4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், மயிலாடுதுறை, திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை: பிளஸ் 2 திருப்புதல் தேர்வில் மாற்றமில்லை

தமிழகத்தில் டெல்டா பகுதிகள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கனமழை காரணமாக மயிலாடுதுறை, திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிளஸ் 2 திருப்புதல் தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டும் தவறாமல் பள்ளிகளுக்கு வர வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 12 … Read more

மக்களிடம் கொள்ளையடிப்பது காங்கிரஸ் கொள்கை: மோடி குற்றச்சாட்டு

அல்மோரா: மக்கள் எல்லோரையும் பிரித்து, கூட்டாக கொள்ளையடிப்போம் என்பதே காங்கிரஸ் கட்சியின் கொள்கை என்று பிரதமர் நரேந்திர மோடி சாடினார். உத்தராகண்ட் மாநில சட்டப் பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் 14-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இம்மாநிலத்தின் அல்மோரா நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட கட்சிகளை வாக்காளர்கள் எப் … Read more

கோயில் அன்னதானத்தின் செலவினத் தொகை உயர்வு: அறநிலையத் துறை ஆணையர் அனுமதி

சென்னை: தமிழகம் முழுவதும் 754 கோயில்களில் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அன்னதானத்துக்கான செலவினத்தொகையை உயர்த்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அறநிலையத் துறை இணை ஆணையர்களுக்கு ஆணையர் குமரகுருபரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து கோயில்களிலும் ஒரு நாளுக்கு ஒரு நபருக்கு ரூ.25 வீதம் என வரையறுக்கப்பட்டு, ஒரேமாதிரியான திட்ட அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி வழங்கி 5 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போதைய விலைவாசி அடிப்படையில் ஒரு நாளுக்கு ஒரு நபருக்கு ரூ.35 … Read more

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகேதாட்டு குறித்து விவாதிக்க தமிழகம் எதிர்ப்பு

புதுடெல்லி / பெங்களூரு: காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததால் அதுகுறித்து விவாதிக்கப்படவில்லை. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 15-வது கூட்டம் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில்தமிழக அரசின் சார்பில் நீர்வளத் துறை கூடுதல் செயலர் சந்தீப்சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், உறுப்பினர் பட்டாபிராமன் உள் ளிட்டோர் பங்கேற்றனர். புதுச்சேரி அரசு சார்பில் நீர்வளத்துறை … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக பிப்.19-ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுப்பு: தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக பிப்.19-ம்தேதி சம்பளத்துடன் கூடிய விடுப்புஅளிக்க வேண்டும் என்று தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு தொழிலாளர் துறை செயலர் ஆர்.கிர்லோஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வரும் 19-ம் தேதிநடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும்படி தொழிலாளர் நல ஆணையர், வேலைவாய்ப்பு பயிற்சித் துறை இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக … Read more

பாஜக.வுக்கு முஸ்லிம் பெண்கள் ஆதரவு தருவதால் எதிர்க்கட்சியினருக்கு வயிற்று வலி வந்துள்ளது: உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடி நேரடி பிரச்சாரம்

சகாரன்பூர்: ‘‘மோடியை முஸ்லிம் பெண்கள் பாராட்டி வருவதால், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது’’ என்று பிரதமர் மோடி பேசினார். உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. உ.பி.யின் ஜாட் இன மக்கள் செல்வாக்கு அதிகமுள்ள மேற்கு பகுதியில் 11 மாவட்டங்களை சேர்ந்த 58 தொகுதிகளுக்கு நேற்று முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், சகாரன்பூரில் நேற்று பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல் முறையாக பிரதமர் மோடி பங்கேற்று … Read more

பிப்ரவரி 11: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,31,154 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.10 வரை பிப்.11 பிப்.10 … Read more

மல்யுத்த வீரர் ‘கிரேட் காளி’ பாஜக.வில் இணைந்தார்: பஞ்சாபில் பிரச்சாரம் செய்கிறார்

புதுடெல்லி: பிரபல தொழில்முறை மல்யுத்த வீரர் தலிப் சிங் ராணா. மல்யுத்தத்தில் புகழ்பெற்ற ராணா, அன்புடன் கிரேட் காளி என்று அழைக்கப்படுகிறார். இந்நிலையில், டெல்லி அலு வலகத்தில், மூத்த தலைவர் கள் முன்னிலையில், கிரேட் காளி நேற்று பாஜக.வில் இணைந்தார். இதுகுறித்து கிரேட் காளி கூறும்போது, ‘‘நாட்டுக்காக பிரதமர் மோடி செய்து வரும் பணிகளால், அவர்தான் சிறந்த பிரதமர் என்று உணர்கிறேன். அதனால், நாட்டின் வளர்ச்சிக்காக அவர் எடுக்கும் பணிகளில் நானும் பங்கேற்க வேண்டும் என்ற உணர்வில் … Read more

பிப்ரவரி 11: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,31,154 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

‘இந்து தமிழ்’ செய்தி எதிரொலியாக டெல்லி பல்கலை.யில் 4 தமிழ்ப் பேராசிரியர் நியமனம்: தமிழக தலைவர்கள் வலியுறுத்தலுக்கு பலன்

புதுடெல்லி: ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, டெல்லி பல்கலைக்கழகத்தில் 4 தமிழ்ப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. டெல்லி பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ் மொழியில் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை மற்றும் உயர்க் கல்வி ஆகியவை போதிக்கப்படுகின்றன. தமிழ்த் துறையில் 5-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் ஓய்வு பெற்றும் அப்பணியிடங்கள் 10 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. இதுகுறித்த செய்தி தொடர்ந்து ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியாகி வருகிறது. கடைசியாக கடந்த டிசம்பர் 20-ம் தேதி … Read more