பார்முக்கு திரும்ப விராட் கோலியை பின்பற்றுங்கள் – பாபர் அசாமுக்கு பாக். முன்னாள் வீரர் அறிவுரை..!

கராச்சி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் சமீப காலங்களில் ரன்கள் குவிக்க முடியாமல் திணறி வருகிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆன புதிதில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் தற்போது விரைவில் ஆட்டமிழந்து பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்து வருகிறார். மேலும் கடந்த வருடம் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்த தோல்விகளுக்கு … Read more

ரன்வேயில் திடீரென தீப்பற்றி எரிந்த விமானம்.. டோக்கியோ விமான நிலையத்தில் பரபரப்பு

டோக்கியோ: ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. ரன்வேயில் தரையிறங்கும்போது, கடலோர காவல்படையின் விமானம் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் துணையுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான விமானத்தில் சுமார் 400 பயணிகள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த … Read more

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: வட மாநிலங்களில் லாரி டிரைவர்கள் போராட்டம்

புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்ஷ்யா, பாரதிய நகரிக் சுரக்ஷா ஆகிய 3 புதிய சட்டங்கள் சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாக்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். அதனைத்தொடர்ந்து, அந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. ஆங்கிலேயர் காலத்து சட்டங்களுக்கு … Read more

காணாமல் போன பை… உருக்கமான கோரிக்கை வைத்த டேவிட் வார்னர்..!

சிட்னி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ளன. அந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியுடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக … Read more

செய்தியாளர்கள் சந்திப்பின்போது எதிர்க்கட்சி தலைவர் மீது கத்திக்குத்து தாக்குதல் – தென்கொரியாவில் பரபரப்பு

சியோல், தென்கொரியா நாட்டின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தலைவர் லி ஜி மியங். இவர் இன்று காலை அந்நாட்டின் புசன் மாகாணம் ஹடியொக் தீவில் புதிதாக கட்டப்பட்டுவரும் விமான நிலையத்தை பார்வையிட்டார். அதன்பின்னர், லி ஜி மியங் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு லி பதிலளித்துக்கொண்டிருந்தார். அப்போது, லி ஜி மியங்கின் ஆதரவாளர்போல் வந்த நபர் ஆட்டோகிராப் (கையெழுத்து) வாங்குவதுபோல் அவரை நெருங்கியுள்ளார். திடீரென அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் எதிர்க்கட்சி தலைவர் … Read more

நாடாளுமன்ற தேர்தலில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு: பா.ஜ.க. வியூகம்

புதுடெல்லி: 2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பா.ஜ.க., 3வது முறையாக ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் இன்று பா.ஜ.க. மூத்த தலைவர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் சுனில் பன்சால், மத்திய மந்திரிகள் பூபேந்தர் யாதவ், அஷ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா … Read more

யுனைடெட் கோப்பை டென்னிஸ்; நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சின் செர்பிய அணி காலிறுதிக்கு முன்னேற்றம்..!

பெர்த், யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் தனது நாடான செர்பிய அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார். இதில் இன்று நடைபெற்ற போட்டியில் செர்பியா மற்றும் செக்குடியரசு அணிகள் மோதின. இந்த போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீராங்கனை ஒல்கா டேனிலோவிக் தோல்வியடைந்த … Read more

தன்னை கடித்த எலியை பழிவாங்கிய கல்லூரி மாணவி

பீஜிங், சீனாவில் 18 வயதான கல்லூரி மாணவி ஒருவர் அங்குள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்த நிலையில், அந்த மாணவியை எதிர்பாராதவிதமாக எலி ஒன்று கடித்துள்ளது. அந்த மாணவியின் விரலில் எலி கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் வலியால் துடித்த அந்த மாணவி ஆத்திரத்தில் அந்த எலியை பழிவாங்க நினைத்துள்ளார். இதனால் உடனடியாக தன்னை கடித்த எலியை பிடித்து வெறித்தனமாக கடித்து வைத்துள்ளார். அதன் கழுத்து பகுதியில் பலமாக கடித்து தனது கோபத்தை தீர்த்துக்கொண்டார். அந்த மாணவியின் … Read more

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரம் – சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் மீண்டும் முறையீடு

புதுடெல்லி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை ஆகஸ்ட் 22, 23-ந்தேதிகளில் நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு ஜூன் 2-ந்தேதி தெரிவித்திருந்தது. இதனிடையே அரசமைப்புச் சட்டம் 370-வது பிரிவு ரத்து குறித்த ரிட் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க தொடங்கியதால், வேதாந்தா மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் சார்பில் இன்று மீண்டும் முறையிடப்பட்டது. இதனை … Read more

மெஸ்ஸியின் ஜெர்சி நம்பர் 10-க்கு ஓய்வு அறிவிப்பு..!

புவெனஸ் ஐரிஸ், கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான மெஸ்ஸியின் ஜெர்சி நம்பர் 10-க்கு அர்ஜென்டினா கால்பந்து வாரியம் ஓய்வு அறிவித்துள்ளது. அர்ஜென்டினா அணியில் இருந்து மெஸ்ஸி ஓய்வு பெற்ற பிறகு இந்த ஜெர்சி நம்பரை யாரும் பயன்படுத்த முடியாது. இது அவருக்கு நாங்கள் அளிக்கும் கவுரவம் என அர்ஜென்டினா கால்பந்து வாரியத்தின் தலைவர் கிளாடியோ டாபியா தெரிவித்துள்ளார். கத்தாரில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா … Read more