அணியின் நலன் கருதி நிச்சயம் அதை செய்வார் – எம்.எஸ். தோனி குறித்து ஆஸி. முன்னாள் கேப்டன் கருத்து

புதுடெல்லி, ஐ.பி.எல். தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 போட்டிகளில் விளையாடி அதில் 2 வெற்றிகள் மற்றும் 1 தோல்வி கண்டுள்ளது. இந்த 3 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்சின் மூத்த வீரர் தோனிக்கு, முதல் இரு ஆட்டங்களில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் டெல்லிக்கு எதிராக முதல் முறையாக களம் கண்ட அவர் 16 பந்தில் 37 ரன் விளாசி அசத்தினார் 42 வயதிலும் அவரது பேட்டிங் ஜாலம் ரசிகர்களை குதூகலப்படுத்தியது. … Read more

காசாவின் ஷிபா மருத்துவமனையில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறின

ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா முனையில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் படைகள், காசாவின் வடக்கு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். வான் தாக்குதல், தரைவழி தாக்குதல், கடல் வழி தாக்குதல் என மும்முனை தாக்குதல்களில் 32,845 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் படையெடுப்பு காரணமாக இடம்பெயர்ந்த பல லட்சம் மக்கள், தெற்கு முனையில் உள்ள ரபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை வெளியேற்றிவிட்டு தாக்குதலைத் தொடங்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் தங்களின் … Read more

பேட்டிங் வரிசையில் 8-வது இடம் அவருக்கானதல்ல – தோனி குறித்து இந்திய முன்னாள் வீரர் கருத்து

புதுடெல்லி, நடப்பு ஐ.பி.எல். தொடரில் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய 3-வது போட்டியில் டெல்லியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஆனால் அந்த தோல்வியை மறக்கும் அளவுக்கு தோனி பேட்டிங் செய்த விதம் சென்னை ரசிகர்களை கொண்டாட வைத்தது. ஏனெனில் விசாகப்பட்டினத்தில் நடந்த அப்போட்டியில் 192 ரன்களை துரத்திய சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் 1, ரச்சின் ரவீந்திரா 3, சமீர் ரிஸ்வி 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் 8-வது வரிசையில் களமிறங்கிய … Read more

காங்கிரசுக்கு மேலும் ரூ.1,745 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சி கடந்த 2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாக கூறி, அந்த கட்சியின் 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது. மேலும் அபராதமாக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.135 கோடியை வருமான வரித்துறை எடுத்துக்கொண்டது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்தது. அதனை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனிடையே கடந்த 2017-2018, 2018-2019, 2019-2020, 2020-2021 ஆண்டுகள் வரையிலான … Read more

ஒரே நேரத்தில் 23 செயற்கைக்கோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

வாஷிங்டன், விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் பலவும் போட்டிப்போட்டு வருகின்றன. அதன்படி அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமும் இந்த போட்டியில் இணைந்துள்ளது. இந்த நிறுவனம் சார்பில் ஒரே நேரத்தில் 23 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன. இவை வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதற்காக புளோரிடாவின் கேப் கனாவெரல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 வகை ராக்கெட் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் நம்பமுடியாத அளவுக்கு அதிவேக பிராட்பேண்ட் இணையத்தை வழங்கும் என … Read more

ஆந்திராவில் மகளிருக்கு ரூ.1 லட்சம் அறிவிப்பு: தேர்தல் வாக்குறுதியை அறிவித்த காங்கிரஸ்

அமராவதி, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஆந்திராவில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும் மாநில காங்கிரஸ் கட்சி தலைவரான ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும். மகளிர் உரிமை தொகை திட்டமாக ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 50 சதவீதமாக உயர்த்தப்படும். மழலையர் கல்வி முதல் … Read more

என்னுடைய மிகப்பெரிய இலக்கு அதுதான் – ஆட்ட நாயகன் கலீல் அகமது பேட்டி

விசாகப்பட்டினம், ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி தோற்கடித்தது. விசாகப்பட்டினத்தில் நடந்த அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 192 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத்தொடர்ந்து சேசிங் செய்த சென்னை 20 ஓவரில் 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் காரணமாக 2 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லிக்கு அதிகபட்சமாக முகேஷ் குமார் 3, கலீல் அகமது … Read more

அமெரிக்காவில் வணிக வளாகம் அருகே துப்பாக்கி சூடு- 7 பேர் காயம்

இண்டியானாபோலிஸ்: அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் நேற்று நள்ளிரவில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள வணிக வளாகத்திற்கு வெளியே இந்த சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு, ரோந்து போலீசார் அங்கு விரைந்தனர். அதற்குள் துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் தப்பி சென்றுவிட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த தாக்குதலில் 7 இளைஞர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களின் வயது 12 முதல் 17 … Read more

'கியூட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

புதுடெல்லி, புதிய கல்வி கொள்கையின்படி மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளின் சேர்க்கைக்கு ‘கியூட்’ என்னும் பல்கலைக்கழகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இளங்கலை பட்டப்படிப்புக்கான கியூட் தேர்வுக்கான விண்ணப்பதிவு கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. இந்தநிலையில் கியூட் தேர்வுக்கான விண்ணப்பதிவை வருகிற 5-ந்தேதிவரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த நுழைவுத்தேர்வு மே மாதம் 15-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தினத்தந்தி Related Tags : கியூட் … Read more

இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் முதல் அணியாக சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

புதுடெல்லி, ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்த நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடரில் இதுவரை அதிகபட்சமாக மும்பை மற்றும் சென்னை அணிகள் தலா … Read more