மணிப்பூரில் பழங்குடியினருக்கு வெளியிலிருந்து ஆயுதங்கள் வருவது கண்டுபிடிப்பு…. மியான்மரில் இருந்து ஆயுதங்கள் சப்ளை.?

மணிப்பூரில் கலவரத்தில் ஈடுபடும் பழங்குடியின மக்களுக்கு ஆயுதங்கள் வெளியில் இருந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் தொடரும் வன்முறையை அடுத்து, மத்திய அரசு மணிப்பூர் அரசுடன் சஸ்பென்ஷன் ஆஃப் ஆபரேஷன்ஸ் (Suspension of Operations) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்நிலையில் தொடரும் வன்முறையை அடுத்து குக்கி போராளிக் குழுக்களின் முகாம்களில் ஆயுதத் தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. அப்போது சரணடைந்தவர்கள் ஒப்படைத்த அதி நவீன ஆயுதங்கள் மாயமானதாகக் கூறப்பட்டது. ஆனால் தணிக்கையில் ஓரிரண்டு ஆயுதங்கள் மட்டுமே காணாமல் போனதாகக் தெரிவிக்கப்பட்ட நிலையில், … Read more

துருக்கி அதிபருக்கு ஹிட்லரை போன்ற மீசை வரைந்த சிறுவன் கைது..!

துருக்கியில், அதிபர் எர்டோகனின் புகைப்படத்திற்கு ஹிட்லரை போன்ற மீசை வரைந்த 16 வயது சிறுவனை, போலீசார் கைது செய்தனர். அண்மையில் அங்கு நடைபெற்ற தேர்தலின்போது, எர்டோகன் புகைப்படத்துடன் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில், சிறுவன் ஒருவன் ஹிட்லரை போன்ற மீசையை வரைந்து உள்ளான். மேலும், அதில் அவதூறான கருத்துக்களை எழுதியதாகவும் கூறப்படுகிறது. சிசிடிவி காட்சிகள் மூலம் சிறுவனை கண்டுபிடித்த போலீசார், அவனது வீட்டை கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டதில், மீசை வரைந்ததை சிறுவன் ஒப்பு கொண்டான். கடந்த ஆண்டு 16,000க்கும் மேற்பட்டோர் … Read more

புடவை செலக்ட் பண்ற மாதிரி டெட்பாடி போட்டாவ எடுத்து போலீசில் சிக்கிய தில்லாலங்கடி..! எல்லாம் நிவாரண பணத்துக்காகத்தான்

ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 40 க்கும் மேற்பட்டோரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் இருக்கும் நிலையில், கருத்துவேறுபாட்டால் கணவனை பிரிந்து வாழும் பெண் ஒருவர் மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள லட்சக்கணக்கான ரூபாய் நிவாரணத்தொகையை பெறும் நோக்கில், அடையாளம் தெரியாத சடலம் ஒன்றை தனது கணவனின் சடலம் என்று ஏமாற்றி வாங்கிச்செல்ல முயன்ற சம்பவம் நடந்துள்ளது.. ஒடிசாவின் பாஹனக பசார் ரெயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரெயில்கள் மோதிக் கொண்ட … Read more

உக்ரைன் அணை உடைப்பு: 600 சதுர கி.மீ மேல் சூழ்ந்த வெள்ளம் – 3 பேர் உயிரிழப்பு

உக்ரைனில் கக்கோவ்கா அணை உடைப்பால் ஏற்பட்ட வெள்ளம் 600 சதுர கிலோமீட்டருக்கு மேல் சூழ்ந்துள்ளது. கெர்சன் நகரில் பல்வேறு பகுதிகளில் ஐந்தரை மீட்டர் உயரத்துக்கு சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கின்றன. ரப்பர் படகுகள் மற்றும் தண்ணீரில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில்சென்று ஆய்வு மேற்கொண்ட அதிபர் … Read more

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் 3 நாட்களாக போராடிய குழந்தை சடலமாக மீட்பு..!

மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 3 நாட்களாக உயிருக்குப் போராடிய இரண்டரை வயது பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. செஹோர் மாவட்டம் முங்காவல்லி கிராமத்தில் வீட்டின் அருகில் செவ்வாயன்று விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிருஷ்டி பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றின் உள்ளே தவறி விழுந்தாள். முதலில் 30 அடியில் சிக்கியிருந்த குழந்தையை மீட்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அதில் ஏற்பட்ட அதிர்வால் சுமார் 100 அடி ஆழத்திற்கு சறுக்கிச் சென்று குழந்தை … Read more

விளையாடிக்கொண்டிருந்த பள்ளி குழந்தைகளை கத்தியால் குத்திய சிரிய நாட்டு அகதி கைது..!

பிரான்ஸில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை கத்தியால் கண்மூடித்தனமாகக் குத்திய சிரிய நாட்டு அகதியை பாதுகாப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர். அனஸி நகரில், சுற்றுலா அழைத்து செல்லப்பட்ட பள்ளி குழந்தைகள் பூங்காவில் விளையாடிய போது அவர்களை ஒருவன் கத்தியால் தாக்கத் தொடங்கினான். பாதுகாப்பு படையினர் அவனை உடனடியாக சுற்றிவளைத்து கைது செய்தனர். அவன் சிரியாவிலிருந்து சட்ட விரோதமாக பிரான்ஸுக்கு வந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. படுகாயமடைந்த 6 குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் … Read more

60 ஏக்கர் பரப்பளவில் ரூ.32 கோடி செலவில் ஜம்முவில் கட்டப்பட்டுள்ள ஏழுமலையான் கோவிலுக்கு கும்பாபிஷேகம்…..!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஜம்முவில் கட்டப்பட்டுள்ள ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேகம் செய்து திறந்து வைக்கப்பட்டது. ஜம்முவில் உள்ள மஜின் பகுதியில் 60 ஏக்கர் பரப்பளவில் 32 கோடி ரூபாய் செலவில், திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அதே தோற்றத்தில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. வேத மந்திரங்கள் முழங்க குடமுழுக்கு விமரிசையாக நடந்தது. இதைத் தொடர்ந்து கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவுக்கு வெளியே திருப்பதி தேவஸ்தானம் கட்டியுள்ள ஆறாவது ஏழுமலையான் கோவில் இது என்பது … Read more

ரோபோ உதவியுடன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க விரைந்த நிபுணர் குழு..!

மத்தியப்பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் 2 நாட்களுக்கு முன் தவறி விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தையை ரோபோ உதவியுடன் மீட்கும் முயற்சி தொடங்கி உள்ளது. முங்காவல்லி என்ற கிராமத்தில் 300 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் அந்த குழந்தை விழுந்தது. முதலில் 30 அடி ஆழத்தில் சிக்கி இருந்த குழந்தை, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே சரிந்து, தற்போது சுமார் 100 அடி ஆழத்தில் தொங்கிக் கொண்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆழ்துளை வழியாக தொடர்ந்து பிராணவாயு செலுத்தப்பட்டு … Read more

வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை – தமிழ்நாடு அரசு

வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என அறிவிப்பு அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என தமிழ்நாடு அரசு விளக்கம் வணிக மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கு மிகக் குறைந்த அளவிலேயே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது – தமிழ்நாடு அரசு வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிக்கான இலவச மின்சார சலுகை தொடர்ந்து வழங்கப்படும் – தமிழ்நாடு அரசு Source link

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறினார். மும்பையில் நடைபெற்ற நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் விவரித்த அவர், நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு வருவதால் பணப்புழக்கம் அதிகரித்து வருவதாக கூறிய … Read more