முதல்வராக இருக்கும் போதே கெஜ்ரிவால் கைது : உச்சநீதிமன்றம் விசாரிக்குமா?

டில்லி டில்லியில் முதல்வராக இருக்கும் போதே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்தும் எனக் கூறப்படுகிறது. டில்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டில்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார். டில்லி உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை கைதுக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது. நேற்று  12 … Read more

ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சுப்பர் கிங்ஸ் கேப்டனாக நியமனம்

சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருத்ரஜ கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார் நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணித்தலைவராக ருதுரஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளாரவிரைவில் இந்தியாவில் நடைபெற உள்ள  உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல்.-ன் 17-வது சீசன் நாளை தொடங்க உள்ளது. நாளைய முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலங்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. சென்னை சூப்பர் கிங் அணியின் புதிய … Read more

சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் மதரீதியான பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புகார்…

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடியின் மதரீதியிலான பேச்சு வெட்கக்கேடானது மட்டுமன்றி சுந்ததிரமான மற்றும் நியாயமான தேர்தல் பிரச்சார நெறிமுறைகளுக்கு எதிரானது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சேலம் மாநாட்டில் பேசிய பிரதமர், “இந்தியா கூட்டணி மீண்டும் மீண்டும் இந்து மதத்தை அவமதிக்கிறது. இந்து மதத்திற்கு எதிரான எண்ணங்களை விதைக்கிறார்கள். பிற மதங்களுக்கு எதிராக பேசுவதில்லை. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு நொடி கூட வீணடிக்காமல் இந்து மதத்தை அவமதிக்கிறார்கள். இதை எப்படி … Read more

முதல்வர் வருகை :  திருச்சியில் டிரோன்களுக்கு தடை

திருச்சி தமிழக முதல்வரின் வருகையையொட்டி திருச்சியில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது பதிவான வாக்குகளின் எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியுள்ளது.அனைத்துக் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளர்க் தயாராகி வருகின்றன. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நாளை மாலை திருச்சி வருகிறார். திருச்சி சிறுகனூரில் நடைபெறும் தேர்தல் பிரசார … Read more

வரும்  26 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் பண்ணாரி மாரியம்மன் திருவிழாவையொட்டி வரு, 26ஆம்  தேதி  அன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.  ஆண்டு தோறும் இந்த கோவிலில் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதிப்பார்கள். நடப்பு  ஆண்டுக்கான திருவிழா கடந்த 11 ஆம்தேதி பூச்சாற்றுடன் தொடங்கியது. கடந்த 19 ஆம் தேதி கம்பம் சாட்டுதல் விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வருகிற 26 ஆம் தேதி  அதிகாலை 4 மணிக்குக் குண்டத்தில் பக்தர்கள் இறங்கி … Read more

தமிழகத்தில் 20 தொகுதிகளில் பாஜக  போட்டி

சென்னை பாஜக தமிழகத்தில் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார், இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம். பாஜக தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான பங்கீடுகளை முடித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் 20 தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிடுகிறது. எங்கள் கூட்டணிக் கட்சிகள் 19 இடங்களில் போட்டியிடுகின்றனர்.   எந்த நேரத்திலும் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலை எதிர்பார்க்கலாம். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் 3 இடங்களில் போட்டியிடுகிறது. கூட்டணி வேட்பாளர்கள் 4 தொகுதிகளில் பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தில்  போட்டியிடுகின்றனர். மொத்தம்  24 தொகுதி … Read more

ஐபிஎல் போட்டியைக் காண ரசிகர்களுக்கு இலவச பேருந்து பயணம்

சென்னை நாளை சென்னையில் நடைபெறும் ஐ பி எல் கிரிக்கெட் போட்டியைக் காண ரசிகர்களுக்குப் பேருந்து பயணம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22 முதல் ஏரல் 7 வரை ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் நடைபெறுகிறது. நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. போட்டிக்கான டிக்கெட் இணையத்தில் விற்பனை செய்யப்பட்டு இணையதளம் முடங்கும் அளவிற்கு சி.எஸ்.கே. ரசிகர்கள், போட்டியைப் பார்ப்பதற்கு ஆவலாக உள்ளனர். ரசிகர்களுக்கு மேலும்  ஒரு இனிப்பான … Read more

தேர்தல் பத்திரம் 2019 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரையிலான தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது…

பாரத ஸ்டேட் வங்கிக்கு தேர்தல் பத்திரங்களின் தரவுகளை முழுமையாக அளிக்க உச்சநீதிமன்றம் இன்று காலக்கெடு நிர்ணயித்தது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் பல்வேறு தகவல்களை வழங்கிய எஸ்.பி.ஐ. வங்கி தேர்தல் பத்திரம் தொடர்பான முழுமையான தகவல்களை வழங்காமல் இருந்தது குறித்து நீதிமன்றம் வன்மையாகக் கண்டித்தது. இதுதொடர்பாக அரசு மற்றும் வங்கி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களின் நடவடிக்கையை கண்டித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்ச் 21ம் தேதிக்குள் தேர்தல் பத்திரம் தொடர்பான முழுமையான தகவலை வெளியிடவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த … Read more

தமிழக வேட்பாளர் முதற்கட்ட பட்டியலை வெளியிட்ட பாஜக

சென்னை தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் ஏறத்தாழ தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாஜக கூட்டணியில், பா.ம.க 10 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகள், டி.டி.வி தினகரனுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தாமரை சின்னத்தில்  ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ளன. அதாவது, 4 கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளன. இன்று கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்ட … Read more

கடந்த 8 ஆண்டுகளில் ஈஷா யோகா ஐயத்தில் 6 பேர் மாயம்

சென்னை கடந்த 8 ஆண்டுகளில் கோவை ஈஷா யோகா மையத்தில் 6 பேர் மாயமாகி உள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டம், குலசேகரபட்டியைச் சேர்ந்த விவசாயி திருமலை  காணாமல் போன தன்னுடைய சகோதரை மீட்டுத் தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். மனுவில், தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா என்பவர், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தன்னார்வலராக பணியாற்றி வந்ததாகவும், கடந்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து தன்னை தொலைப்பேசியில் அழைத்து, கணேசன் … Read more