ரஷ்யா வசமிருந்த 7 கிராமங்களை கைப்பற்றியதாக உக்ரைன் அறிவிப்பு..!

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பல கிராமங்களை கைப்பற்றிவிட்டதாக உக்ரைனும் ரஷ்யாவும் மாறி மாறி அறிவித்துக் கொண்டிருக்கின்றன. சபோரிஜியா, டொனெட்ஸ்க் பகுதிகளில் ரஷ்யப் படைகள் வசம் இருந்த 7 கிராமங்களை கைப்பற்றிவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்களைக் கொண்டு எதிர்தாக்குதல் நடத்தி 90 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்தை கைப்பற்றி, ரஷ்ய படைகளை விரட்டி அடித்ததாகவும் உக்ரைன் கூறியுள்ளது. ஆனால் உக்ரைன் கைப்பற்றியதாக கூறும் பகுதிகளில், உக்ரைனின் தாக்குதலை முறியடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது … Read more

பொது கவுன்சிலிங் ஏற்புடையதல்ல.. மறு பரிசீலனை செய்து தற்போதைய நடைமுறையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும் – இ.பி.எஸ் வலியுறுத்தல்

பொது கலந்தாய்வு மூலம் இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்யுமாறு தேசிய மருத்துவக் குழுமத்திடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டிலேயே மாநில நிதியில் உருவாக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகளையும், அதிக மருத்துவ இடங்களையும் தமிழ்நாடு கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டில் 1,945 ஆக இருந்த எம்.பி.பி.எஸ். இடங்கள், 2021ஆம் ஆண்டில் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களின் இடங்களையும் சேர்த்து 12,500-க்கும் மேலாக அதிகரிக்கப்பட்டதாக … Read more

சுத்தம் செய்து கொண்டிருந்த போது கிணற்றுக்குள் புதைந்த 63 வயது நபர்.. பத்திரமாக மீட்ட மீட்பு படையினர்..!

கியூபாவின் ஹோல்கைன் நகரில், எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் புதைந்த 63 வயது நபரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். பண்ணை தொழிலாளியான ஃபெர்னாண்டோ ஹெரெரா என்ற நபர், கிணற்றை சுத்தம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பெய்த கனமழையில் நிலம் உறுதி தன்மையை இழந்து மண் உள்வாங்கியது. இதில் ஹெரெரா மீது கல்லும் மண்ணும் விழுந்து மூடியது. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 24 மணி நேரத்திற்கும் … Read more

இந்திய அரசால் மிரட்டப்பட்டதாக டுவிட்டர் முன்னாள் சி.இ.ஓ புகார் – மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு

இந்திய அரசால் மிரட்டப்பட்டதாக டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி தெரிவித்ததை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஜாக் டோர்சி அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவில் விவசாயிகளின் போராட்டத்தின் போது சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குமாறு டுவிட்டர் நிறுவனத்தை மத்திய அரசு மிரட்டியதாக கூறி இருந்தார். விவசாயிகள் போராட்டம் முடிந்து ஓராண்டுக்கு மேலான நிலையில், டோர்சியின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை இணை … Read more

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பெய்த ஆலங்கட்டி மழை.. வெண்போர்வை போர்த்தியது போல காட்சியளித்த சாலைகள்!

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் டென்வர் மற்றும் போல்டர் நகரங்களை புயல் தாக்கியது. அப்போது காற்று மற்றும் மின்னலுடன் கடுமையான ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சாலைகள் முழுவதும் பனிக்கட்டிகளாக காட்சியளித்தன. ஆலங்கட்டி மழையால் சாலைகளில் சிலவற்றில் சிறிது நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. போல்டர் நகரில் தொடர்ந்து மோசமான வானிலை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. Source link

இந்திய உள்கட்டமைப்பு துறையில் 75 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஐக்கிய அரபு அமீரகம் உறுதி

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே பெட்ரோலியம் அல்லாத பொருட்களின் வர்த்தகத்தை 100 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா-ஐக்கிய அரபு ஆமீரகம் இடையே டெல்லியில் நடைபெற்ற முதலாவது விரிவான பொருளாதார கூட்டு கூட்டத்திற்கு பின்னர் இரு நாடுகளின் அமைச்சர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா-ஐக்கிய அரபு ஆமீரகம் இடையே எண்ணெய் அல்லாத வர்த்தகம் தற்போது 48 … Read more

மர்மமாக இறந்துகிடந்த இருவர்… ‘டாஸ்மாக் மதுவே காரணம்’ – குற்றம்சாட்டும் உறவினர்கள்!

மயிலாடுதுறை அருகே அரசு டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் குடித்ததே இருவர் உயிரிழந்ததற்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மங்கை நல்லூர் கடை வீதியில் இரும்பு பட்டறை வைத்து நடத்திவந்த குத்தாலம் தாலுகா தத்தங்குடி பகுதியைச் சேர்ந்த பழனி குருநாதனுடன், அவரிடம் பணிபுரிந்து வந்த பூராசாமி ஆகிய இருவரும் நேற்று வாந்தி மயக்கத்துடன் பட்டறையில் கிடந்துள்ளனர். இதையறிந்த உறவினர்கள் அவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது, இருவரும் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக … Read more

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பெரும் புரட்சி ஏற்பட்டிருப்பதாக ஜி 20 அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரை

பெண்கள் சார்ந்த வளர்ச்சித் திட்டங்கள், நிலையான வளர்ச்சி இலக்குகள் சார்ந்த முதலீடு உள்ளிட்டவற்றை ஜி 20 அமைச்சர்கள் மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக வலியுறுத்தியுள்ளார். வாரணாசியில் நடைபெற்ற ஜி 20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் தமது கருத்துகளைப் பகிர்ந்துக் கொண்ட மோடி, நமது இலக்குகளில் பின்னடைவு ஏற்படாதிருக்க அனைவரும் கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறினார். தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்துதல் மூலமாக மக்களிடையே காணப்படும் தகவல் இடைவெளியை சரிசெய்ய முடியும் என்றும் … Read more

சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை கரூர் : செந்தில் பாலாஜி, சகோதரர் வீட்டிலும் சோதனை சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் அதிகாரிகள் குழு சோதனை கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை சென்னை அபிராமபுரத்திலும் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடத்தில் சோதனை சென்னை ஆர்.ஏ.புரம், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சரின் சகோதரர் அசோக்குமார் வீட்டிலும் ரெய்டு போக்குவரத்து துறையில் வேலை … Read more

எவரெஸ்ட் சிகரத்தை விட 3 முதல் 4 மடங்கு உயரமான மலைகள் கண்டுபிடிப்பு

எவரெஸ்ட் சிகரத்தை விட 3 முதல் 4 மடங்கு உயரமான சிகரங்களைக் கொண்ட மலைகள் பூமியின் உள்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்டார்க்டிகாவில் உள்ள நில அதிர்வு மையங்களைப் பயன்படுத்தி, வல்லுநர்கள் இந்த வியக்கத்தக்க பெரிய மலைகளை, சுமார் 1,800 மைல் ஆழத்தில் கண்டுபிடித்து உள்ளனர். அதி மற்றும் குறைந்த வேக மண்டலங்கள் எனப் பெயரிடப்பட்ட இந்த பிரம்மாண்டமான நிலத்தடி மலைத் தொடர்கள், நில நடுக்கங்கள் மற்றும் அணு வெடிப்புகள் மூலம் போதுமான நில அதிர்வுத் … Read more