“இண்டியா கூட்டணி கட்சிகளே பாஜகவை விட அதிக தேர்தல் பத்திர நன்கொடை பெற்றன” – அமித் ஷா

புதுடெல்லி: “ராகுல் காந்திக்கு நமது பாரம்பரியம் பற்றி தெரியவும் தெரியாது. தெரிந்தாலும் அவர் அதை மதிக்கவும் மாட்டார். பெண் சக்தி பற்றி தெரியாத ராகுல் காந்திக்கு இந்தத் தேர்தலில் அவர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாடியுள்ளார். மேலும், தேர்தல் பத்திர நன்கொடை குறித்தும் அவர் புதிய விளக்கம் அளித்துள்ளார். தொலைக்காட்சி ஊடகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, “ராகுல் காந்திக்கு இந்த நாட்டின் பாரம்பரியம் … Read more

திமுக 50 முக்கிய வாக்குறுதிகள்: பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.65, கேஸ் ரூ.500, நீட் விலக்கு, ‘அக்னிபாத்’ ரத்து!

சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி, திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை சென்னை அறிவாலயத்தில் வெளியிட்டார். திமுகவின் முக்கிய வாக்குறுதிகள்: மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெற்றிடும் வண்ணம், அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை திமுக மத்தியில் அமையும் புதிய ஆட்சியைத் தொடர்ந்து வலியுறுத்தும். ஆளுநர்களை நியமனம் செய்யும்போது மாநில முதல்வரின் ஆலோசனையுடன் நியமித்திட புதிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 361-ஐ நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆளுநரும் சட்ட நடவடிக்கைக்கு … Read more

“மாநில நன்மைக்காவே…” – காங்கிரஸில் இணைந்த ஜார்க்கண்ட் பாஜக எம்எல்ஏ

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் மண்டு தொகுதியின் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெய் பிரகாஷ் பாய் படேல் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடந்திருக்கும் இந்த மாற்றம் ஜார்க்கண்டில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் ஜார்க்கண்ட் பொறுப்பாளர் குலாம் அகமது மிர், ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் ரஜேஷ் தாகுர், ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம் கிர் ஆலம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவின் தலைவர் பவன் கெரா முன்னிலையில் … Read more

மகிழ்ச்சி மிகு நாடுகள் பட்டியலில் ஃபின்லாந்து முதலிடம், இஸ்ரேஸ் 5-ம் இடம்; இந்தியா 126-ல் நீடிப்பு

2024-ஆம் ஆண்டுக்கான உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. வழக்கம்போல் நார்டிக் தேசங்கள் இதில் வெகுவாக இடம்பெற்றுள்ளன. டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுடன் ஃபரோ தீவுகள், கிரீன்லாந்து ஆகிய தீவுகளை உள்ளடக்கிய பகுதி நார்டிக் பிராந்தியமாக அறியப்படுகிறது. இந்த நார்டிக் பிராந்திய நாடுகள் டாப் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. இஸ்ரேல் 5-வது இடத்தில் இருக்க, இந்தியா கடந்த ஆண்டைப் போலவே 126-வது இடத்தில் உள்ளது. ஐ.நா.வின் ஆதரவோடு ஆண்டுதோறும் தயாரிக்கப்படும் இந்த … Read more

பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் 

சென்னை: பாஜகவின் சின்னமாக தேசிய மலரான தாமரையை ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வழக்கின் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்காக மனுதாரர் ரூ.10,000-ஐ சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு செலுத்தவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான டி.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தேசிய மலரான தாமரையை ஓர் அரசியல் கட்சிக்கு … Read more

பசுபதி குமார் பராஸின் ராஜினாமா ஏற்பு; கிரண் ரஜிஜுவுக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு

புதுடெல்லி: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நேற்று விலகியிருக்கும் பசுபதி குமார் பராஸின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் அவர் வகித்து வந்த உணவு பதப்படுத்தும் துறையை, கூடுதல் பொறுப்பாக புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுக்கு ஒதுக்கியுள்ளார். இதுகுடித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பிரதமரின் ஆலோசனையின் படி, இந்திய அரசியலைமைப்புச்சட்டம் சரத்து 72, பிரிவு (2) கீழ் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் மத்திய அமைச்சரவையில் இருந்து … Read more

“பிரதமரும், ஆளுநரும் திமுக வெற்றிக்கு பிரச்சாரம் செய்கிறார்கள்” – முதல்வர் ஸ்டாலின் பகடி

சென்னை: “நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இங்கிருக்கும் ஆளுநர் ஒருவரே போதும். திமுகவுக்கு நன்றாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் என்று. இப்போது பிரதமரும் எங்களுக்காக நன்றாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். பிரதமரும், ஆளுநரும் மீண்டும் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தருவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிக்கை மற்றும் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் முதல்வர் ஸ்டாலின். அதன் விவரம்… பிரதமர் அடிக்கடி இங்கு … Read more

உத்தரப் பிரதேசத்தில் 2 சிறுவர்களைக் கொன்ற நபர் போலீஸ் எண்கவுன்டரில் உயிரிழிப்பு

படாவுன்: உத்தரப் பிரதேச மாநிலம் படாவுனில் முடித்திருத்தும் தொழிலாளி ஒருவர் தனது அண்டை வீட்டில் வசித்து வந்த இரண்டு சிறுவர்களைக் கொடூரமாக கொலை செய்ததாகவும் மற்றொரு சிறுவனைக் காயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அந்த நபர் போலீஸ் எண்கவுன்டரில் உயிரிழந்தார், உ.பி. மாநிலம் மண்டி சமிதி காவல் சரகத்துக்குட்பட்டது பாபா காலனி. அப்பகுதியைச் சேர்ந்தவர் சஜித். அதே பகுதியைச் சேர்ந்தர் வினோத் குமார். இவர் அங்கு சலூன் கடை ஒன்று வைத்துள்ளார். இந்நிலையில், சுஜித் வினோத்குமாரின் 11 … Read more

பொன்முடி மகன், பழனி மாணிக்கம் உள்பட திமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சிட்டிங் எம்பிக்கள் யார்?

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 20) அறிவித்தார். இதில் புதிய வேட்பாளர்களாக 11 பேர் அறிவிக்கபட்டுள்ளனர்.அதேநேரம் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் உள்ளிட்ட பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை ஸ்டாலின் அறிவித்தார். அதில், திமுகவின் முக்கிய தலைவர்களாக அறியப்படும் … Read more

கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு

கொல்கத்தா: கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர். கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் 5 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, தீ அணைப்புப் படை, … Read more