தமிழகத்தில் இன்று 112 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  11/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,51,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 42,241 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,49,21,412 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இதுவரை 34,51,720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று ஒருவர் கூட மரணம் அடையவில்லை.  இதுவரை 38,023 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 327 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,11,226 பேர் குணம் அடைந்து வீடு … Read more

முக்கிய கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்கள் தோல்வி அடைந்த மாநிலம் எது தெரியுமா?

டேராடூன் உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது சட்டசபைத் தேர்தல் நடந்து முடிவடைந்துள்ளது.  இந்த மாநிலத்தில்  முதல்வர் வேட்பாளராக பாஜக சார்பில் தற்போதைய முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவிக்கப்பட்டிருந்தார்.  தவிரக் காங்கிரஸ் கட்சி சார்பில் ஹரீஷ் ராவத் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதில் பாஜக முதல்வர் வேட்பாளரான புஷ்கர் சிங் தாமி தம்மை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரிடம் 6579 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.  காங்கிரஸ் கட்சியின் முதல்வர் … Read more

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு 2வது பருவ தேர்வு தேதிகள் அறிவிப்பு –  முழு பட்டியல்

டெல்லி: சிபிஎஸ்இ கல்வி முறையில் படித்து வரும், 10ம் வகுப்பு 12ஆம் வகுப்புக்கான 2வது பருவ தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை இரு பகுதிகளாக, அதாவது இரு பருவங்களாக பிரித்து தேர்வு நடத்தப்படும் என கடந்தஆண்டு சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்தது. ஒவ்வொரு பருவத் தேர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஏதேனும் ஒரு தேர்வை நடத்த … Read more

சீனாவில் புதிய வைரஸ் பரவல்: சாங்சுன் மாநிலத்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிப்பு…

பீஜிங்: சீனாவில் புதிய வைரஸ் பரவல் காரணமாக சாங்சுன் மாநிலத்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் கடந்த 2019ம்ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் மாநிலத்தில் இருந்து பரவியது. இந்த வைரஸ் பரவல் தற்போதுதான் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில், சீனாவில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது. புதிய வைரஸ் தீவிர பரவல்  காரணமாக அதை கட்டுப்படுத்தும் வகையில், மத்தியில் வடகிழக்கு தொழில்துறை மையமான சாங்சுனில் … Read more

2024 பாராளுமன்ற தேர்தலை மாநில தேர்தல் வெற்றிகள் தீர்மானிக்காது! பிரசாந்த் கிஷோர் டிவிட்…

டெல்லி: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை மாநில தேர்தல் வெற்றிகள் தீர்மானிக்காது என பாஜகவின் வெற்றிக் கொண்டாட்டம் குறித்து தேர்தல் சாணக்கியரான  பிரசாந்த் கிஷோர் டிவிட் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த  5 மாநில  நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் தவிர மற்ற  4 மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் பாஜக கட்சியினர் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று டெல்லி பாஜக தலைமை … Read more

மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் பெண்கள் உடை அணிய கூடாது! தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை: மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் பெண்கள் உடை அணிய கூடாது; பெண்கள் உடையில் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என தெலுங்கானா மாநில கவர்னர்  தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் கல்லூரி மாணவர்களுக்கான ஒரு நாள் ஊடக பயிற்சி முகாம் நடைபெற்றது. இதை தொடங்கி வைத்து பேசிய தெலுங்கானா மற்றும்  புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மார்ச் 8 மட்டுமின்றி அனைத்து தினமுமே பெண்களுக்கான … Read more

5மாநில சட்டமன்ற தேர்தலில் உ.பி.யில் மட்டும் ஆறரை லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களிப்பு….

டெல்லி: நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சுமார் 8லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர் என அகில இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இதில் அதிகபட்சமாக உ.பி.யில் மட்டும் சுமார் ஆறரை லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளதாக தெரிவித்து உள்ளது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களு நடந்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை நேற்று நடை பெற்றது. இதில், உ.பி, மணிப்பூர், உத்தரகண்ட் , கோவா மாநிலங்களில் … Read more

5 மாநில தேர்தல் தோல்வி: விரைவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம்…

டெல்லி: 5 மாநில தேர்தல் தோல்வியால் குறித்து விவாதிக்க விரைவில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா தெரிவித்து உள்ளார். தேசிய அளவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து வருகிறது. தற்போது நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலிலும் பெரும் தோல்வி அடைந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தையும் இழந்துள்ளது. தற்போது ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி இருந்து வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. தொடர் … Read more

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமீன்! உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே முந்தைய வழங்கில் வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமின்படி, திருச்சியில் தங்கியிருந்து காவல்நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலன்று., சென்னை ராயபுரத்தில், கள்ள ஓட்டுப் போட முயன்றதாக,  திமுக நபர் நரேஷ் என்பதை பிடித்த அதிமுகவினர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில்,அவரது  சட்டையை கழற்றி, சாலையில் இழுத்துச் சென்றனர். இந்த விவகாரத்தில் அமைச்சர் ஜெயகுமார் … Read more

அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள் தான் எஜமானர்கள்! ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள் தான் எஜமானர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 2வது நாளாக நடைபெறும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கான மாநாட்டில் கூறினார். தமிழக தலைநகர் சென்னையில், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் கலந்துகொள்ளும் 3 நாள் மாநாடு நேற்று (மார்ச் 10ந்தேதி) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நலத்திட்டங்கள், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டின் … Read more