ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: நிரந்தர வைப்பீடாக ரூ.15 கோடியை  செலுத்த நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷாரின்  ‘மருது’ பட பைனாஸ் சம்பந்தமாக, விஷால் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் ரூ.21 கோடி பெற்ற கடன் தொகையை, அவரது வேண்டு கோளின்படி,  பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான லாகா செலுத்தியது. இதற்கான இருவருக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், குறிப்பிட்டபடி, விஷால் லைகா நிறுவனத்திடம் பணத்தை திருப்பி கொடுக்காததால், லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த … Read more

12/03/2022: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை, 2வது நாளாக உயிரிழப்பும் இல்லை…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 13 மாவட்டங்களில் புதிதாக தொற்று பாதிப்பு இல்லை என்பதுடன்,   இன்று  2வது நாளாக கொரோனா உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 105 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 34,51,815 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் … Read more

ஓவைசியின் உ.பி. தேர்தல் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒன்றியம் குறித்த விளக்கம் குறித்து விமர்சிக்கும் கார்டூன் – ஆடியோ

உத்தரபிரதேச மாநிலத்தில், பாஜகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை பிரித்த ஓவைசியன் அரசியல் குறித்தும், ஒன்றிய அரசு குறித்து தமிழ்நாடு  ஆளுநர் ஆர்.என்.ரவி கூறும் விளக்கம் குறித்தும் ஓவியர் பாரியின் கார்டூன் விமர்சித்துள்ளது. https://patrikai.com/wp-content/uploads/2022/03/Pari-cartoon-Audio-2022-03-12-at-5.35.37-PM.ogg

தமிழ்நாட்டில் விரைவில் 336 நடமாடும் மருத்துவமனைகள்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் 336 நடமாடும் மருத்துவமனைகளை விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும், இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்றும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை  செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்ற தடுப்பூசி முகாமை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று, கொரோனா உயிரிழப்பு பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளதாகவும், தமிழகத்தில் தொற்று பாதிப்பு வெகுவாக … Read more

பைத்தியக்காரிக்கு பதிலளிப்பது சரியாக இருக்காது! மம்தா குறித்து காங்கிரஸ் தலைவர் ஆதின்ரஞ்சன் சவுத்திரி

கொல்கத்தா: “பைத்தியக்காரிக்கு பதிலளிப்பது சரியாக இருக்காது என்று மம்தா குறித்து காங்கிரஸ் தலைவர் ஆதின்ரஞ்சன் சவுத்திரி காட்டமாக கூறினார். 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. உ..பி.யில் போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட்டையே பறி கொடுத்து உள்ளது. இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி கூறுகையில், “காங்கிரஸ் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது, காங்கிரசை நம்பி இருக்க முடியாது.  … Read more

சோனியாகாந்தி தலைமையில் நாளை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்..!

டெல்லி: 5 மாநில சட்டமன்ற தேர்தலை குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாளை மாலை 4 மணிக்கு டெல்லியில் கூடுகிறது. உத்திரபிரதேசம் , பஞ்சாப் , கோவா , உத்தராகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த பஞ்சாபில், ஆட்சியை பறி கொடுத்தது. மேலும், உபி.உள்பட மற்ற 4 மாநிலங்களிலும் … Read more

பிரபுதேவாவின் ‘ரேக்ளா’: கிளாப் அடித்து துவங்கி வைத்தார் மிஷ்கின்!

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் எஸ். அம்பேத் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் திரைப்படம் ‘ரேக்ளா’. பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை, ‘வால்டர்’ பட இயக்குநர் அன்பு இயக்குகிறார்.ஜிப்ரான் இசையமைக்கிறார். பிரபுதேவாவின் நடிப்பில் 58-வது படமாக உருவாகும் ‘ரேக்ளா’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இவ்விழாவில் தயாரிப்பாளர்கள் ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன், சி. வி. குமார், ராக்ஃபோர்ட் முருகானந்தம், இயக்குநர்கள் மனோஜ், தாஸ் ராமசாமி மற்றும் கோபி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். … Read more

கதைத்திருட்டு + த்ரில்லர்.. ‘படைப்பாளன்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

கதை திருட்டு சம்பவங்களை மையப்படுத்தி பிரபுராஜா இயக்கி, நடித்துள்ள படம், ‘படைப்பாளன்’. இந்த படத்தை தியான் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.நட்சத்திரம் செபஸ்தியான், பிரபுலீன்பாபு, ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மனோபாலா, இயக்குனர் தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்முருகன், காக்கா முட்டை ரமேஷ் விக்கி, அஷ்மிதா, வளவன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்முருகன் ஒளிப்பதிவு செய்ய, கிருபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. படம் குறித்து இயக்கி நடித்துள்ள … Read more

தமிழகத்தில் மலையோர மாவட்டங்களில் லேசான மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் மலையோர மாவட்டங்களில் லேசான மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 12 முதல் 14-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே … Read more

சிங்கம் சிலையுடன் அழகிய வேலைப்பாடுகளுடன் சென்னை அண்ணா மேம்பாலம் ரூ.9 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது!

சென்னை: சென்னையின் மையப்பகுதியில் உள்ள அண்ணா மேம்பாலம் சிங்கம் சிலை உள்பட பல்வேறு கலையலங்காரத்துடன் ரூ.9 கோடி செலவில் புதுப்பிக்கப் படுகிறது. இதற்கான உத்தரவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணா மேம்பாலம், முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி ஆட்சி காலத்தில், 1971ம் ஆண்டு அடிக்கல் நாட்டப் பட்டு 1973ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த பாலமானது, அந்த காலக்கட்டத்தில் பிரபலமான ஜெமினி ஸ்டூடியோ அருகே அமைந்திருந்ததால், இதை  ஜெமினி மேம்பாலம் என்றும் அழைப்பது வழக்கம். … Read more