பிரியாணிக்கு பணம் கேட்பியா…? ஓட்டலை அடித்து நொறுக்கிய சில்லரை ரௌடிகள்….!

வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு பணம் தராததோடு, ஓசியில் சேர்வா பொட்டலம் தரவில்லையெனக் கூறி காஞ்சிபுரத்தில் ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை தாக்கி ரகளையில் ஈடுபட்டவர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வயிறு முட்ட ஓசியில் சாப்பிட்டு விட்டு ஓசியில் சேர்வா தரவில்லையெனக் கூறி மேஜை மீது ஏறி நின்று ஓட்டல் ஊழியரை தாக்கி ரகளை செய்யும் அடாவடிகள் இவர்கள் தான். காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட ரங்கசாமி குளம் பகுதியில் … Read more

உலக பெருங்கோடீஸ்வரர்கள் எலான் மஸ்க், பெர்னார்டு அர்னால்ட் சந்திப்பு… பாரிஸில் ஒன்றாக உணவருந்தி பொழுதுபோக்கினர்

உலக பெருங்கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்கும், இரண்டாம் இடத்தில் உள்ள பெர்னார்டு அர்னால்ட்டும் பாரிஸில் ஒன்றாக சேர்ந்து மதிய உணவருந்தினர். ஆடம்பர பொருட்களுக்கு பெயர் பெற்ற லூயி வீட்டோன் நிறுவனத் தலைவர் பெர்னார்டு அர்னால்ட் உடன் அவரது  இரு மகன்களும் வந்திருந்தனர். எலான் மஸ்க் உடன் அவரது தாயார் வந்திருந்தார். அதை தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்ற தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கருத்தரங்கிற்கு சென்று இருவரும் உரையாற்றினர். இந்த சந்திப்பை தொடர்ந்து … Read more

பிபர்ஜோய் தாக்கம் : சூறாவளியுடன் ராஜஸ்தானில் கொட்டும் கனமழை

பிபர்ஜோய் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளதாகவும், பிற்பகலில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானில் பிபர்ஜோய் புயல் தாக்கல் காரணமாக சூறாவளியுடன் கனமழை பெய்துவருகிறது. உதய்பூரில் வீசிய கடுமையான காற்றில் கட்டிடம் ஒன்றின் கண்ணாடி பெயர்ந்து விழுந்ததில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்தன. Source link

ஜூன் 20 முதல் 25ந் தேதிவரை அமெரிக்கா, எகிப்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்

அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி வரும் 20ந் தேதி முதல் 25ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 21ம் தேதி ஐநா.சபை தலைமையகத்தில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்ளும் மோடி, 22ம் தேதி வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்துவதுடன், தொழிலதிபர்கள், முன்னணி நிறுவனங்களின் சிஇஓக்கள், இந்திய வம்சாவளியினரை சந்திக்க உள்ளார்.  24ம் தேதி எகிப்து செல்லும் மோடி … Read more

பிரதமரை மக்கள் விரும்புகின்றனர்.. தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும்.. முள்ளுமேல இருக்கற மாதிரி இருக்கு.. மதுரை ஆதீனம் சொல்கிறார்..!

மதுரை ஆதீனமாக இருப்பது முட்கள் மீது இருப்பது போல் உள்ளதாக கூறியுள்ள ஞானசம்பந்த தேசிக பரமாச்சரிய சுவாமிகள்,அரசியல்வாதிகளுக்கு வாழ்த்துச் சொல்லி ஆசீர்வதிப்பேனே தவிர, பரப்புரைக்கு போக மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்… மதுரை ஆதீன மடத்தில், 293ஆவது மகா சன்னிதானமான ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்களை சந்தித்தார்… கலகலப்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், காஞ்சிபுரம் தொடங்கி மதுரை வரையில், ஒவ்வொரு மடத்திலும் தாம் இருந்தபோது, ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடி, கோவில் மற்றும் ஆதீன நிலங்களை மீட்டதாக … Read more

பினாமி சொத்து விவகாரம் : செந்தில் பாலாஜி உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்

பினாமி சொத்து விவகாரத்தில் செந்தில் பாலாஜியின் உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கரூரில் அனுராதா என்பவருக்கு சொந்தமான 40 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை, 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக அமலாக்கத்துறை சார்பில் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் சண்முகம் என்பவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நிலத்தை விற்ற அனுராதா என்ற பெண்ணிற்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கில்  … Read more

ஹரியானாவில் 15 நாள் சோதனையில் 13,000 கிலோ போதைப் பொருள் பறிமுதல் – 354 பேர் கைது

ஹரியானா காவல் துறையினர் இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதைத் தடுக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். கடந்த ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து 15ம் தேதி வரை போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். இதில் ஓபியம் உள்ளிட்ட சுமார் 13 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய 354 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமான போதைப் பொருட்கள் குருகிராமில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். Source … Read more

குற்ற வழக்குகளை எதிர்கொள்வதால் செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடரக்கூடாது – ஆளுநர்

முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று செந்தில் பாலாஜி வகித்து வந்த பொறுப்புகளை இரு அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறையையும், அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையையும் கூடுதல் பொறுப்பாக வழங்க ஆளுநர் அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை தொடரச்செய்ய வேண்டும் என்ற முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க … Read more

திட்டமிட்டபடி அணுஆயுதங்களின் முதல் டெலிவரி வெற்றிகரமாக பெலாரசுக்கு மாற்றம் – ரஷ்ய அதிபர் புதின்

பெலாரசில் திட்டமிட்டபடி அணு ஆயுதங்களின் முதல் டெலிவரியை வெற்றிகரமாக நிறைவேற்றி இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ரஷ்யா முதன்முறையாக அணு ஆயுதங்களை அண்டை நட்பு நாடானபெலாரசுக்கு மாற்ற திட்டமிட்டது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அது அணு ஆயுதப் போருக்கான அச்சுறுத்தலாக கருதப்பட்டது. இந்நிலையில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பேசிய புதின், முதல் பாகம் முடிந்து விட்டதாகவும், கோடைக்காலத்தின் இறுதிக்குள் முழுமையாக அணு ஆயுதங்களை இடம் மாற்றும் பணி நிறைவடையும் என்றும் … Read more

புயல்பாதிப்பு குறித்து குஜராத் முதலமைச்சருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை

குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேலை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி புயலின் பாதிப்புகள் நிவாரணப் பணிகளுக்கான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். புயல் காரணாக கிர் வனப்பகுதியில் பராமரிக்கப்படும் சிங்கங்கள் பாதுகாப்பு குறித்தும் மோடி வலியுறுத்தியுள்ளார். கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 40 சிங்கங்கள் கண்காணிக்கப்படுவதாகவும் கழுத்துப்பட்டை அணிவிக்கப்பட்ட சிங்கங்கள் செயற்கைக்கோள் சமிக்ஞைகள் மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் குஜராத் அரசு தெரிவித்துள்ளது. Source link