முல்லை பெரியாறு அணை பணியாளர்களுக்கு 6 செயற்கை கோள் செல்போன்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான முல்லை பெரியாறு அணை அடர்ந்த பெரியாறு வன புலிகள் சரணலாயத்தின் நடுவில் அமைந்துள்ளது. இங்கு தரைவழி தொலைபேசி இணைப்பு இல்லை. மேலும், வெள்ளகாலங்களிலும், பருவமழை காலங்களிலும் மழை மேகங்களின் இடர்பாடுகளினால் அலைபேசி தொடர்பும் சரியாக கிடைக்கப்பெறாமல், தொடர்பு துண்டிக்கப்பட்டு அணையின் நீர்மட்டம், நீர்வரத்து, நீர் வெளியேற்றம், மழையளவு போன்ற விபரங்களை உயர் அலுவலர்களுக்கும், தொடர்புடைய மாவட்ட … Read more

நாட்டில் சிதைக்கப்படும் கூட்டாட்சி தத்துவம்: சித்தராமையா ஆதங்கம்

பெங்களூரு: கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாட்டில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியால் வளர்ச்சியில் நாடு 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. நாடு அதல பாதாளத்தில் விழுந்துள்ளது. இதைஅரசின் ஆவணங்களே கூறுகின்றன. நாடு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடன் சுழலில் சிக்கியுள்ளது. இந்திய நாணய மதிப்பு சரிந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் உயர்ந்து வருகின்றன. பணவீக்கம் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வேலையின்மை பிரச்சினை விண்ணை தொட்டுள்ளது. … Read more

இருப்பதை காட்டிக்கொள்வதற்காக உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை பரப்புகிறார்- அமைச்சர் குற்றச்சாட்டு

கோவை: அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:- தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யாமல் தனியாரிடம் வாங்குவதாக கூறுகின்றனர். ஆனால் அன்றே தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 நாட்கள் உற்பத்தி செய்த மின் அளவை நான் கூறினேன். நாங்களும் இருக்கிறோம் என இருப்பை காட்டிக் கொள்ள வாய்க்கு வந்தபடி அண்ணாமலை பேசு வருகிறார். உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை கூறி வருகிறார். எந்த குற்றச்சாட்டுகள் ஆக இருந்தாலும் ஆவணத்துடன் குற்றம்சாட்ட வேண்டும். … Read more

ஆண் குழந்தை பெற்றுத்தரவில்லை என மனைவியை கொடுமைப்படுத்திய கணவன்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி ஆண் குழந்தையை பெற்றுத் தராததால் அவரை அடித்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அந்த வீடியோவில் பெண் கெஞ்சுகிறார். இருப்பினும் கணவரும், அவரது குடும்பத்தினரும் பெண்ணை உதைத்து தள்ளுகின்றனர். அவரை சராமரியாக குத்துகின்றனர். அந்த பெண் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சியும் அவர்கள் விடுவதாக இல்லை. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்த பெண் கொடுத்த போலீசாரிடம் கொடுத்த புகாரில் கூறியுள்ளதாவது.  … Read more

விக்ரம் வெற்றி அரசியலிலும் எதிரொலிக்க வேண்டும்- கட்சியினருக்கு கமல்ஹாசன் உத்தரவு

சென்னை: நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை கமல்ஹாசன் துணிச்சலுடன் எதிர்கொண்டார். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் வெற்றி பெறாவிட்டாலும் குறிப்பிடத்தக்க வகையில் வாக்குகளை பெற்றனர். இது கமல்ஹாசனுக்கும், மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் களம் இறங்கியது. உள்ளாட்சி தேர்தலையும் எதிர்கொண்டது. … Read more

தொலைந்துபோன எருமையை யாருடையது என கண்டுபிடிக்க டி.என்.ஏ. பரிசோதனை

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள அகமதுகர் கிராமத்தில் வசிப்பவர் சந்திரபால் காஷ்யாப். இவரது எருமைகளில் ஈன்ற கன்றுக்குட்டி ஒன்று, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி காணாமல் போனது. இதையடுத்து அவர் பல இடங்களில்  தனது எருமைக்கன்றை தேடி அலைந்துள்ளார். இறுதியொல் அவர் அவரது கிராமத்திற்கு அருகே இருந்த சஹரான்பூரின் பீன்பூர் என்ற கிராமத்தில் சத்வீர் என்பவரிடம் ஒரு எருமைக்கன்று இருப்பதை கண்டறிந்தார். அந்த எருமைக்கன்று தன்னுடையது என்று சந்திரபால் … Read more

பெண் ஊழியர் எரித்துக்கொலை- தொழில் அதிபரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதன் (வயது 50). தொழில் அதிபரான இவர் கோவை மட்டுமல்லாமல் ஈரோட்டிலும் டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். ஈரோட்டில் உள்ள நிறுவனத்தில் பவானியைச் சேர்ந்த 37 வயது பெண் வேலை பார்த்து வந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்த அந்த பெண், நீண்ட நாட்களாக நவநீதனின் நிறுவனத்தில் வேலை பார்த்தார். சம்பவத்தன்று அந்த பெண், கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதனின் வீட்டுக்கு வந்தார். அதன்பின் தீக்காயங்களுடன் அந்த பெண் கோவை அரசு … Read more

ஆந்திராவில் இறந்த பிச்சைக்காரர் வீட்டில் ரூ.3.49 லட்சம் மீட்பு

திருப்பதி: ஆந்திர மாநிலம், காக்கிநாடா, வேலங்கி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா (வயது 75). இவர் அங்குள்ள சிறிய குடிசையில் தங்கி இருந்து கோவில்களில் பிச்சை எடுத்து வந்தார். உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று இறந்தார். ராமகிருஷ்ணாவுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் அங்குள்ள போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். ராமகிருஷ்ணா குடிசை வீட்டில் சோதனை செய்தபோது ரூபாய் நோட்டுகள் சிறிய மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டு இருந்தது. மூட்டைகளை அவிழ்த்து பார்த்தபோது 2000, … Read more

இலங்கை மத்திய வங்கி கவர்னர் நியமன விவகாரம்: கோத்தபய-ரணில் இடையே கருத்து வேறுபாடு

கொழும்பு: இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளித்து வருகிறது. பெட்ரோல்-டீசல், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயந்ததாலும், பற்றாக் குறையாலும் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியதையடுத்து அப்பொறுப்பை ரணில் விக்ரமசிங்கே ஏற்றார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் … Read more

பா.ஜனதாவை ஓரம் கட்ட முடிவு- புதிய அணியை உருவாக்க அன்புமணி முயற்சி

சென்னை: தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பங்கள் வரப்போகும் (2024) பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி மாற்றங்களுக்கான அடித்தளமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருந்தாலும் இப்போதே அதற்கான பணிகளை கட்சிகள் தொடங்கி விட்டன. பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் களம் இறங்கும் தேசிய கட்சிகளான பா.ஜனதாவும், காங்கிரசும் தமிழகத்தில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஜெயலலிதா உயிருடன் … Read more