ரூ. 4 கோடி விவகாரம்: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி தொடர்பாக, நெல்லை மாவட்ட பாஜக வேட்பாளர்  நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்மீது  நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம்,  விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளார். மக்களவை தேர்தலையொட்டி, கடந்த 6-ஆம் தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 4 கோடி பணம் தோ்தல் பறக்கும் படையினரால் … Read more

மகாவீா் ஜெயந்தி: 21ந்தேதி இறைச்சி கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னையில்  இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. இது இறைச்சி வியாபாரிகளியே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, . பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,  மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும், ஜெயின் கோயில்களிலிருந்து 100 மீட்டா் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கூடங்களும் ஏப். 21ஆம் தேதி மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த … Read more

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.23 லட்சம் மாணவா்கள் சோ்க்கை!

சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும்  அரசுப் பள்ளிகளில் நிகழாண்டு இதுவரை 3.23 லட்சம் மாணவா்கள் சோ்ந்துள்ளனா் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்றதும்,  தமிழக மாணவர்களிடையே கல்வியை மெருகேற்றும் வகையில்,  மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், மாணவ மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது.  இதனால், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்நது, நடப்பாண்டு, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் … Read more

மன்சூர் அலிகானுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! 

சென்னை: வேலூர் மக்களவைத் தொகுதியில் தனித்து போட்டியிடும்,  வேட்பாளரும், நடிகருமான மன்சூர் அலிகான் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக  தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ்நாட்டில் 18வது மக்களவைக்கான நாடாளுமன்ற  தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் 17ந்தேதி மாலை 6மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. இந்த தேர்தலில், நடிகர் மன்சூர் அலிகான், தனது … Read more

நாளை மறுதினம் வாக்குப்பதிவு: இன்றுமாலை மாநிலம் முழுவதும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு…

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் இன்று  காவல்துறையினர், துணைராணுவத்தினர், மத்திய பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்துகின்றனர். பதற்றமான வாக்குச்சாடிகள் அமைந்துள்ள பகுதிகளில் மட்டும் நாளையும் கொடி அணிவகுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப். 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,  இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. இதையடுத்து, பாதுகாப்பான முறையில் தோ்தலை நடத்துவதற்கு தமிழக காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அதன்படி, தோ்தல் … Read more

மேற்குவங்க மாநில பல்கலைக்கழக துணைவேந்தர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தின் தலையீட்டை தொடர்ந்து கவர்னர் ஒப்புதல்…

டெல்லி: நாடு முழுவதும் மத்திய பாஜக அரசுக்கும், எதிர்க்கட்சிகளும் ஆளும் மாநிலங்களுக்கு இடையேயான மோதல் போக்கு நீடித்து வருகிறது. மாநில அரசுகளின் சட்டங்கள், மற்றும் விதிகளுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிக்கப்படும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. பின்னர், மாநில அரசு உச்சநீதிமன்றத்தை நாடியதும், அதற்கு கவர்னர்கள் ஒப்புதல் வழங்கும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. இதனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தை நாடியே தங்களது உரிமையை பெற்று வருகின்றன. தமிழ்நாட்டிலும்,  வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம், சட்ட மசோதாக்களுக்கு … Read more

“பிரதமர் கடலுக்கு அடியில் சென்றார்.. ஆகாயத்தில் பறந்தார்.. ஆனால் மக்களை மறந்துவிட்டார்!” ராகுல்காந்தி விமர்சனம்

லக்னோ: “பிரதமர் கடலுக்கு அடியில் சென்றார்.. ஆகாயத்தில் பறந்தார்..  ஆனால், இரண்டுக்கும் இடையில் இருக்கும் மக்களை மறந்துவிட்டார் என உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும்  காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விமர்சனம் செய்தார். மேலும்,  ராகுலிடம் அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,  கட்சி தலைமை என்ன உத்தரவிடுகிறதோ அதன்படி நடப்பேன். எங்கள் கட்சியில், வேட்பாளர்கள் தேர்வு எல்லாம் தலைமை தான் முடிவு செய்யும்” என ராகுல் பதிலளித்தார். ராகுல்காந்தி தற்போது … Read more

ராம நவமி தினத்தை ஒட்டி அயோத்தி ராமர் சிலை நெற்றியில் சூரிய திலகம்…

ராம நவமி தினத்தை முன்னிட்டு அயோத்தி ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி திலகம் போல் ஏற்பட்டது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டிய பின் வரும் முதல் ராம நவமி என்பதால் உ.பி. மாநிலத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சித்திரை மாதம் வளர்பிறை நவமி அன்று கொண்டாடப்படும் ராம நவமி நிகழ்ச்சிக்காக அயோத்தி ராமர் கோயிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி 58 மி.மீ. அளவிலான … Read more

இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் அல்ல… இசை மும்மூர்த்திகள் எல்லோருக்கும் மேலானவர்கள் : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

இசை மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீக்ஷிதர், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம் ஆனால் நீங்கள் (இசையமைப்பாளர் ஆர். இளையராஜா) அப்படிச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஆர். மகாதேவன் கூறினார். இளையராஜா இசையமைத்த பாடல்கள் மீதான உரிமைகள் தொடர்பாக எக்கோ ரெக்கார்டிங் பிரைவேட் லிமிடெட் தொடர்ந்த வழக்கு கடந்த ஏப்ரல் 10ம் தேதி நீதிபதி முகமது ஷபீக் முன் விசாரணைக்கு வந்தது. 1970கள் மற்றும் 1990 … Read more

மோடியைப் போல் ஒரு வசூல் ராஜாவை நாடு இதுவரை பார்த்ததில்லை… ஊழல் பல்கலைக்கழகம் ஒன்று இருந்தால் அதற்கு வேந்தராக இருக்க தகுதியானவர் மோடி : மு.க. ஸ்டாலின்

மோடியைப் போல் ஒரு வசூல் ராஜாவை நாடு இதுவரை பார்த்ததில்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். ஊழல் பல்கலைக்கழகம் ஒன்று இருந்தால் அதற்கு வேந்தராக இருக்க தகுதியானவர் மோடி என்று கூறிய ஸ்டாலின், பாஜக ஆட்சியில் நடைபெற்ற தேர்தல் பத்திர ஊழல், பி.எம். கேர் நிதி ஊழல், கொரோனா கால ஊழல், ரஃபேல் ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை பட்டியலிட்டார். மேலும், “ஊழல் கறை படித்தவர்கள் பாஜக கட்சியில் சேர்ந்த உடன் அவர்கள் மீதான … Read more