதாக … Read more இந்தியாவில் வெளியாகும் ' ரியல் மீ புக் ' மடிக்கணினி

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்', சிவகுமார் படத் தலைப்பா ? – ரசிகர்கள் பகிரும் பழைய போஸ்டர்

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ தலைப்பில், சிவகுமார் நடித்து 40 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு படம் வெளியாகியிருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது. மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் என்பதால் நள்ளிரவு 12 மணிக்கு வெளியான இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.  இந்த நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ … Read more சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்', சிவகுமார் படத் தலைப்பா ? – ரசிகர்கள் பகிரும் பழைய போஸ்டர்

வாஷிங்டனும் வெளியேறுகிறாா்

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்த வாஷிங்டன் சுந்தா், காயம் காரணமாக அந்தத் தொடரில் இருந்து வெளியேறுகிறாா். காயம் காரணமாக இவ்வாறு இந்திய அணியிலிருந்து வெளியேறும் 3-ஆவது வீரா் இவா். முன்னதாக, ஷுப்மன் கில், அவேஷ் கான் ஆகியோா் அவ்வாறு தொடரிலிருந்து வெளியேறினா். கவுன்டி லெவன் அணிக்கு எதிரான வாா்ம் அப் ஆட்டத்தின்போது முகமது சிராஜ் வீசிய வேகப்பந்து வாஷிங்டன் சுந்தரின் விரலில் பட்டதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவா் மீண்டும் பந்துவீசும் நிலைக்கு … Read more வாஷிங்டனும் வெளியேறுகிறாா்

அமித் ஷா பதவி விலக வேண்டும்; நீதி விசாரணை வேண்டும்: 'பெகாஸஸ்' குறித்து ராகுல் காந்தி

பெகாஸஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  இஸ்ரேலின் ‘பெகாஸஸ்’ உளவு மென்பொருள் மூலமாக நாட்டின் முக்கிய பிரமுகர்கள் உளவு பார்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள், பெகாஸஸ் மென்பொருள் மூலமாக உளவு பார்க்கப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   இதையடுத்து தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் … Read more அமித் ஷா பதவி விலக வேண்டும்; நீதி விசாரணை வேண்டும்: 'பெகாஸஸ்' குறித்து ராகுல் காந்தி

வெளிநாட்டு நண்பர்களுடன் பேசுவதில் சிக்கலா? அசத்தலான வசதியுடன் வரும் இன்ஸ்டாகிராம்

இளைஞர்களை கவர்ந்திருக்கும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாட்டு/மாநில நண்பர்களுடன் உரையாடுவதில் இருக்கும் சிக்கலை அசத்தலான வசதியின் மூலம் சரிப்படுத்தியுள்ளது. மற்ற மொழி நண்பர்களின் ஸ்டோரி போஸ்ட்டை அறிந்து கொள்ள மொழி மாற்ற வசதியை ஏற்படுத்தியுள்ளது. பதிவுகள் வேறு மொழியில் இருந்தால் அதன் மேலிருந்து இடது புறத்தில் மொழி மாற்றத்திற்கான வசதி இருக்கும், அதை கிளிக் செய்தவன் மூலம் அவர்களின் பதிவுகளை சொந்த மொழியில் தெரிந்து கொள்ளலாம். உலகம் முழுவதும் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் … Read more வெளிநாட்டு நண்பர்களுடன் பேசுவதில் சிக்கலா? அசத்தலான வசதியுடன் வரும் இன்ஸ்டாகிராம்