நாளை பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்

பழனி நாளை பராமரிப்பு பணி காரணமாக பழனிமலை முருகன் கோவிலில் ரோப் கார் சேவை இயங்காது. அருள்மிகு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்குத் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அந்த பக்தர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. தவிர பக்தர்கள் மலைக்கோவிலுக்குச் சென்று வர ரோப் கார், மின் இழுவை ரயில் ஆகிய சேவைகளும் உள்ளன. இவற்றில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் … Read more

மழைநீர் வடிகால் பணிகளைப் பருவமழைக்கு முன்பு முடிக்க அமைச்சர் நேரு உத்தரவு

சென்னை மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு முடிக்க அமைச்சர் கே என் நேரு உத்தரவு இட்டுள்ளார். நேற்றி தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டிட வளாக கூட்டரங்கில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தற்போது பெய்த மழையினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக … Read more

எதிர்க்கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணிக்கும் மாயாவதி

லக்னோ பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக மாயாவதி அறிவித்துள்ளார். ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும் பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் இதையொட்டி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.  நாளை பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில்  பாஜகவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.  நகர் முழுவதும் … Read more

ஜோ பைடன் மனைவிக்குப் பிரதமர் மோடி 7.5 கேரட் வைரம் பரிசளிப்பு

வாஷிங்டன் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் மனைவி ஜில் பைடனுக்கு 7.5 கேரட் வைரம் ஒன்றை பரிசளித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவர் மனைவி ஜில் பைடன் ஆகியோர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.க்கு சென்றடைந்த பிரதமர் மோடியை வரவேற்றனர். பின்பு, மோடி இந்திய நடனத்தின் துடிப்பான கலாச்சாரத்துடன் புதிய தலைமுறையினரை இணைக்க உதவும், டி.எம்.வி. அடிப்படையிலான ஸ்டுடியோ தூம் என்ற இந்திய நடன ஸ்டுடியோவின் இளம் நடனக் கலைஞர்களின் நடன நிகழ்ச்சியை அமெரிக்க அதிபர் … Read more

லியோ படத்தில் விஜய் பாடிய ‘நா ரெடி’ பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது. அனிருத் இசையில் ‘நா ரெடி’ என்ற இந்த பாடலை விஜய் பாடியுள்ளார். #NaaReady is all yours now! Thank you for making this a special one @actorvijay nahttps://t.co/LKksHYMCY5 #Leo 🔥🧊 pic.twitter.com/jH8opfyJVI — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 22, 2023 விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் இல்லாமல் கூட்டமா : ராகுல் காந்தி விமர்சனம்

டில்லி மணிப்பூர் விவகாரம் குறித்த கூட்டம் பிரதமர் மோடி இல்லாத போது நடப்பது குறித்து ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையே மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. மாநிலத்தில் உள்ள குக்கி இன மக்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் போல மைத்தேயி இன மக்களையும் பழங்குடி இன பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது தொடர்பான பிரச்சனையில் ஏற்பட்ட மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர். எனவே … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு ஜூன் 27 ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்ததாகக் கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், கைது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் செந்தில் பாலாஜி மனைவி … Read more

செந்தில் பாலாஜி வழக்கு 27ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

சென்னை: செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வரும் 27ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. சட்டவிரோத பணபரிவர்த்தனை தண்டனை சட்டத்தின் கீழ் மாநில அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. இதையடுத்து, அவருக்கு ஏற்பட்ட உடல்நிலைக் குறைபாடு காரணமாக சென்னை ஓமந்தூரார் … Read more

அவதூறு வழக்கில் கைதான பாஜக ஆதரவாளர் உமா கார்க்கியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

கோவை: அவதூறு வழக்கில் கைதான பாஜக ஆதரவாளர் உமா கார்க்கியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அண்மையில், தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ் மற்றும் கல்விக்கான ஊக்கத்தொகையை வழங்கினார் நடிகர் விஜய். விழாவில் பேசிய விஜய் “அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி மாணவ, மாணவிகள் படித்து தெரிந்து கொள்ள … Read more

ஹோட்டல் நிர்வாகத்தை ஏமாற்றி 2 ஆண்டுகள் தங்கிய விருந்தினர்… ஊழியர் மற்றும் விருந்தினர் மீது ரூ. 58 லட்சம் மோசடி புகார்…

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகில் உள்ள ரோஸேட் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கிய நபர் சுமார் 2 ஆண்டுகளாக விடுதிக் கட்டணம் செலுத்தாமல் தங்கியது தெரியவந்துள்ளது. 2019 மே 30 ம் தேதி ஹோட்டலில் ரூம் எடுத்த அங்குஷ் தத்தா 2021 ஜனவரி 22 வரை அங்கு தங்கியுள்ளார். மொத்தம் 603 நாட்கள் இங்கு தங்கிய அங்குஷ் தத்தா இதற்கான அறை வாடகை ரூ. 58 லட்சத்தை தராமலே கம்பி நீட்டியுள்ளார். மூன்று … Read more