அதர்வாவுக்கு ஜூனியர் கேப்டன் என்று பெயரிட்ட சின்னி ஜெயந்த்.. ஏன் தெரியுமா!

சென்னை : நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ட்ரிகர் படம் வரும் 23ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் அவருடன் சின்னி ஜெயந்த், அருண் பாண்டியன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். சாம் ஆன்டன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சுருதி நல்லப்பா தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதர்வாவின் ட்ரிகர் படம் நடிகர் முரளியின் மகனான அதர்வா, பானா காத்தாடி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர். முதல் படத்திலேயே சமந்தாவுடன் … Read more

Mallipoo: எல்லாரும் இப்போ இதைத்தான் வைப் பண்றாங்க.. டிரெண்டிங்கில் தெறிக்கவிடும் VTK மல்லிப்பூ!

சென்னை: வெந்து தணிந்தது காடு படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள மல்லிப்பூ பாடல் கடந்த இரண்டு நாட்களாக சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. தியேட்டரில் இந்த பாடலுக்கு ஆண்கள், பெண்கள் என அனைவரும் எழுந்து ஆடும் காட்சிகள் #MalliPoo என்கிற ஹாஷ்டேக்கில் டிரெண்டாகி வருகிறது. மிகவும் இயல்பாக லுங்கியை தூக்கிக் கட்டிக் கொண்டு சிம்பு போடும் நடனம் ரசிகர்களையும் அவரது ரசிகைகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது. சிம்புவுக்கு இன்னொரு ஹிட் AAA, வந்தா ராஜாவாதான் வருவேன், ஈஸ்வரன் உள்ளிட்ட … Read more

பொன்னியின் செல்வன் இசை -ட்ரெயிலர் வெளியீட்டு விழா.. எந்த சேனல்ல ஒளிபரப்பாகுது தெரியுமா?

சென்னை : நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம். இந்தப் படத்தின் டீசர், பாடல்கள் உள்ளிட்டவை முன்னதாக சென்னை மற்றும் ஐதராபாத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றன. தொடர்ந்து படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடும் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டன. பொன்னியின் செல்வன் படம் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜெயராம், பார்த்திபன் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம்தான் … Read more

ராஷ்மிகாவின் பாலிவுட் என்ட்ரி… நைட் பார்ட்டியில் ஆட்டம் பாட்டம்… ட்ரெண்டாகும் சிஸ்லிங் வீடியோ!

மும்பை: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார். அமிதாப் பச்சனுடன் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள ‘குட்பை’ திரைப்படம் அக்டோபர் 7ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், ‘குட்பை’ படத்தில் இருந்து ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘பார்ட்டி சாங்’ செம்ம மாஸாக வெளியாகியுள்ளது. கீதா கோவிந்தம் கொடுத்த கம்பேக் கன்னடத்தில் 2016ம் ஆண்டு வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கிலும் நடிக்கத் தொடங்கினார். விஜய் தேவரகொண்டா … Read more

நீயா நானாவில் இந்த வாரம் என்ன டாப்பிக் தெரியுமா? வெளியான அட்டகாச புரமோ.. ரக்கட் பாய்ஸ் புலம்பல்!

சென்னை: விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி மீண்டும் அதிகப்படியான ரசிகர்களின் கவனத்தை கடந்த சில எபிசோடாக கவர்ந்து வருகிறது. கணவனை விட அதிகமாக சம்பாதிக்கும் மனைவிகளையும் அவர்களது கணவன்மார்களையும் அழைத்து வந்து நடத்திய ஷோவில் நடந்த திடீர் திருப்பம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சீனிராஜா திடீரென சோஷியல் மீடியா ஹீரோவாக மாறிவிட்ட சம்பவங்களும் நடைபெற்ற நிலையில், இந்த வார நீயா நானா என்ன செய்ய காத்திருக்கிறதோ என்கிற கேள்வி புதிய புரமோவை பார்த்ததும் எழுந்துள்ளது. திடீர் … Read more

ஹாலிவுட் போய்விட்டோம் அடுத்து?..பெரிய ஆளுன்னா யார்? ..மீண்டும் வலுக்கிறதா சிம்பு-தனுஷ் மோதல்

பெரிய ஆளுன்னா என்ன? ஹாலிவுட் போய்விட்டோம் அடுத்து என்ன? என சிம்பு சொன்ன உதாரணத்தை வைத்து மீண்டும் சிம்பு தனுஷ் மோதல் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். தமிழ் திரையுலகில் சிம்பு, தனுஷ் சாதாரணமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் இருவரும் நேரடியாக ட்விட்டரில் மோதிக்கொண்ட வரலாறு எல்லாம் உண்டு. இருவரும் நேரடியாக சமீப ஆண்டுகளில் கருத்து சொல்லவில்லை என்றாலும், இருவரும் எது பேசினாலும் அது மற்றவரைப்பற்றித்தான் என தூக்கிக்கொண்டு ஒரு கூட்ட வந்துவிடுகிறது. வெளிப்படையாக பேசும் சிலம்பரசன் நடிகர் … Read more

Bigg Boss 6 Tamil: தள்ளிப் போகிறதா பிக் பாஸ் சீசன் 6.. இந்த தேதியில் தான் ஆரம்பமா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி எப்போது முதல் ஆரம்பமாக போகிறது என்கிற தகவல் கசிந்துள்ளது. 5 சீசன்களையும் வெற்றிகரமாக தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் தான் 6வது சீசனையும் தொகுத்து வழங்க போகிறார். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய சிம்பு இந்த சீசனை தொகுத்து வழங்கவில்லை. பிக் பாஸ் சீசன் 6 விஜய் டிவியின் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் அடுத்த மாதம் … Read more

மாலத்தீவில் மஜா பண்ணும் அமலா பால்.. பீச்சில் பிகினி உடையில் என்னம்மா காத்துவாங்குறாரு!

சென்னை: சம்மர் முடிந்தும் இன்னமும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், நடிகைகள் எல்லாரும் மீண்டும் மாலத்தீவுக்கு படையெடுத்து வருகின்றனர். நடிகைகள் ஸ்ரேயா, பிரணிதா எல்லாரும் குடும்பத்துடன் மாலத்தீவில் விடுமுறையை கழித்து வரும் நிலையில், நடிகை அமலா பால் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கே கடற்கரை அருகே வித்தியாசமான பிகினி உடையில் அவர் கொடுத்துள்ள ஹாட் போஸ்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. மாலத்தீவில் அமலா பால் நடிகை அமலா பால் தற்போது மாலத்தீவில் தனது விடுமுறையை … Read more

Vendhu Thanindhathu Kaadu Box Office: காட்சிகள் அதிகரிப்பு.. 2ம் நாளிலும் கல்லா கட்டும் சிம்பு படம்!

சென்னை: வெந்து தணிந்தது காடு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் குவிந்த வரவேற்பு காரணமாக ஏகப்பட்ட தியேட்டர்களில் வெள்ளிக்கிழமை முதல் கூடுதல் காட்சிகள் அதிகரிக்கப்பட்டன. வெந்து தணிந்தது காடு படத்தின் தெலுங்கு வெர்ஷன் இன்று வெளியாகி உள்ள நிலையில், மேலும், படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி நடித்த வெந்து தணிந்தது காடு படம் இரண்டாம் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை இங்கே காண்போம்.. சிம்பு நடிப்பை பார்ப்பதற்கே … Read more

நான் என்ன கொலைகாரனா.. கொள்ளைக்காரனா.. தீயாக பரவும் நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ!

சென்னை: நாடு முழுவதும் நடிகர் அஜித் பைக்கில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தனது ஹெல்மெட்டை கழட்டி விட்டு நான் என்ன கொலைகாரனா.. கொள்ளைக்காரனா என நடிகர் அஜித் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவி வருகிறது. போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் ஏகே61 படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். அவருக்கு இந்த படத்தில் ஜோடியாக முதன் முறையாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் இணைந்துள்ளார். ஷூட்டிங் … Read more