ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு: பெண் உள்ளிட்ட 4 பேர் கைது

குஜராத் மாநிலம் போர்பந்தரில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக பெண் ஒருவர் உள்ளிட்ட 4 பேரை தீவிரவாத தடுப்பு போலீசார் கைது செய்தனர். சூரத்தை சேர்ந்த சுமீரா என்ற பெண் உள்ளிட்ட அந்த 4 பேரும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மூலமாக ஐ.எஸ்.தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதை அறிந்த போலீசார், அவர்கள் தங்கி இருந்த பகுதியை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றதாகவும், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தீவிரவாத தடுப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். … Read more

கனடாவில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீ.. 11 மில்லியன் ஏக்கர் பரப்பளவு வனப்பகுதி கருகியது

கனடாவில் கொழுந்து விட்டு எரிந்து வரும் காட்டுத் தீ மேற்குப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் வரை பரவியுள்ளது. அங்குள்ள டம்ப்ளர் ரிட்ஜ் நகரில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயால் அப்பகுதியைச் சேர்ந்த 2 ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். கியூபெக் என்ற மாகாணத்தில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சியால் வட அமெரிக்க நகரங்கள் பலவற்றையும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. காட்டுத் தீயால் கனடாவில் சுமார் 11 மில்லியன் ஏக்கர் பரப்பளவுள்ள … Read more

மும்பையில் ரூ.50 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்.. முக்கிய கும்பலை சேர்ந்த 3 பேர் அதிரடி கைது

மும்பையின் பல்வேறு இடங்களில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான 20 கிலோ மெஃபெட்ரான் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. முக்கிய போதைபொருள் கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1 கோடியே 10 லட்சம் ரூபாயும், 187 கிராம் எடையிலான தங்க ஆபரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 3 பேர் மீதும், போதை மருந்துகள் தடை சட்டம் 1985-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு போதை … Read more

கடலுக்கடியில் 100 நாட்கள் தங்கியிருந்த முன்னாள் ராணுவ வீரர்… உடல் உயரத்தில் அரை இஞ்ச் குறைந்திருப்பதாக தகவல்

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் அருகே கடலுக்கு அடியில் அமைக்கப்பட்ட அறையில் 100 நாட்கள் தங்கியிருந்து முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். கடற்படை முன்னாள் தளபதியும், உயிரியல் மருத்துவருமான ஜோசப் டிடூரி, நீருக்கடியில் நிலவும் உயர் அழுத்தத்தால் உடலில் நேரும் மாறுதல்களை ஆராயும் முயற்சியில் களமிறங்கினார். சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக, கடலுக்கடியில், 30 அடி ஆழத்தில் அமைக்கப்பட்ட 100 சதுரடி அறையில் அவர் 100 நாட்கள் தங்கி விட்டு தற்போது வெளியே வந்துள்ளார். நீருக்கு அடியில் … Read more

காவல்நிலையத்திலேயே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கணவர் கைது..!

அனைத்து மகளிர் காவல்நிலையத்திலேயே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கணவர் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம் பழையனூர் சாலையை சேர்ந்த பூபாலன்-மெகருன்னிஷா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கணவன் அடிக்கடி தகராறு செய்ததாக மெகருன்னிஷா செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போலீசார் விசாரணைக்காக வந்த மெகருன்னிஷாவை , பூபாலன் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியதில் மெகருன்னிஷாவுக்கு கையில் வெட்டு காயம் ஏற்பட்டது. அங்கிருந்த பெண் போலீசார் பூபாலனை மடக்கி … Read more

துருக்கியில் ரூ.8,200 கோடிக்கு போலி அமெரிக்க டாலர்கள் பறிமுதல்.. ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்ப முயன்ற 6 பேர் கைது..!

துருக்கியில் 8ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான போலி அமெரிக்க டாலர் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 6 வெளிநாட்டவரை துருக்கி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இஸ்தான்புல்லில் உள்ள Kagithane மாவட்டத்தில் சந்தேகத்தின் பேரில் அங்கிருந்த நபர்களை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் இருந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்பப்பட இருந்த  ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் போலி கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. துருக்கியின் வரலாற்றிலேயே இது மிகப்பெரிய கள்ளநோட்டு கடத்தல் சம்பவமாகும் … Read more

என் வண்டி வந்தாலே.. ரோடு சரிஞ்சி போயிடும் ரூ.1.10 கோடி வேஸ்ட்டு..! வெளுத்து வாங்கிய கலெக்டர்

மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி முதல் குலசேகரன்கோட்டை கிராமம் வரை அமைக்கப்பட்ட தார்சாலையை ஆய்வு செய்த கலெக்டர் சங்கீதா, தரமற்ற முறையில் சாலை போடப்பட்டிருப்பது கண்டு அதிகாரிகளை வெளுத்து வாங்கியதோடு, அந்த சாலைப் பணிக்கான பில்லை நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மழையோ… வெயிலோ… கவலை வேண்டாம் காலால் உரசினாலே போதும்… புட்டுமாதிரி உதிரும் இந்த புத்தம் புதிய சாலையின் மதீப்பீடு 1 கோடியே 10 லட்சம் ரூபாயாம்..! அதான் கலெக்டரம்மா அதிகாரிகளை காய்ச்சி எடுக்குறாங்க..! … Read more

விதிகளை மீறியதற்காக Xiaomi India, 3 வங்கிகளுக்கு அமலாக்கத்துறையினர் விளக்கம் கேட்டு நோட்டீஸ்..!

சீனாவின் மொபைல் நிறுவனமான Xiaomi India வின் முன்னாள் மேலாண் இயக்குனர் மனு குமார் ஜெயின், தலைமை நிதி அதிகாரி சமீர் பி.ராவ் மற்றும் மூன்று வங்கிகளுக்கு அந்நிய செலாவணி சட்ட விதிகளை மீறியதற்காக அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 5 ஆயிரத்து 551 கோடி ரூபாய் தொடர்புடைய அந்நியச் செலாவாணி முறைகேடு தொடர்பாக சிட்டிபேங்க், டச்சு வங்கி மற்றும் ஹெச்எஸ்பிசி ஆகிய மூன்று வங்கிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சீன மொபைல் … Read more

காதலியை கொன்று குக்கரில் வேக வைத்து நாய்க்கு உணவாக்கிய சைக்கோ.!

மும்பையில், இளம்பெண்ணை கண்டந்துண்டமாக வெட்டி படுகொலை செய்து, குக்கரில் வேகவைத்து நாய்க்கு உணவாக போட்டதாக கூறப்படும், எய்ட்ஸ் நோயாளியான காதலன் கைது செய்யப்பட்டுள்ளான்.. காதலனால், கண்டந்துண்டமாக வெட்டப்பட்டு குக்கரில் வேகவைக்கப்பட்ட 32 வயது இளம்பெண் சரஸ்வதி வைத்யா இவர் தான்…… மும்பை மீரா ரோடு பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில், 7ஆவது தளத்தில் வசித்து வந்த மானோஜ் சானே… கடை ஒன்றில் பணியாற்றிய சரஸ்வதியை வீட்டு வேலைக்கு என்று அழைத்துச்சென்று, காதல் வலையில் வீழ்த்தி அவருடன் லிவ் இன் … Read more

கியூபாவில் பெய்த கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு..!

கியூபா நாட்டில் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக தீவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பல இடங்களில் பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் பல கிராமங்கள் போக்குவரத்து வசதியின்றி துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். மேலும் அங்குள்ள Jiguani நகரத்தை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு அங்கு கனமழை நீடிக்கும் என்று … Read more