தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட்டை கொடுத்த தாய்.. அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் சிறுமி உயிரிழப்பு?…

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட் கொடுக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்தததாக அவரது தாய் கூறியுள்ளார். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த ஆனந்தகுமார்-தீபா தம்பதியின் 8 வயது மகள் அகல்யா சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த மாதம் 30ஆம் தேதியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 15 நாட்களாக டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு தாகம் எனக்கூறிய அகல்யாவுக்கு தாய் தீபா படுக்கையின் அருகில் இருந்த பாட்டிலில் இருந்த … Read more

பள்ளியில் திடீரென சாய்ந்து விழுந்த சாமியானா பந்தல்.. 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்..!

திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சாமியானா பந்தல் சாய்ந்து விழுந்ததில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். ஆரோக்கிய மாதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், கடந்தாண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதற்காக அமைக்கப்பட்ட சாமியானா பந்தல் கீழே 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்திருந்தனர். காற்றின் வேகத்தால் சாமியானா பந்தல் திடீரென சாய்ந்ததில், 10-ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் … Read more

சூடானில் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் நோயாளிகள் அவதி..!

சூடானில் நடந்துவரும் உள்நாட்டு போரால் சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் ஏராளமானோர் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு 8000 பேர் வரை டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டபடி உயிர் வாழ்ந்துவரும் நிலையில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் நடந்துவரும் அதிகார போரால் 60 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. கடும் மின் தட்டுப்பாட்டிற்கு மத்தியில் இயங்கிவரும் ஒரு சில மருத்துவமனைகளிலும் நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் உயிரிழந்துவருகின்றனர். பிணவறைகளில் குளிர் சாதன பெட்டிகள் இயங்காமல் 450 சடலங்கள் … Read more

கரையைக் கடந்தது பிபர்ஜாய் புயல்…. அடியோடு சாய்ந்த மரங்கள்- மின்கம்பங்கள்..!

அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த பிபர்ஜாய் புயல் குஜராத் மாநிலம் ஜக்காவ் துறைமுகம் அருகே கரையைக் கடந்தது. புயலின் வேகத்தில் நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள், ஏராளமான மரங்கள் சாய்ந்து கிடப்பதால் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுவடைந்து, கடந்த 11ந்தேத அதிதீவிர புயலாக மாறியது. இந்நிலையில், குஜராத் மாநிலம் ஜக்காவ் துறைமுகம் அருகே நேற்று மாலை புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. நள்ளிரவு வரை புயல் கரையைக் கடந்தபோது, 125 கிலோமீட்டர் வேகத்தில் … Read more

மணிப்பூரில் மீண்டும் வன்முறை – மத்திய அமைச்சர் வீட்டிற்கு தீ வைப்பு

மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள தலைநகர் இம்பாலில் மத்திய அமைச்சர் ஆர்.கே. ரஞ்சன் சிங்கின் வீட்டிற்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர். மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும், கூகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதம் ஏற்பட்ட மோதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். எனினும் மணிப்பூரில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஒரு கட்டத்தில், இம்பாலில் உள்ள மத்திய வெளியுறவுத் துறை … Read more

யூடியூப்பில் வீடியோ பார்த்து சாவை தேடிச்சென்ற இளைஞர்கள்.. ஆட்கொல்லி அருவி..! தோழி கதறல்.. முகம் சிதைந்து மீட்கப்பட்ட இரு உடல்கள்..!

யூடியூப் பார்த்து ஆளில்லா அருவிக்கு தோழியை அழைத்துச்சென்ற 3 இளைஞர்கள் , அந்த பெண்ணின் முன்பே தடாகத்தில் மூழ்கிய நிலையில் ஒருவர் மீட்கப்பட, இருவர் நீரில் மூழ்கி பலியான விபரீதம் அரங்கேறி உள்ளது. நீரில் மூழ்கியவர்களின் முகங்கள் சிதைந்து காணப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..3 கழுகுப்பார்வையில் உற்றுப்பார்த்தால் தலை சுற்றும் வண்ணம் ஆர்ப்பரித்துக் கொட்டும் இந்த அருவியின் தடாகத்தில் மூழ்கித்தான் இருவர் உயிரை பறி கொடுத்துள்ளனர்..! ஊரே உஷ்னத்தை தீர்க்க ஊட்டியைத்தேடிச்செல்ல… ஊட்டியை சேர்ந்த … Read more

இனவெறி புகாருக்கு உள்ளாகி வேலையை இழந்த ஸ்டார்பக்ஸ் நிறுவன முன்னாள் மேலாளருக்கு 200 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு

அமெரிக்காவில் இனவெறி புகாருக்கு உள்ளாகி வேலையை இழந்த ஸ்டார்பக்ஸ் நிறுவன முன்னாள் மேலாளருக்கு 200 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு, பிலடெல்பியா நகரிலுள்ள ஸ்டார்பக்ஸ் காபி ஷாப்புக்கு வந்த கருப்பின இளைஞர்கள் 2 பேர் வெகுநேரமாகியும் எதுவும் ஆர்டர் செய்யாததால் அவர்களுக்கும் அங்கிருந்த ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் அந்த இரு இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர். இதனால் இனவெறி புகாருக்கு உள்ளான ஸ்டார்பக்ஸ் நிர்வாகம், அந்த சூழலை திறம்பட … Read more

ஹிமாச்சல பிரதேசத்தில் காதல் விவகாரத்தால் வன்முறை -144 தடை உத்தரவு பிறப்பிப்பு

ஹிமாச்சல பிரதேசத்தில் காதல் விவகாரத்தால் வன்முறை வெடித்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டது. அந்த மாநிலத்தின் சம்பா மாவட்டம் பந்தல் கிராமத்தை சேர்ந்த மனோகர்லால் என்ற இளைஞர், சிறுமி ஒருவரை காதலித்ததாகவும், அவரை சிறுமியின் உறவினர்கள் தங்கள் வீட்டிற்கு வரவழைத்து படுகொலை செய்து உடலை 8 பாகங்களாக வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சிறுமியின் உறவினர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஷரீப் முகமதுவின் வீட்டிற்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர். தீ வைப்பு சம்பவத்தை … Read more

தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சிக்காக ஆசையோடு காத்திருந்த மனைவி.. சடலமான புதுமாப்பிள்ளை..!

கடலூரில் திருமணமான பதினைந்தே நாட்களில் புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கெங்கநாயக்கன்குப்பத்தை சேர்ந்த விமல்ராஜ் தனியார் செல்போன் நிறுவனத்தில் கேபிள் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவருக்கும் ரவீனா என்பவருக்கும் ஜூன் 1ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்வு இருந்த நிலையில் வேலைக்கு சென்று விட்டு சீக்கிரம் வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில், wi fi கேபிளை சரி செய்து கொண்டிருந்தபோது மேலே சென்ற மின்கம்பியில் … Read more

தனது இறுதிச் சடங்குக்கு தானே ஹெலிகாப்டரில் வந்திறங்கிய டிக்டாக் பிரபலம்..!

ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில், தான் உயிரிழந்துவிட்டதாக அனைவரையும் நம்பவைத்துவிட்டு, தனது இறுதிச் சடங்குக்கு டிக்டாக் பிரபலம் ஒருவர் ஹெலிகாப்டரில் வந்திறங்கினார்… 45 வயதான David Baerten என்ற அந்நபர், அண்மையில் உயிரிழந்ததாக அவரது மகள் சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார். உடனே , குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் இறுதிச் சடங்கிற்கு ஒன்று கூடினர். அவர்கள் நடுவே திடீரென ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கியது. அதில் இருந்து David Baerten கீழே இறங்கி வருவதைக் கண்ட குடும்பத்தினர் ஓடிச்சென்று அவரை … Read more