ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தை கடந்து சென்றது சென்னையின் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்

ஒடிசாவின் பாலசோர் அருகே மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான பகுதியில் இருப்புப் பாதை சீரமைப்புப்பணிகள் நிறைவு பெற்றன. இதையடுத்து சென்னையில் இருந்து புறப்பட்ட கோரமாண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் 30 கிலோமீட்டர் வேகத்தில் விபத்து நடந்த பகுதியைக் கடந்து சென்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு இருவழித்தடங்களும் சீரமைக்கப்பட்டதையடுத்து வந்தே பாரத் ரயில் உள்பட சுமார் 70 ரயில்கள் மீண்டும் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டுள்ளன. Source link

நூதன முறையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்ளை திருடி விற்று வந்த 2 பேர் கைது…!

திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்ளை திருடி ஒரிஜினல் ஆர்.சி. புக்குடன் விற்பனை செய்து வந்த இருவர் கையும், களவுமாக பிடிபட்டனர். மதுரை பசுமலை பகுதியில் பழைய இரு சக்கர வாகனங்களை வாங்கி விற்கும் கடையை மணிகண்டன் என்பவர் நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இவரது கடைக்கு வந்த முருகேசன், அரிகிருஷ்ணன் என்ற இருவரிடம் இருந்து, ‘டியூக்’ பைக் ஒன்றை ஒரிஜினல் ஆர்.சி. புத்தகத்துடன் 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு … Read more

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 40 பேர் மின்சாரம் தாக்கி பலியாகியிருக்கலாம்..? – போலீசார்

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த 275 பேரில் 40 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்கப்பட்ட நாற்பது உடல்களில் வெளிப்புற காயங்கள் எதுமின்றி இருந்ததாகவும், ரயில் தடத்தில் இருந்த மேல் நிலை மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் அவர்கள் பலியாகி இருக்கலாம் என்றும் மீட்பு பணியை மேற்பார்வையிட்ட காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சனிக்கிழமையன்று ரயில்வே காவல்துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையிலும், பல பயணிகள் … Read more

கோடை வெப்பத்தை தணிக்க குளியல் தொட்டியில் உற்சாகமாக ஓடிப் பிடித்து விளையாடும் திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை….!

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை குளியல் தொட்டியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தது. கோடை வெப்பத்தை சமாளிக்க ஏதுவாக, திருச்செந்தூர் கோவில் யானைக்காக சரவண பொய்கையில் 35 லட்சம் ரூபாய் செலவில் குளியல் தொட்டி கட்டப்பட்டது. தினமும் காலை யானை அங்கு அழைத்து வரப்பட்டு நீராட வைக்கப்படுகிறது. இன்றும் குளியல் தொட்டிக்கு அழைத்து வரப்பட்ட தெய்வானை, ஷவரில் குளித்து மகிழ்ந்ததோடு, தண்ணீரில் பாகன்களுடன் உற்சாகமாக விளையாடியது. Source link

செல்வத்தின் பெரும் பகுதியை நன்கொடையாக வழங்கும் தொழிலதிபர் நிகில் காம்த்…!

இந்திய கோடீஸ்வரரும், ஜிரோதா நிறுவனத்தின் இணை நிறுவனருமான 34 வயதான நிகில் காமத் தனது செல்வத்தின் பெரும் பகுதியை “தி கிவிங் ப்ளெட்ஜ்” தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளார். பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட்டால் நிறுவப்பட்ட “தி கிவிங் ப்ளெட்ஜ்” அமைப்புக்கு ஏற்கனவே இந்தியாவிலிருந்து அசிம் பிரேம்ஜி, கிரண் மசூம்தார்ஷா, ரோகினி நந்தன் நிலேகனி ஆகிய மூவர் பெருமளவு நன்கொடை வழங்கி இருந்தனர். அந்த வரிசையில் ஃபோர்ப்ஸ் மதிப்பீட்டின்படி 3.45 பில்லியன் டாலர் நிகர … Read more

கடலுக்குள் வீசிச் சென்ற தங்கக்கட்டிகளை முத்துக்குளிக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை..!

ராமநாதபுரம் அருகே கடலுக்குள் கடத்தல்காரர்கள் வீசிச்சென்ற தங்கக்கட்டிகளை முத்துக்குளிக்கும் தொழிலாளர்களைக் கொண்டு சுங்கத்துறையினர் தேடி வருகின்றனர். இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து திங்களன்று கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த சுங்கத்துறையினர் நொச்சியூரணி கடற்கரைப் பகுதியில் கரையை நோக்கி வந்த படகை பிடிக்க முயற்சித்தனர். எனினும், அவர்கள் படகை சிறிய பாறையில் மோத வைத்து விட்டு தண்ணீருக்குள் குதித்து கரைக்கு சென்றனர். அங்கு ஏற்கனவே தயாராக நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் … Read more

மீன் வியாபாரத்திற்காக தந்தைக்கு சொகுசு கார் வாங்கிக் கொடுத்த மகன்..! படிக்க வைத்தவருக்கு காணிக்கையாக கார்

மீன்பிடி தொழில் செய்யும் தந்தை, மீன் விற்பனை செய்வதற்காக 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை, மகன் பரிசளித்துள்ளார். வாழ்வில் தான் உயர பாடுபட்ட தந்தைக்கு, காஸ்ட்லி கிஃப்ட் மூலம், மகன் நன்றி கடன் செலுத்தியிருப்பது பற்றி விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு…….  மீன் வியாபாரியான தந்தைக்கு , சொகுசு கார் வாங்கிக் கொடுத்த மெரைன் இன்ஜினியர் சுரேஷ் கண்ணன் இவர் தான்…. இராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன் வயல் பகுதியை சேர்ந்த, சிவானந்தம்-காளியம்மாள் தம்பதியர், … Read more

அமெரிக்காவில் 6 இளம்பெண்கள் அடுத்தடுத்து கொலை.. சீரியல் கொலையா? என்ற கோணத்தில் போலீஸ் தீவிர விசாரணை

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் 100 மைல் சுற்றுவட்டாரத்தில் ஆறு இளம்பெண்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரியில் போர்ட்லாந்து பகுதியிலுள்ள பிலெசன்ட் பள்ளத்தாக்கில் கிரிஸ்டன் ஸ்மித் என்ற பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 8ந்தேதி அன்று கிளார்க் கவுன்டியிலுள்ள ஒரு பாழடைந்த பகுதியில் காயங்களுடன் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதே மாதத்தில், மேலும் இரு பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இறுதியாக, ஏப்ரல் 30 ஆம் தேதியன்று நார்த்வெஸ்ட் போல்க் கவுன்டியில், … Read more

சிறுவனின் உயிர் பறித்த நூல் அறுந்த பட்டம்.! பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள்.!

சென்னையில், பறந்து வந்த பட்டத்தை பிடிக்க முயன்ற போது 2ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து 13 வயது சிறுவன் உயிரிழந்தான். சுட்டித்தனமும், ஆபத்தை அறியா மனமும் சிறுவனின் உயிரை பறித்து விட்டதாக, பெற்றோர் கண்ணீர் மல்க கூறியுள்ளனர். நூல் அறுந்து தனியே பறந்து, மாடி வீட்டில் சிக்கிய பட்டத்தை எடுக்கச் சென்று தவறி விழுந்ததால் இன்னுயிரை இழந்த 13 வயது சிறுவன் பிரசன்னா இவர் தான்…… சென்னை சூளைமேடு பாரதி தெருவைச் சேர்ந்த டெய்லர் தண்டபாணியின் … Read more

37 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய 8 மாத கர்ப்பிணி!

அமெரிக்காவில், 30க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளை தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய 8 மாத கர்ப்பிணி பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. சம்பவத்தன்று இம்யூனெக் வில்லியம்ஸ் என்ற பெண் ஓட்டுநர் 37 குழந்தைகளுடன் பள்ளிப் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, பேருந்துக்குள் புகை  வந்ததால் சுதாரித்துக் கொண்ட அவர், பேருந்தை நிறுத்திவிட்டு அதிலிருந்த குழந்தைகளை கீழே இறங்கச் செய்தார். அடுத்த சில வினாடிகளில், பேருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை … Read more