உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்பதில் எந்த பாரபட்சமும் இல்லை: ஆளுநர் தமிழிசை 

புதுச்சேரி: “உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்பதில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற பாரபட்சம் இல்லை” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி காந்தி சிலையில் நூறு பல் மருத்துவ மாணவர்கள் ஹெல்மெட் அணிந்து டூவீலரில் செல்லும் விழிப்புணர்வு இருசக்கர பேரணியை துவக்கி வைத்து ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியது: “சட்டத்தின்படி கட்டாயப்படுத்தி தலைக்கவசம் அணிவதைவிட நாமே கட்டுப்பாடுகளுடன் இருந்து தலைக்கவசம் அணிய வேண்டும். சட்டத்தை கடுமையாக்கி அபராதம் விதித்தால் போலீசாரை பார்க்கும்போது … Read more

மின்னொளியில் ஜொலிக்கும் காளஹஸ்தி

திருப்பதி: பஞ்ச பூத திருத்தலங்களில் வாயுத்தலமாக விளங்கும் காளஹஸ்தி சிவன் கோயிலில் தற்போது பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்பருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலமாகவும், ராகு – கேது பரிகார தலமாகவும் காளஹஸ்தி சிவன் கோயில் விளங்குகிறது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளில் பக்தனுக்கு முதல் மரியாதை அளிக்கும் வகையில், இந்த திருத்தலத்தில்தான் சிவன் கோயிலுக்கு அருகே மலை மீது உள்ள பக்த கண்ணப்பர் கோயிலில் கடந்த 24-ம் தேதி கொடியேற்றம் … Read more

குண்டு வீச்சில் இந்திய மாணவர் பலி: கார்கிவ் நகரில் ரஷ்யா கடும் தாக்குதல்

கீவ்: உக்ரைனின் கார்கிவ் நகரில் கடும் குண்டுவீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் இன்று கொல்லப்பட்டார். இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததை ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம் என்றும் இந்திய மாணவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளதாகவும் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவ நிலைகள் மட்டுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. போர் பீதியால் உக்ரைனில் இருந்து … Read more

சேலத்தில் குற்றவியல் நடுவருக்கு கத்திக் குத்து: நீதிமன்ற ஊழியர் கைது

சேலம்: சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் 4-வது குற்றவியல் நீதிமன்ற நடுவரை கத்தியால் குத்திய ஊழியரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நான்காவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் பொன்பாண்டி பணியாற்றி வருகிறார். இன்று காலை வழக்கம்போல நீதிமன்றத்திற்கு வந்த பொன் பாண்டியிடம் அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் நேராகச் சென்று தன்னை பணி மாறுதல் செய்து குறித்து விளக்கம் கேட்டுள்ளார். அப்போது குற்றவியல் நீதிமன்ற நடுவர் பொன்பாண்டிக்கும், அலுவலக உதவியாளருக்கு … Read more

சர்வதேச விமான சேவைக்கு மறு உத்தரவு வரை தடை நீட்டிப்பு

சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு மறு உத்தரவு வரும் வரை தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால் கடந்த 2020-ம் ஆண்டு முதல் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. பிப்ரவரி 28-ம் தேதி (நேற்று) வரைஏற்கெனவே தடை நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில், அவசர கால விமானங்கள் சில நாடுகளுக்கு இயக்கப்பட்டன. மேலும் சரக்கு விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், சர்வதேச பயணிகள் … Read more

வேகமெடுக்கும் உக்ரைன் மீட்பு பணி: களமிறங்கும் விமானப்படை?- பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: உக்ரைனில் தங்கியுள்ள இந்தியர்களை விரைவாக அழைத்து வருவதற்காக விமானப்படை விரைவில் களமிறங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் எல்லையில் நீண்டநாட்களாக படைகளுடன் காத்திருந்த ரஷ்யா, கடந்த 24-ம் தேதி உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலை தொடங்கியது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. போர் நடைபெறும் பகுதியில் சிக்கித் தவிக்கும் இவர்களை மீட்க, மத்தியஅரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. … Read more

உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல்  டி.என்.பி.எஸ்.சி செயல்படுவதா?- ராமதாஸ் கேள்வி

சென்னை: உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் டி.என்.பி.எஸ்.சி செயல்படுவதா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல் தொகுதி முதல் நிலைத் தேர்வுகளில் கேட்கப்பட்ட தவறான வினாக்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களை முதன்மைத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட, அதை மதித்து செயல்படுத்த டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் மறுத்திருக்கிறது. நூற்றுக்கணக்கான போட்டித் தேர்வர்களின் வாழ்க்கையை … Read more

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் குறைதீர்ப்பாளரை நியமிக்காத மாநிலங்களுக்கு நிதி இல்லை: மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் குறைதீர்ப்பாளரை நியமிக்காத மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் நடைமுறைக்கு வந்தது. 100 நாள் வேலை என்றழைக்கப்படும் இந்த திட்டம் நாடு முழுவதும் அமலில் உள்ளது. இத்திட்டத்தின் விதிகளின்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு குறை தீர்ப்பாளர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் குறை தீர்ப்பாளர் … Read more

கொத்துக் குண்டுவீசி தாக்குதல் நடத்தும் ரஷ்யா: தவிக்கும் இந்திய மாணவர்கள்; மத்திய அரசு கவலை

கீவ்: உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்யா கொத்துக் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கு இந்திய மாணவர்கள் 2,500 பேர் சிக்கியுள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. போர் சூழலுக்கு நடுவே பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியான கோமெல் நகரில் … Read more

ரூ.5 கோடி தொழிற்சாலையை அபகரித்ததாக புகார் – ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மார்ச் 11-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி தேர்தலின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்தநரேஷ் என்பவரை தாக்கி, சட்டையை கழற்ற வைத்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றவிவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதையடுத்து,ஜெயக்குமாரை போலீஸார் கைது செய்தனர். அன்று இரவு ஜார்ஜ் டவுன்குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட … Read more