‘தீமை, வஞ்சகத்துக்கு எதிரான போருக்கு தயாராகுங்கள்’ – மக்களிடம் முறையிட்ட ஜெகன்

குண்டூர்: ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் ஒருசேர நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலை முன்னிட்டு பேருந்து யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் அந்த மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. புதன்கிழமை அன்று மாநிலத்தின் பாலநாடு மாவட்டத்தில் அவர் யாத்திரை மேற்கொண்டார். அதன்போது ஜன சேனா மற்றும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். முதல்வர் ஜெகன் முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற்றது. தொடர்ந்து … Read more

“தேர்தலுக்குப் பிறகு ஒரு திராவிட கட்சி கரைந்து போகும்” – அண்ணாமலை கணிப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இரண்டு திராவிட கட்சிகளில் ஒன்று கரைந்து போகும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அண்ணாமலை கூறியதாவது: “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிட கட்சிகளும் பாஜக உள்ளே வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். எங்கெல்லாம் பாஜகவின் கை ஓங்குகிறதோ அங்கெல்லாம் இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து செயல்படுவார்கள். ஆனால் அந்த இரண்டு கட்சிகளின் வாக்காளர்களும் எங்கள் … Read more

“இந்தியா – சீனா இடையிலான உறவு முக்கியமானது” – பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நிலையான உறவு என்பது இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்துக்கும் முக்கியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பிரதமர் மோடி, இந்தியா – சீனா இடையிலான விரிசல்கள் குறித்து பேசியுள்ளார். அதில் பிரதமர் கூறியதாவது: “இந்தியாவைப் பொறுத்தவரை, சீனாவுடனான உறவு முக்கியமானது மற்றும் தனித்துவமானது. இருதரப்பு உறவில் உள்ள விரிசல்களை சரிசெய்வதற்கு, எல்லையில் நீடித்து வரும் சூழ்நிலையை அவசரமாகத் தீர்க்க வேண்டும் என்பது எனது … Read more

செய்தித் தெறிப்புகள் @ ஏப்.10: திமுகவை ‘தாக்கிய’ மோடி முதல் டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா

“தமிழகத்தில் பாஜக அலை!” – பிரதமர் மோடி பேச்சு: “கொள்ளை அடிப்பதிலும், ஊழல் செய்வதிலும் திமுக காப்புரிமை வைத்துள்ளது. தமிழகத்தை கொள்ளையடிப்பதை தவிர திமுக குடும்பம் எந்த வேலையும் செய்வதில்லை. தமிழகத்தில் மணல் கொள்ளை மூலம் மட்டும் இரண்டு ஆண்டுகளில் ரூ.4 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என்று வேலூர் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திமுக மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். அதேபோல், “திமுக தன்னுடைய சுய லாபத்துக்காக, தமிழகத்துக்கு அதிகபட்ச கேடுகளை உருவாக்கிக் … Read more

'கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள்?' – திக்விஜய் சிங் கேள்வியும், கங்கனா எதிர்வினையும்

புதுடெல்லி: “கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள்? பிரதமர் ஏன் இப்படி அடி, முடி தெரியாமல் பேசுகிறார்?” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் எழுப்பிய கேள்விக்கு கங்கனா ரணாவத் பதிலடி கொடுத்துள்ளார். சமீப காலமாக கச்சத்தீவு விவகாரம் தேசிய அரசியலில் விவாதப் பொருளாகியுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரம் குறித்து தனது விமர்சனத்தை இன்றும் (ஏப்.10) முன்வைத்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் … Read more

“இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தவறு செய்கிறார்” – காசா விவகாரத்தில் பைடன் அதிருப்தி

டெல் அவில்: இஸ்ரேல் – காசா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், “இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அணுகுமுறை தவறானது. அவருடைய அணுகுமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அக்டோபர் 7, 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் – காசா போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இஸ்ரேலிய தாக்குதல்களில் தற்போது வரை 33,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலியர்கள் 1,200 பேர் உயிரிழந்தனர். அதோடு, உள்ளூர் சுகாதார அமைச்சகத்தின்படி, கிட்டத்தட்ட 23 லட்சம் … Read more

“தேர்தல் முடிந்ததும் ராதிகா சென்னைக்கு ‘பேக்கப்’ ஆகிவிடுவார்” – ஆர்.பி.உதயகுமார்

திருமங்கலம்: தேர்தல் முடிந்ததும் நடிகை ராதிகா, விருதுநகரில் இருந்து ‘பேக்கப்’ செய்து சென்னைக்குச் சென்று விடுவார் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியது: “தற்போது விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிட ஒரு அக்கா சென்னையில் இருந்து வந்திருக்கிறார். அவர் விருதுநகரில் … Read more

“காங்கிரஸால் ராமர் கோயில் கட்டியிருக்க முடியுமா?” – உ.பி. முதல்வர் யோகி

கதுவா: “உத்தரப் பிரதேசத்தில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த முந்தைய அரசுகள் அராஜகவாதிகளுக்கு ஆதரவு அளித்து வந்த நிலையில், எனது 7 ஆண்டுகால ஆட்சியில் மாநிலத்தில் கலவரமோ, ஊரடங்கு உத்தரவோ நிகழவில்லை” என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் உதாம்பூர் – கதுவா மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஜித்தேந்திர சிங்கை ஆதரித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: “மாநிலத்தில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த … Read more

ஆப்கனில் இந்துக்கள், சீக்கியர்களின் சொத்துகளை மீட்டு ஒப்படைக்கிறது தலிபான் அரசு!

காபூல்: தலிபான் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் சொத்துகளை மீட்டெடுக்கும் பணி தொடங்க உள்ளது. அதற்கான பணியை அந்த நாட்டில் நீதி அமைச்சகம் மேற்கொள்கிறது. தலிபான் அரசு இதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதே நேரத்தில் கடந்த முறையைப் போல தங்கள் ஆட்சி இருக்காது என்று அப்போது தெரிவித்தனர். இந்தச் சூழலில் இந்த … Read more

“ஓட்டுக்கு திமுகவினர் தரக்கூடியது கஞ்சா மூலம் வந்த பணம்” – அண்ணாமலை காட்டம் @ கோவை

கோவை: “இந்த முறை திமுககாரர்கள் யாராவது தன்னுடைய பாக்கெட்டில் இருந்து ஓட்டுக்கு பணம் கொடுத்தால், அது கஞ்சா மூலமாக வந்த பணம் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களுடைய குழந்தையின் எதிர்காலத்தை உறிஞ்சப்போகிற பணம் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று கோவையில் நடந்த பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசினார். கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது … Read more