தமிழகத்தில் இன்று 129 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  10/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,51,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 41,908 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,48,79,171 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இதுவரை 34,51,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 38,023 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 354 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,11,892 பேர் குணம் அடைந்து வீடு … Read more

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் ஆய்வு

டில்லி நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் எனக் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது.  இதில் பஞ்சாபில் ஆளும் கட்சியாக  இருந்த காங்கிரஸ் கட்சி ஆம் அத்மி கட்சியிடம் அட்சியை இடந்துள்ளது.  பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 90 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இம்மாநில முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பகவந்த் … Read more

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12-ந் தேதி முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  வரும் 12-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனைஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், 12, 13,14ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னையில் இரு நாட்களுக்கு … Read more

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தமிழ்நாடு பேரிடர் தணிப்பு நிதி உருவாக்கம்! தமிழகஅரசு

சென்னை:  பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தமிழ்நாடு பேரிடர் தணிப்பு நிதி உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் மழை வெள்ளம் பேரிடர் அபாய மதிப்பீடு மற்றும் சேதங்களின் மேம்பட்ட பகுப்பாய்வினை மேற்கொள்ளும்  பணிக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.  இந்த அமைப்புக்கு  மாநிலத்தின் வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் பேரிடர் மேலாண்மை முகமையின் பொறுப்பாகும். பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகளினால் பாதிப்புகளுக்குள்ளாகிய இடங்களை சிறப்பாக கவனிக்கப்பட வேண்டும். பேரிடர் … Read more

எங்களின் யுத்தம் தற்போதுதான் தொடங்கியுள்ளது! 5மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து பிரியங்கா காந்தி….

டெல்லி: மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்; எங்களின் யுத்தம் தற்போதுதான் தொடங்கியுள்ளது என 5 மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து  பிரியங்கா காந்தி கருத்துதெரிவித்து உள்ளார். நாட்டு மக்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய  உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. பஞ்சாபில் ஆம்ஆத்மி ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அங்கு ஏற்கனவே ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி உள்கட்சி பிரச்சினையால் சிக்கி சின்னப்பின்னமான … Read more

பகத்சிங் அருங்காட்சியகத்தில் ஆம்ஆத்மி பதவி ஏற்பு விழா! பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான்

சண்டிகர்: பஞ்சாபில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ள ஆம்ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், ஆம்ஆத்மி பதவி ஏற்பு விழா, பகத் சிங் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள கிராமத்தில் நடைபெறும் என்று கூறியதுடன் பல்வேறு அதிரடி தகவல்களையும் தெரிவித்து உள்ளார். நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 4 மாநிலங்களில் பாஜக … Read more

தனுஷ் நடிக்கும் மாறன் நாளை ரிலீஸ்…

தனுஷ் – மாளவிகா மோகனன் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். கடந்த வாரம் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானது. மாறன் திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் நாளை வெளியாக இருக்கிறது.

4மாநில சட்டமன்ற தேர்தல் வெற்றியால் மீண்டும் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்படும்?

4மாநில சட்டமன்ற தேர்தல் வெற்றியால் மீண்டும் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்படலாம் என்று ஓவியர் பாரியின்கார்டூன் விமர்சித்துள்ளது.

போர் நிறுத்தம் ஏற்படுமா? ரஷியா- உக்ரைன் நாடுகளின் மந்திரிகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!

கீவ்: ரஷியா- உக்ரைன் நாடுகளின் மந்திரிகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை  நடைபெறுகிறது. இதற்கான முயற்சியை துருக்கி எடுத்துள்ளது. உக்ரைன் – ரஷ்ய மந்திரிகள் நேட்டோ விவகாரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. பிப்ரவரி 14ந்தேதி தொடங்கிய போர் இன்றுவரை நீடித்து வருகிறது. இதற்கிடையில் உலக நாடுகளில் வலியுறுத்தல் காரணமாக 3 முறை அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இதில் முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த துருக்கி … Read more

திமுக எம்.பி. மகன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…

சென்னை: திமுக எம்.பி. மகன் என்.ஆர்.இளங்கோ அவர்களின் மகன் சாலை விபத்தில் உயிரிழந்ததற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நினைத்துப் பார்க்கவே உள்ளம் அஞ்சி நடுங்குகிறது என தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகன் ராகேஷ் புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும்போது விழுப்புரம் கோட்டகுப்பம் அருகே  தடுப்புச் சுவரில் கார் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இதையடுத்து,  திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோவிற்கு திமுகவினர் உள்பட … Read more