"அம்மா உணவகம் அமைக்கப்படும்" – பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

காங்டாக், சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரேயொரு நாடாளுமன்ற தொகுதிக்கு வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மாநில கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் கூட்டணி அரசு அமைத்திருந்த பா.ஜனதா, இந்த தேர்தலில் தனித்து களமிறங்கி இருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும தீவிர பிரசாரத்தில் பா.ஜனதா ஈடுபட்டு உள்ளது. இதற்கு மத்தியில் சட்டசபை தேர்தலுக்காக பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. 74 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையை கட்சியின் தேசிய தலைவர் … Read more

'ரஷீத் கானைப் போன்ற வீரர் அணியில் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள்' – சுப்மன் கில்

ஜெய்ப்பூர், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இதையடுத்து 3-வது வெற்றியை சுவைத்த பிறகு குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில், “கடைசி 3 ஓவர்களில் 45 ரன்கள் தேவை என்று கொண்டு வந்து விட்டால் இலக்கை நிச்சயம் எட்டி விடலாம் என்பதுதான் எங்களது திட்டமாக இருந்தது. களத்தில் இருப்பவர்களில் யாராவது ஒரு … Read more

வெப்ப அலை காரணமாக 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு – ஐ.நா. எச்சரிக்கை

கடும் வெப்ப அலை காரணமாக கிழக்கு ஆசிய நாடுகளில் 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என யுனிசெப் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் சுமார் 24 கோடி குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் இருதய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளிலும், பள்ளிகளிலும் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 29 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பயணியர் விடுதி பங்களா அருகில் வரை வரிசையில் காத்திருந்தனர். நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 6 மணிவரை 35 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கு 18 மணிநேரம் ஆனது. நேற்று முன்தினம் 65 ஆயிரத்து 570 பக்தர்கள் சாமி … Read more

பாரீஸ் ஒலிம்பிக்கில் தடகளத்தில் தங்கம் வெல்வோருக்கு ரூ.41½ லட்சம் பரிசு – உலக சம்மேளனம் அறிவிப்பு

மொனாக்கோ, 33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை- ஆகஸ்டு மாதம் நடக்கிறது. இந்த போட்டியில் தடகளத்தில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ 41½ லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று உலக தடகள சம்மேளனம் நேற்று அறிவித்தது. ஒலிம்பிக் போட்டிக்கு பரிசுத்தொகையை அறிவித்த முதல் சர்வதேச விளையாட்டு சம்மேளனம் இது தான். இந்த வகையில் 48 தடகள பிரிவில் தங்கம் வெல்வோருக்கு இந்த தொகை கிடைக்கும். 4 பேர் கொண்ட தொடர் … Read more

'கடவுள் துகள்' கண்டறிந்த விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் மரணம்

லண்டன், இங்கிலாந்தை சேர்ந்த பிரபல வானியல் மற்றும் தத்துவார்த்த இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ் (வயது 94). வானியல் ஆராய்ச்சியில் இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. பெரு வெடிப்பின்போது அணுக்கள் ஒன்றோடு ஒன்று இணைவதற்கு காரணியாக அமைந்த பொருளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மூத்த விஞ்ஞானிகளில் ஒருவராக இருந்தார். ஆராய்ச்சி முடிவில் அணுக்களின் ஒட்டுப்பொருளானது 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறியப்பட்டன. 12-வது துகளை விஞ்ஞானி ஹிக்ஸ் கண்டுபிடித்தார். அது ‘ஹிக்ஸ் போசன்’ … Read more

இந்தியாவை உடைக்க வடக்கு-தெற்கு பிரிவினையை காங்கிரஸ் உருவாக்குகிறது – அமித்ஷா

கயா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று பீகார் மாநிலத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது காங்கிரஸ் கட்சியையும், இந்தியா கூட்டணியையும் அவர் கடுமையாக சாடினார். கயா மாவட்டத்தின் குராரு பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியும், ராஷ்ட்ரீய ஜனதாதளமும் திருப்திபடுத்தும் அரசியலில் ஈடுபட்டு உள்ளன. அதனால்தான் காங்கிரசுக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் 370-வது சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து வருகின்றன. இந்தியாவை உடைக்க வடக்கு-தெற்கு பிரிவினையை காங்கிரஸ் கட்சி உருவாக்குகிறது. அதன் … Read more

2027-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு தென்ஆப்பிரிக்காவில் 8 இடங்கள் தேர்வு

ஜோகன்னஸ்பர்க், 14 அணிகள் பங்கேற்கும் 14-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை (50 ஓவர்) 2027-ம் ஆண்டில் ஆப்பிரிக்க நாடுகளான தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமிபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. பெரும்பாலான ஆட்டங்கள் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள நிலையில் அங்கு போட்டிக்கான இடங்களை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. இதன்படி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்டரர்ஸ், பிரிட்டோரியா செஞ்சூரியன் பார்க், டர்பனில் உள்ள கிங்ஸ்ஸ்மீட், கெபஹாவின் செயின்ட் ஜார்ஜ்ஸ் பார்க், பார்லில் உள்ள போலன்ட் பார்க், கேப்டவுனின் … Read more

ஈரானை நேரடியாக தாக்குவோம்.. இஸ்ரேல் மிரட்டல்

ஜெருசலேம்: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிழல் யுத்தம் நடந்து வருகிறது. இப்போது இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா (லெபனான்) அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. இதுதவிர ஏமனின் ஹவுதி கிளர்ச்சி குழு மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சி குழுவும் இஸ்ரேலை குறிவைக்கின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் தாக்குதல் நடத்துகிறது. இந்நிலையில், சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் … Read more

மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆவணப்படம்: தேவாலயத்தில் திரையிடப்பட்டதால் பரபரப்பு

பெரும்பாவூர், கேரளா ஸ்டோரிஸ் திரைப்படம் கேரளாவில் திரையிடப்படுவதற்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இடுக்கி மறை மாவட்டத்தில் உள்ள ஜீரோ மலபார் தேவாலயத்தில் பங்கு தந்தை ஜீன்ஸ் காரக்கட் என்பவர் மூலம் கேரளா ஸ்டோரிஸ் திரைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக விமர்சனம் எழுந்ததால், இந்த படத்தை திரையிடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. இதை மீறி கண்ணூர் மறைமாவட்டத்தில் உள்ள செம்பண்தொட்டி தேவாலயத்தில் கேரளா ஸ்டோரிஸ் படம் திரையிடப்பட்டது. இதேபோல் எர்ணாகுளத்தில் உள்ள சில தேவாலயங்களில் … Read more