“ஆதிசங்கரருக்குப் பிறகு…” – ராகுல் காந்தியை புகழ்ந்த ஃபரூக் அப்துல்லா

லகான்பூர் (ஜம்மு காஷ்மீர்): ஆதிசங்கரருக்குப் பிறகு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டவர் ராகுல் காந்திதான் என்று ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா பாராட்டு தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. லகான்பூர் என்ற இடத்தில் நடைபெற்ற யாத்திரையில் ராகுல் காந்தியுடன் ஃபருக் அப்துல்லா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ”பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியில் … Read more

இரட்டை இலை சின்னத்தை விடமாட்டோம்: ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி

சென்னை: “சின்னம் எங்களிடம் இருப்பதால்தான் அவர்கள் சின்னம் இல்லாமல் சாலையில் அலைகின்றனர். அந்தப் பேச்சுக்கு இடமே இல்லை. இரட்டை இலையை விடவே மாட்டோம். அதற்கான பட்டா வைத்திருப்பவர் ஓ.பன்னீர்செல்வம்தான்” என்று அவரது ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர் புகழேந்தி வெள்ளிக்கிழமை (ஜன.20) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “எடப்பாழி பழனிசாமி, தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் நான் இணை ஒருங்கிணைப்பாளர் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அந்தக் … Read more

பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்

புதுடெல்லி: விமானத்தில் பெண் பயணி மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்ததாக எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு டிஜிசிஏ எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. டிஜிசிஏ விதிமுறைகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த விமானத்தை இயக்கிய தலைமை விமானியின் உரிமத்தை 3 மாதங்கள் ரத்து செய்துள்ளது. விமான சட்டத்தின் 141-வது விதியின் கீழ் தனது கடமையைச் … Read more

காத்திருக்க வைத்ததால் டென்ஷன் ஆன புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி – சமாதானப்படுத்திய அமைச்சர்

புதுச்சேரி: அரசு சட்டக் கல்லூரிக்கு மாணவர்களுக்கான பேருந்து பயன்பாட்டுக்கு வரும் நிகழ்வில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி காத்திருக்க வேண்டிய சூழலில் டென்ஷனாகி அலுவலகத்துக்கு திரும்பினார். அங்கு வந்த அமைச்சர், முதல்வர் அறைக்கு சென்று அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்தார். புதுச்சேரி பாஜக மாநிலங்களவை எம்.பி செல்வகணபதி நிதியிலிருந்து அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு புதுப் பேருந்து வாங்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரும் விழா புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று நடந்தது. பேருந்தும் சட்டப்பேரவை வாயிலில் நிறுத்தப்பட்டு தொடங்கி … Read more

தொங்கு பால விபத்து | மோர்பி நகராட்சியை ஏன் கலைக்கக் கூடாது? – குஜராத் அரசு நோட்டீஸ்

அகமதாபாத்: குஜராத்தின் மோர்பி நகரில் தொங்கு பாலத்தின் கம்பி அறுந்து விழுந்ததில் 141 பேர் உயிரிழந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக மோர்பி நகராட்சி நிர்வாகத்திற்கு குஜராத் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அனுப்பியுள்ள அந்த நோட்டீஸில், மோர்பி நகராட்சி நிர்வாகம் வரும் 25-ஆம் தேதிக்குள் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். அது நகராட்சி பொதுக்குழு தீர்மானம் போன்று இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், பல்வேறு நிலையிலும் பாலம் … Read more

உலகிற்கு இந்தியப் பிரதமர் மோடியின் தலைமை முக்கியம்: உலகப் பொருளாதார மன்ற நிறுவனர்

தாவோஸ்: பலவாறாக பிரிந்து கிடக்கும் இன்றைய உலகில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை முக்கியமானது என்று உலக பொருளாதார மன்றத்தின் நிறுவனரும் செயல் தலைவருமான க்லாஸ் ஸ்வாப் (Klaus Schwab) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய அமைச்சரவைக் குழுவையும், மிக முக்கிய இந்திய தொழிலதிபர்கள் குழுவையும் சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது. பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உலக சுகாதாரம், பெண்கள் தலைமையிலான பொருளாதார முன்னேற்றம், டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான பொது கட்டமைப்பு ஆகியவற்றில் … Read more

“ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறாவிட்டால்…” – முற்றுகைப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் எச்சரிக்கை

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், “ஆளுநர் என்பவர் அரசியல் சாசனத்தின்படி நடந்து கொள்ள வேண்டும். இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று இந்திய அரசியலமைப்பில் எழுதி … Read more

இந்திய ஒற்றுமை யாத்திரையில் பாதுகாப்பு பிரச்சினை ஏதுமில்லை: ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்

ஸ்ரீநகர்: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ஜம்மு காஷ்மீரில் நடைபெறுவதில் பாதுகாப்பு பிரச்சினை ஏதும் இல்லை என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையின் கடைசி கட்டம் தற்போது ஜம்மு காஷ்மீரில் தொடங்கி இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை பல்வேறு மாநிலங்கள் வழியாகச் சென்று பஞ்சாப் வழியாக ஜம்மு காஷ்மீருக்குள் நேற்று … Read more

புதுச்சேரி மாநில அந்தஸ்து எதிர்ப்பை பாஜக மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அதிமுக

புதுச்சேரி: “மாநில அந்தஸ்து எதிர்ப்புக் கருத்தை பாஜக மறுபரிசீலனை செய்ய வேண்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தை உடனடியாக அதன் தலைவரான முதல்வர் ரங்கசாமி கூட்ட வேண்டும்” என்று புதுச்சேரி மாநில அதிமுக செயலரும், இபிஎஸ் ஆதரவாளருமான அன்பழகன் கூறியுள்ளார். புதுச்சேரி மாநில அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “மத்தியில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் – பாஜக எப்போது ஆட்சியில் இருந்தாலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதில் பாரபட்சமாக நடந்து கொள்கிறது. புதுச்சேரிக்கு … Read more

உ.பி. இந்து கல்லூரியில் பர்தா அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு – போலீஸார் தலையிட்டு போராட்டத்தை முடித்து வைத்தனர்

புதுடெல்லி: உ.பி.யின் பரேலியில் எம்.ஜே.பி. ரோஹில்கண்ட் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் உறுப்புக் கல்லூரிகளில் ஒன்றாக, முராதாபாத்தின் இந்து கல்லூரி உள்ளது. முஸ்லிம்கள் அதிகமுள்ள முராதாபாத்தில் அமைந்த இக்கல்லூரியில் பல மாணவிகள் அன்றாடம் தங்கள் வகுப்புகளுக்கு பர்தா அணிந்து வருவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் இக்கல்லூரியில் மாணவர்கள் அனைவருக்கும் ஜனவரி 1 முதல் புதிதாக சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முஸ்லிம் மாணவிகள் சிலர் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இவர்கள் கல்லூரி காவலர்களால் நுழைவாயிலில் … Read more