ரயில் பெட்டியில் இருந்து திடீரென பிரிந்த எஞ்சின்.. கேரளாவில் சம்பவம்..

கேரள மாநிலம் திருச்சூரில் மங்களா விரைவு ரயிலின் எஞ்சின், பெட்டியில் இருந்து பிரிந்து சென்ற நிலையில், ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டதால் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. எர்ணாகுளத்தில் இருந்து நிஜாமுதீன் சென்றுக் கொண்டிருந்த அந்த ரயில், திருச்சூர் ரயில் நிலையத்தை கடந்தபோது அதன் எஞ்ஜின், பெட்டியில் இருந்து பிரிந்து சென்றது. உடனடியாக இதனை உணர்ந்த ரயில் ஓட்டுனர், துரிதமாக செயல்பட்டு எஞ்சினை நிறுத்தினார். பெட்டியில் இருந்து பிரிந்து சென்ற சில மீட்டர் தூரத்திலேயே எஞ்சின் நிறுத்தப்பட்ட நிலையில், 10 நிமிடத்தில் … Read more

திருவாரூரில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில், பழங்கால சிலைகள் கண்டெடுப்பு.!

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில், பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முத்து என்பவர் தமது நிலத்தில் வீடு கட்டுவதற்காக ஜே.சி.பி இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சுமார் 3 அடி ஆழத்தில் 2 அடி உயரமுள்ள பெருமாள் சிலை, 3 அடி உயரமுள்ள பாவை சிலை உள்ளிட்ட 9 சிலைகளும் உலோக கலையம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டன. சிலைகள் அனைத்தும் வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆய்வுக்கு பின்னரே சிலைகளின் … Read more

புறா மூலம் சிறையில் கஞ்சா கடத்தல்.. கண்டுபிடித்த போலீசார்

பெரு நாட்டின் சிறையில் கஞ்சாவை கொண்டு சென்ற புறாவினை காவல்துறையினர் பிடித்துள்ளனர். Huancayo சிறையில் சமீபத்தில் பெய்த மழையில் அங்கிருந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. அதனைக் குடிப்பதற்காக புறா ஒன்று இறங்கிய போது அதன் கழுத்தில் சிறிய பெட்டி ஒன்று தொங்குவதை கண்ட போலீஸ் அதிகாரிகள் லாவகமாக பிடித்து சோதனை செய்தனர். அந்த பெட்டியில் 30கிராம் அளவுள்ள கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு புறாவின் கழுத்தில் தொங்க விடப்பட்டிருப்பது தெரிய வந்தது. Source link

இலங்கையில் உள்ள இந்தியர்கள் தூதரக இணையதளத்தில் பதிவு செய்ய வெளியுறவுத்துறை உத்தரவு

இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், மக்கள் பல இடங்களில் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் தனித்தனி இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்தியர்கள் தொடர்பான விவரங்களை புதுப்பிக்கும் வகையில் தகவல்கள் கோருவதாக இந்திய துணைத் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. Source … Read more

நடிகர் சிவகார்த்திகேயனை பாராட்டி புகழ்ந்த ரஜினிகாந்த்.!

டான் திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் தன்னை செல்போனில் அழைத்து மனம் திறந்து பாராட்டியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார் தமிழகத்தில் அண்மையில் வெளியான நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. டான் படத்திற்கான தெலுங்கு மொழிக்கான புரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்தியன் , டான் திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் தன்னை செல்போனில் அழைத்து மனம் திறந்து பாராட்டியதாக தெரிவித்தார். மகிழ்ச்சியால் வேறு வார்த்தை ஏதும் வராததால்,இயக்குனர் சிகிசக்கரவர்த்தி லவ் யூ சார் … Read more

இதுவரை தோல்வியே சந்திக்காத குத்துச்சண்டை வீரர் மூசா யாமக் போட்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார்.!

இதுவரை தோல்வியே சந்திக்காத ஜெர்மன் நாட்டு குத்துச்சண்டை வீரர் மூசா யாமக் போட்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார். துருக்கியில் பிறந்து ஜெர்மனியில் குடிபெயர்ந்தவரான மூசா யாமக் ஐரோப்பா மற்றும் ஆசிய அளவிலான போட்டிகளில் பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளார். முனிச் நகரில் உகாண்டா வீரர் ஹம்சா வாண்டராவிற்கு எதிரான போட்டியில், இரண்டாவது சுற்றில் சரமாரியாகத் தாக்கப்பட்ட மூசா யாமக், மூன்றாவது சுற்று ஆரம்பிக்கும் போது நிலைகுலைந்து விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மூசா … Read more

இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு..!

இந்திய பங்குச்சந்தைகளில் இன்றைய வணிகம் கடும் சரிவுடன் நிறைவடைந்தது. உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தைகள் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. இன்றைய வணிகநேரத் தொடக்கம் முதலே மும்பை பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு மதிப்பு 6 விழுக்காடு வரை சரிந்தது.  Source link

தாயார் வீட்டிற்குள் அனுமதிக்காததால் சின்னத்திரை நடிகர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி.!

வீட்டிற்குள் தாயார் அனுமதிக்காததால் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சின்னத்திரை நடிகர் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.. ஆர்.ஏ புரம் பகுதியை சேர்ந்த ஜெரால்டு பெர்னான்டோ என்பவர் சின்னத்திரையில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். சில காலமாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்காததால் காவலாளியாக வேலை பார்ந்து வருகிறார். அவரை அவரது தாயார் வீட்டிற்குள் அனுமதிக்காததால் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் 4 முறை புகார் அளித்தார். காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் ஜெரால்டு பெர்னான்டோவை அவரது தாயார் … Read more

200 மீட்டர் நீச்சல் போட்டியில் புதிய உலகச் சாதனை படைத்த ஆஸ்திரேலிய நீச்சல் வீரர்.!

ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் ஐசக் குக் 200 மீட்டர் தொலைவை 2 நிமிடம் 5 நொடிகளில் நீந்திக் கடந்து புதிய உலகச் சாதனை படைத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் 200 மீட்டர் பிரீஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் ஆஸ்திரேலியாவின் ஐசக் குக். இவர் வியாழனன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேசியச் சாம்பியன் போட்டியில் உலகச் சாதனை படைத்தார்.  Source link

ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது – உச்சநீதிமன்றம்

ஜி.எஸ்.டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என்றும் அதன் வரி விதிப்பு தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை உள்ளதாகவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடல் சரக்குகள் மீதான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியை ரத்து செய்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் விசாரணையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு பிரத்யேக அதிகாரங்கள் சட்டபூர்வமாக வழங்கப்பட்டவை என நீதிபதிகள் … Read more