தமிழகத்தில் குறைந்து வருகிறது தாய் – சேய் இறப்பு விகிதம்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: தமிழகத்தில் தாய் – சேய் இறப்பு விகிதம் குறைந்து வருவதாக மத்திய அரசு புள்ளிவிவரத்துடன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி ஒன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் எழுத்துபூர்வமாக அளித்த தேசிய அளவில்: இந்திய தலைமை பதிவாளரின் மாதிரி பதிவு அமைப்பு அறிக்கையின்படி, குழந்தை இறப்பு விகிதம் 2015-ல் 1000 பிறப்புகளுக்கு 37-ல் இருந்து 2019-ல் தேசிய அளவில் 1,000 பிறப்புகளுக்கு 30 ஆகக் குறைந்துள்ளது. … Read more

மீண்டும் முடங்கிய ட்விட்டர் தளம்: சில மணி நேரங்களில் சரி செய்யப்பட்டது

இந்தியா உள்ளிட்ட உலகின் சில பகுதிகளில் ட்விட்டர் தளத்தை இயக்குவதில் பயனர்கள் நேற்று சிக்கலைச் சந்தித்தனர். புதிய ட்வீட்டுகளைக் காட்டாமல், என்னவோ தவறாகிவிட்டது, மீண்டும் முயற்சியுங்கள் என்ற செய்தி பயனர்களுக்கு வந்துகொண்டே இருந்தது. எதனால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது என்பது குறித்து ட்விட்டர் தரப்பிலிருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிக்கை எதையும் ட்விட்டர் இன்னும் வெளிவிடவில்லை. ஆனால், தளத்தின் பாதுகாப்புக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறப்படுகிறது. புதன்கிழமை இரவு 8 மணியளவில் பல … Read more

கும்பகோணத்தின் ஆறு சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது மாசிமக விழா

கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ள 6 சிவாலயங்களில் மாசிமக திருவிழா இன்று காலை (8-ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோயில்களில் மாசிமக பெருந்திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயில்களில் விழா பந்தல் அமைக்கப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டு இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அனைத்து சுவாமி – அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக … Read more

இவை நல்லதல்ல… மாணவர் சமூகம் அமைதிகாக்க வேண்டும்: ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் அறிவுரை

பெங்களூரு: ஹிஜாப் விவகாரத்தில் மாணவர் சமூகம் அமைதி காக்குமாறு கர்நாடக உயர் நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், இது தொடர்பான வழக்கை நாளைக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை … Read more

வெள்ளிக்கிழமை முதல் பப்ஜி மொபைல், லைட் இந்தியாவில் வேலை செய்யாது

வெள்ளிக்கிழமை (இன்று) முதல் பப்ஜி மொபைல் மற்றும் மொபைல் லைட் வடிவங்கள் இந்தியாவில் வேலை செய்யாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பப்ஜியின் உரிமையாளர்களான டென்செண்ட் கேம்ஸ், இந்த நிலைக்கு வருந்துவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருக்கும் பப்ஜி மொபைல், மொபைல் லைட் ரசிகர்கள் தந்த ஆதரவுக்கு நன்றியும் தெரிவித்துள்ளது. முன்னதாக தனது அறிக்கை ஒன்றில், “பயனரின் விவரங்களைப் பாதுகாப்பாதே எங்களின் முதல் முக்கியத்துவமாக இருந்துள்ளது. இந்தியாவில் இருக்கும் தரவுகள் பாதுகாப்பு விதிகள் மற்றும் வரையறைகளுக்கு … Read more

தமிழகத்தில் இன்று 4,519 பேருக்குக் கரோனா: சென்னையில் 792 பேருக்கு பாதிப்பு; 20,237 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 4,519 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,20,505. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,43,829 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 32,92,559. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 80,41,324 பேர் வந்துள்ளனர். சென்னையில் 792 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

ஸ்டார்ட் அப் உலகில் மூன்றாவது இடத்தில் இந்தியா: மாநிலங்களவையில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் நிகழ்த்திய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு மாநிலங்களவையில் இன்று பிரதமர் மோடி, பதில் அளித்து பேசினார். பிரதமர் மோடி தனது உரையில், “சுதந்திரத்தின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் போது அதனை எங்கே, கொண்டு செல்லவிருக்கிறோம், எப்படிக் கொண்டு செல்லவிருக்கிறோம் என்பதை சிந்திப்பதற்கு இது மிகவும் முக்கியமான நேரம். இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு கூட்டான பங்களிப்பும், கூட்டான உரிமை ஏற்பும் அவசியம். உலகம் இன்னமும் கரோனா பெருந்தொற்றுடன் போராடி வருகிறது. கடந்த 100 … Read more

7 நாட்களில் மறைந்து போகும் மெசேஜ்: வாட்ஸ் அப்பில் புதிய வசதி

வாட்ஸ் அப் செயலியில் அனுப்பும் செய்திகள் குறிப்பிட்ட காலத்துக்குள் மறைந்து போகும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ் அப் செயலியில், கடந்த சில காலமாகவே இந்த வசதியைக் கொண்டு வர முயற்சிகள் நடந்தன. தற்போது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) பக்கத்தில் இந்த வசதி குறித்த அறிமுகத்தை அந்நிறுவனம் கொடுத்துள்ளது. அனுப்பும் செய்திகளை மறைய வைக்கும் கட்டுப்பாடு பயனர்கள் கையில்தான் இருக்கும். வேண்டுமென்றால் அதைப் பயன்படுத்தலாம். இல்லையென்றால் அணைத்து வைக்கலாம். ஆனால், குழுக்களில் … Read more

பிப்ரவரி 8: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,20,505 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.7 வரை பிப்.8 பிப்.7 … Read more

வீட்டுக்கு 300 யூனிட் மின்சாரம், மாதம் 1லி பெட்ரோல் இலவசம்: உ.பி.யில் சமாஜ்வாதி வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்

லக்னோ: உத்தரப் பிரதேச தேர்தலுக்காக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் மின்சாரம், மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் உட்பட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் நடைபெற இரண்டு நாட்களே உள்ள நிலையில் முன்னணி கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. இன்று காலை பாஜக தனது … Read more