ஒடிசாவில் 3 புதிய ரயில் சேவை: கொடியசைத்து தொடங்கி வைத்தார் குடியரசுத் தலைவர் முர்மு

பாதம்பஹர்: ஒடிசாவில் 3 புதிய ரயில் சேவைகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாதம்பஹர் ரயில் நிலையத்தில் இருந்து 3 புதிய ரயில் சேவைகளை குடியரசுத் தலைவர் முர்மு நேற்று தொடங்கி வைத்தார். அதன்படி பாதம்பஹரிலிருந்து … Read more

பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு

டெல் அவிவ்: பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 1200 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து இஸ்ரேல் நடத்திய போரில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரழந்துள்ளனர். இந்தப் போர் 40 நாட்களைக் கடந்து நடந்துவருகிறது. இந்நிலையில் … Read more

3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை மண்டல வானிலைஆய்வு மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு – மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக்கனமழையும், தூத்துக்குடி, … Read more

நேரு மாலையிட்டதால் ஒதுக்கி வைக்கப்பட்ட பழங்குடியின பெண் காலமானார்

தன்பாத்: கடந்த 1959-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, பிஹார் மாநிலம் (இப்போதைய ஜார்க்கண்ட்) தன்பாத் அருகில் தாமோதர் நதி மீது கட்டப்பட்ட பஞ்செட் அணையை திறக்கச் சென்றார். அப்போது அணை கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவரால் அணை திறக்கப்பட வேண்டும் என நேரு விரும்பினார். அதன்படி 16 வயது பழங்குடியினப் பெண் புத்னி மஞ்சியன் அணையை திறந்து வைத்தார். அப்போது புத்னிக்கு நேரு மாலை அணிவித்து கவுரவித்தார். அன்றிரவு … Read more

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை தடை செய்தது இஸ்ரேல்

ஜெருசலேம்: கடந்த 2008-ம் ஆண்டில் மும்பையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் நாட்டவர் உட்பட 175 பேர் கொல்லப்பட்டனர். இதன் 15-வது ஆண்டு நினைவுதினம் வர உள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ளஇஸ்ரேல் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2008 நவம்பரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பால் நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதல் மற்றும் அதன் கொடூரமான நடவடிக்கைகள், அமைதியை நாடும் நாடுகள் மற்றும் சமூகங்களில் இன்னும் எதிரொலிக்கின்றன. லஷ்கர் இ தொய்பா தடைசெய்யுங்கள் … Read more

திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்புபேருந்துகள் இயக்கப்படும் என்றும்கிரிவலப் பாதையில் இலவச சிற்றுந்து வசதி ஏற்படுத்தப்படும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பிரசித்திபெற்ற கார்த்திகை தீபத்திருநாள் வரும்26-ம் தேதி, மற்றும் 27-ம் தேதி பவுர்ணமிகிரிவலத்தை முன்னிட்டு 25, 26, 27-ம்தேதிகளில் முதல்வர் உத்தரவுப்படி அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற முக்கிய … Read more

உத்தராகண்ட் சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளனர்: கேமரா முன்பு பேசும் காட்சி வெளியாகியுள்ளது

உத்தரகாசி: உத்தராகண்டில் சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பான முதல் வீடியோ வெளியாகியுள்ளது. விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள் என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே, சில்க்யாரா – பர்கோட் இடையே 4.5 கி.மீ. சுரங்கப் பாதை அமைக்கும்பணி நடந்து வந்தது. அங்கு கடந்த 12-ம்தேதி மண் சரிவு ஏற்பட்ட நிலையில்,சுரங்கப் பாதைக்குள் வேலை செய்துகொண்டிருந்த 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கினர். இந்த சம்பவம் … Read more

கோவை | மூழ்கும் பாலங்கள்… முடிவே கிடையாதா?

கோவை: கோவையில் மழைக் காலத்தில் பாலங்களின் கீழ்பகுதியில் தேங்கும் மழை நீரை அகற்ற அதிக திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்துவது மட்டுமின்றி, நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். கோவை மாநகரில் கனமழை பெய்தால் அவிநாசி சாலை மேம்பாலத்தின் சுரங்கப் பாதை, பெரிய கடைவீதி லங்கா கார்னர் ரயில்வே பாலம், காட்டூர் காளீஸ்வரா மில் ரயில்வே பாலம், ஆர்.எஸ்.புரம் கிக்கானி பள்ளி ரயில்வே பாலம் ஆகியவற்றின் கீழ் பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து தடைபடுகிறது. … Read more

பாகிஸ்தான் எல்லை அருகில் வயலில் கிடந்த ட்ரோன் மீட்பு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் டார்ன் தரன் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி மெஹ்திபூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் ஒரு வயலில் ட்ரோன் ஒன்றை பிஎஸ்எப் வீரர்கள் நேற்று கைப்பற்றினர். இதுகுறித்து பிஎஸ்எப் அதிகாரிஒருவர் கூறும்போது, “குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் மெஹ்திபூர் கிராமத்தின் வயல்வெளியில் பஞ்சாப் மாநில போலீஸாருடன் இணைந்து தேடுதல்நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. இதில் சீனாவில் தயாரிக்கப்பட்ட குவாட்காப்டர் ட்ரோன் ஒன்று மீட்கப்பட்டுள்ளது” என்றார். பிஎஸ்எப் தனது எக்ஸ் சமூக வலைதளப்பதிவில் “கடந்த ஒருவாரத்தில் … Read more

காஞ்சிபுரம் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் துர்நாற்றம்: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம்: உத்திமேரூரை அடுத்த திருவந்தவார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் பிடிக்கப்பட்ட குடிநீரில், கடும் துர்நாற்றம் வீசியதாக புகார் எழுந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, எஸ்.பி. சுதாகர் ஆகியோர் குடிநீர் தொட்டியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலவாக்கத்தை அடுத்த திருவந்தவார் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், அப்பகுதியை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும், … Read more