சித்ரா ராமகிருஷ்ணாவின் ‘இமயமலை சாமியார்’ ஆனந்த் சுப்பிரமணியம்தான்! நீதிமன்றத்தில் சிபிஐ திடுக்கிடும் தகவல்…

மும்பை: தேசிய பங்கு சந்தை முறைகேட்டில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ‘இமயமலை சாமியார்’, அவரால் பணி நியமனம் செய்யப்பட்ட  ஆனந்த் சுப்பிரமணியம்தான் என டெல்லி  நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்து உள்ளது. தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் குழு இயக்க அதிகாரியான ஆனந்த் சுப்ரமணியன் “இமாலய யோகி” போல் ஆள்மாறாட்டம் செய்ததாகவும்,  முன்னாள் எம்டி சித்ரா ராமகிருஷ்ணா எடுத்த முடிவுகளிலும் செல்வாக்கு செலுத்துவதாகவும் அவர் ஆதிக்கம் செலுத்தி வந்ததாகவும், டெல்லி நீதிமன்றத்தில் … Read more

கொரோனாவுக்கு இந்தியாவில் 41 லட்சம் பேர் பலி? லான்செட் மருத்துவ இதழ் பரபரப்பு தகவல் – இந்திய அரசு மறுப்பு…

டெல்லி: கொரோனாவுக்கு இந்தியாவில்  41 லட்சம் பேர் பலியாகி உள்ளதாக பிரபல மருத்துவ ஆய்வு இதழான லான்செட் இதழில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்திய அரசு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. இது உலகின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான பொது மருத்துவ இதழ்களில் ஒன்று லான்செட். இதற்கு லண்டன், நியூயார்க் மற்றும் பெய்ஜிங் கிளைகள் உள்ளன. மருத்துவம் குறித்த தகவல்களை மதிப்பாய்வு செய்து, வெளியிட்டு வருகிறது. 1823 ஆம் ஆண்டில் … Read more

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பும் கடைசிகட்ட மாணவர்களை விமான நிலையத்தில் வரவேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பும் கடைசிகட்ட மாணவர்களை  சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் வரவேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆளாகி உள்ள உக்ரைனில், மருத்துவம் படித்து வந்த  தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இறுதியாக சுமி நகரில் சிக்கிய மாணவர்களை மீட்டு இந்திய விமானம் நேற்று மாலை டெல்லி வந்தடைந்தது. அவர்களை திமுக எம்.பி. சிவா தலைமையிலான தமிழக மீட்பு குழுவினர் வரவேற்றனர். இதையடுத்து தமிழக மாணவர்கள் 53 பேர் இன்று டெல்லியில் … Read more

ஸ்டான்லியில் பழைய சோறின் மகத்துவம் குறித்து ஆராய்ச்சி – இனி நிரந்தர அடிப்படையில்தான் பணி நியமனம்! அமைச்சர் மா.சு. அசத்தல்….

சென்னை:  அரசு மருத்துவமனையில் இனி நிரந்தர அடிப்படையில்தான் பணி நியமனம்; ஒப்பந்த முறை பணி நியமனம் இருக்காது என்றும் ஸ்டாலின் மருத்துவ மனையில் பழைய சோறின் மகத்துவம் குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருவதாகவும், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணயின் கூறியுள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மா.சு.வின் அறிவிப்புக்கு முன்களப் பணியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.14.5 கோடியில் தொடங்கப்பட்ட ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையம்,ரூ.2.44 கோடியில் ‘வாழ்வூட்டும்மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிதுறை’யாக … Read more

உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்கள் முழுமையாக மீட்கப்பட்டதாக திருச்சி சிவா தவல்…

சென்னை: உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்கள் முழுமையாக மீட்கப்பட்டு விட்டதாக திமுக எம்பி திருச்சி சிவா தவவல் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் இடையே தொடர்ந்து போர் தொடர்ந்து வருவதால், அங்கு மருத்துவம் உள்படி உயர்படிப்புபடிக்க சென்ற தமிழக மீனவர்கள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, மத்திய அரசு உதவியுடன் தமிழகஅரசும் சிறப்பு குழு அமைத்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வந்தது. இதையடுத்துஆபரேசன் கங்கா மூலம் சிறப்பு விமானங்களை அனுப்பி உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்கள் அண்டை நாடுகளின் … Read more

அருள்பாலிக்க வருகிறார் அன்னபூரணி அரசு அம்மா… எனர்ஜி தர்ஷனுக்கு ரூ. 700 கட்டணம்

ஜனவரி 1 ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததன் மூலம் தமிழகம் முழுவதும் வைப்ரேஷனை ஏற்படுத்தியவர் அன்னபூரணி எனும் அன்னபூரணி அரசு அம்மா. கணவரை பிரிந்து இன்னொரு பெண்ணின் கணவர் உடன் திருமணம் செய்ய முயன்ற அன்னபூரணி, ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற தொலைகாட்சி நிகழ்ச்சியில் இது தொடர்பான பஞ்சாயத்துக்கு வந்து பல ஆண்டுகளுக்கு முன்பே பிரபலமானார். இதனால் செங்கல்பட்டில் நடக்க இருந்த அன்னபூரணி அரசு அம்மாவின் அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதோடு, காவல்துறை, … Read more

தவறுதலாக பாகிஸ்தான் மீது ஏவுகணை வீசியதற்கு இந்தியா வருத்தம்

டில்லி பாகிஸ்தான் மீது தவறுதலாக ஏவுகணை ஏவப்பட்டதாக தெரிவித்த இந்திய அரசு அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளது. கடந்த 9 ஆம் தேதி அன்று இந்திய ராணுவம் ஏவுகணை பராமரிப்பு பணி நடத்தி உள்ளது.  அப்போது ஒரு ஏவுகணை பாகிஸ்தான் பகுதிக்குச் செலுத்தப்பட்டுள்ளது.  இது உலக அளவில் ப்ரரபரப்பை ஏற்படுத்தியது.  இது குறித்து இன்று இந்திய அரசின் பாதுகாப்புத்  துறை விளக்கம் அளித்துள்ளது. இந்திய அரசு, ”கடந்த 2022 ஆம் வருடம் மார்ச் மாதம் 9 ஆம் தேதி அன்று வழக்கமான ஏவுகணை பராமரிப்பு பணி நடத்தப்பட்டது.  அப்போது ஏற்பட்ட … Read more

நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை – அமைச்சர் சாரங்கபாணி

சென்னை: நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சாரங்கபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் முழுமையாக பயன்பெறுவதில் கழக முழு ஈடுபாடு கொண்டுள்ளது. எந்த தவறுக்கும் இடம் தராது, முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்றும், அந்த வரிசையில், 313 கண்காணிப்பாளர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கழக அரசு என்றும் … Read more

கேரளாவில் இல்லத்தரசிகளின் வேலைவாய்ப்பை பெருக்க நிதி ஒதுக்கீடு

திருவனந்தபுரம்: கேரளாவில் இல்லத்தரசிகளின் வேலைவாய்ப்பை பெருக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில், கேரளாவில் இல்லத்தரசிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில், வீட்டிற்கு அருகில் வேலை என்ற திட்டத்தின் கீழ் ரூ. 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் நிலம் கையகப்படுத்தப்பட்டு அதன் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இதற்கு எதிராக பாரிய எதிர்ப்புகளை மீறி கேரள அரசு திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது என்பதை பட்ஜெட் ஒதுக்கீடு தற்போது தெளிவுபடுத்தியுள்ளது. NH-66 க்கு … Read more

முதியவர்களுக்கு இலவச சவாரி சென்னையை சேர்ந்த பெண் ஆட்டோ டிரைவர்

சென்னை: சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜி அசோக், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு இலவச சவாரி வழங்குகிறார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 23 வருடங்களாக நான் ஆட்டோ ஓட்டி வருகிறேன்; இரவு 10 மணிக்கு மேல் மாணவிகள், முதியவர்கள் மற்றும் பெண்களுக்கும் இலவச சவாரி வழங்குகிறேன்; அவசர காலங்களில் மருத்துவமனைக்கு இலவச சவாரிகளையும் வழங்குகிறேன்,” என்று தெரிவித்தார்.