உணவு ஊட்டப்படாமல் இறந்த பச்சிளம் குழந்தை: மூடநம்பிக்கையை பின்பற்றிய தந்தைக்கு சிறை @ ரஷ்யா

மாஸ்கோ: சூரிய ஒளியே குழந்தைக்கு உணவளிக்கும் என்று சொல்லி, தன்னுடைய ஒரு மாதக் குழந்தைக்கு உணவு ஏதும் கொடுக்காமல் கொன்ற ரஷ்யாவைச் சேர்ந்த வீகன் இன்ஃப்ளுயென்ஸரான மாக்சிம் லியுட்டி என்பவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளியில் வைத்திருந்தால் `சூப்பர் ஹியூமன் பவர்’ கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையில் காஸ்மோஸ் என்ற தன் ஒரு மாத ஆண் குழந்தையை வெயிலில் வைத்திருக்கிறார் மாக்சிம் லியுட்டி. அத்துடன் சூரிய ஒளி குழந்தைக்கு உணவளிக்கும் என்று கூறி, குழந்தைக்கு … Read more

செந்தில் பாலாஜியை ஏப்.22-ல் நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் வங்கி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அசல் ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஏப்ரல் 22-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரிமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, இருதரப்பிலும் … Read more

“தேர்தல் பத்திரம் பற்றி பேசியபோது மோடியின் கைகள் நடுங்கின” – ராகுல் காந்தி

பெங்களூரு: “உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்து, அதை சட்டவிரோதமானது என்று விவரித்தது. ஆனால் மோடி அதை நியாயப்படுத்த முயன்றார். அப்போது அவரின் கைகள் நடுங்கின” என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் விமர்சனம் செய்துள்ளார். கர்நாடகா மாநிலம் மண்டியாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் பேசியது: “பாஜக கட்சி பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. ஆனால், தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி … Read more

எக்ஸ் தளத்துக்கு தடை ஏன்? – பாகிஸ்தான் அரசு விளக்கம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் எக்ஸ் தளத்துக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த பிப்ரவரியில் கைது செய்யப்பட்ட சமயத்தில் எக்ஸ் தள சேவை பாகிஸ்தானில் முடக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக பாகிஸ்தானில் எக்ஸ் தள சேவையில் பல்வேறு தடங்கல் இருந்துவந்தன. இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், வழக்கின் … Read more

“வட மாநிலங்களிலும் இண்டியா கூட்டணி அலை” – இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: “தமிழகத்தில் மட்டுமல்ல, வட மாநிலங்களிலும் இண்டியா கூட்டணிக்கான அலை வீசிக் கொண்டிருக்கிறது. தேர்தல் பத்திர ஊழல், மோடியின் கிளீன்மோடி என்கிற முகமூடியை கிழித்தெறிந்து மோடியின் ஊழல் முகத்தை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. உடனே மோடி என்ன செய்கிறார்? தன்னுடைய இமேஜே காப்பாற்றிக் கொள்ள, தேர்தல் பத்திரம் வந்த பிறகுதான், யார் யாருக்கு நிதி கொடுக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது என்று வடை சுட ஆரம்பித்துவிட்டார்” என்று சென்னையில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் … Read more

“எந்த ஓர் அரசும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருக்கக் கூடாது” – ப.சிதம்பரம் கருத்து

சிவகங்கை: “நாடு தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டுமென்றால், எந்த ஓர் அரசும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருக்கக் கூடாது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சி நடந்துள்ளது. 10 ஆண்டு காலம் என்பது குறுகிய காலமல்ல. … Read more

‘டெல்டா’வை வளைப்பது யார் யார்? – 6 தொகுதிகளின் கள நிலவர அலசல்

தமிழக மக்களவைத் தொகுதிகளில் ‘டெல்டா பகுதி’யில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளில் எந்தக் கட்சி முன்னிலை வகிக்கிறது என்பதை விரிவாக இந்தத் தொகுப்பில் பார்ப்போம். கடலூர் : கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பாக எம்.கே.விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக சார்பாக சிவக்கொழுந்து களமிறக்கப்பட்டுள்ளார். பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பாக தங்கர்பச்சான் மற்றும் நாதக சார்பாக வே.மணிவாசகன் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர். … Read more

“ஒட்டுமொத்த நாட்டையும் தடுப்பு முகாமாக மாற்றிவிட்டனர்” – மம்தா சாடல் @ அசாம்

புதுடெல்லி: இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அசாமில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 4 வேட்பாளர்களை ஆதரித்து சில்சார் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, ‘பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும் தேர்தலும் இருக்காது. அவர்கள் (பாஜக) ஒட்டுமொத்த நாட்டையும் தடுப்பு முகாமாக … Read more

“பாஜகவும் அதிமுகவும் தேர்தலுக்குப் பிறகு கைகோக்கும்” – முதல்வர் ஸ்டாலின் கருத்து

சென்னை: “ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளைக் கண்டு நம் கவனம் துளியும் சிதறிவிடக் கூடாது. அவற்றைக் கடந்த காலங்களிலும் நாம் பொருட்படுத்தியது இல்லை. கருத்துக் கணிப்புகளை எல்லாம் விஞ்சுகிற, நாடே தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கிற வெற்றியாக நம் வெற்றி இருக்க வேண்டும்” என்று திமுகவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக திமுகவினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்திய நாட்டின் இரண்டாவது விடுதலைப் போர் என்று அழைக்கப்படுகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம், … Read more

“நாட்டின் அணு ஆயுதங்களை அழிப்போம் என கூறும் மார்க்சிஸ்ட் உடன் கூட்டா?” – காங்கிரஸுக்கு ராஜ்நாத் கேள்வி

காசர்கோடு (கேரளா): நாட்டின் அணு ஆயுதங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ், தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். கேரளாவின் காசர்கோடு நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங், “நாட்டின் அணு ஆயுதங்கள், ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்கள் உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்கள் … Read more