'வலிமை' படத்தில் அஜித்தின் உருவக் கேலிக்கு பதிலடி? – வைரலாகும் சுரேஷ் சந்திராவின் பதிவு!

‘வலிமை’ திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் உருவம் மற்றும் நடனம் குறித்து விமர்சிக்கப்பட்ட நிலையில், நடிகர் அஜித்தின் அறிக்கையை, அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தற்போது மறுபகிர்வு செய்து பதிலடி கொடுத்துள்ளதாக கூறுப்படுகிறது. ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் அஜித், ஹெச் வினோத் குமார் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவான திரைப்படம் ‘வலிமை’. கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, பிப்ரவரி 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. ரசிகர்களிடையே ‘வலிமை’ திரைப்படம் … Read more

விவசாயிகளின் எதிர்பார்ப்பு பட்ஜெட்டில் பூர்த்தியாகுமா?

விவசாயிகளிடம் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலேயே தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை அமையும் என உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் வரும் சனிக்கிழமை அன்று வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையொட்டி மாநில அளவிலான விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சென்னை சேப்பாக்கத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வேளாண் நிதி நிலை அறிக்கையை தயார் செய்வதற்கு முன்பாக 250-க்கும் மேற்பட்ட … Read more

விமான பயணத்தின்போது சீக்கியர்களுக்கு சலுகை: என்ன அது?

விமான பயணத்தின்போது கத்தியை எடுத்து செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையில் இருந்து சீக்கியர்களுக்கு மட்டும் விலக்கு அளித்து விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விமான பயணிகளின் பாதுகாப்பு கருதி, ஆயுதங்கள் மட்டுமின்றி, நகவெட்டி, சிகரெட் லைட்டர் போன்ற பாதகத்திற்கு பயன்படுத்த உதவும் சிறு உபகரணங்களையும் விமானத்தில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் சீக்கியர்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில், அவர்களுக்கு மட்டும் கத்தியை கொண்டு செல்ல அனுமதி அளித்து விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதே … Read more

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' குறித்து கேரள காங்கிரஸின் ட்வீட் – பதிலடி கொடுத்த அனுபம் கேர்

இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்த படத்தில் ‘புஷ்கர் நாத்’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் அனுபம் கெர். 1990-களில் காஷ்மீரில் வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த உண்மை சம்பவத்தை தழுவிய கதையம்சம் கொண்ட திரைப்படம் இது.  இந்நிலையில் இந்த படம் குறித்து எழுப்பப்படும் சர்ச்சைகளில் தான் கவனம் செலுத்த விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார். பாக்ஸ் ஆபிஸில் தரமான வசூலை ஈட்டி வருகிறது இந்த திரைப்படம். இருந்தாலும் காங்கிரஸ் … Read more

"சட்டத்தின் ஆட்சியே ஜெயகுமாரை கைது செய்தது" – ஆர்.எஸ்.பாரதி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது புழுதி வாரி வீசுவதை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எத்தனையோ அவதூறு பேட்டிகளை ஜெயக்குமார் கொடுத்தாலும், அதற்காக அவர் கைது செய்யப்படவில்லை என்பது திமுக தலைவர் காட்டிய பெருந்தன்மை எனக் குறிப்பிட்டுள்ளார். திமுக அரசைப் பார்த்து சகிப்புத்தன்மையற்ற அரசு என ஜெயக்குமார் கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டத்தை … Read more

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.க்கு நினைவிடம்; நிதியை ஒதுக்கிய கேரள அரசு

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நினைவிடம் கட்ட ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. கலைத்துறையில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் கேரள பட்ஜெட்டில் சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த ஊரான, பாலக்காடு அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில், அவருக்கு நினைவிடம் கட்டப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு மறைந்த எம்.எஸ்.விஸ்வநாதனை கவுரப்படுத்தும் விதமாக, இந்த அறிவிப்பை கேரள அரசு வெளியிட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மறைந்த புனீத் ராஜ்குமாரை கௌரவப்படுத்தும் மைசூர் பல்கலைக்கழகம் – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்

மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரை கௌரவப்படுத்தும் வகையில், மைசூர் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்க உள்ளது. மறைந்த கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், முன்னணி நடிகருமான புனீத் ராஜ்குமார், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி, உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். 46 வயதே ஆன புனீத் ராஜ்குமார் உயிரிழந்தது, ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய திரையுலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், புனீத் ராஜ்குமாரை கௌரவப்படுத்தும் … Read more

நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கு: நீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்னது என்ன?

கார் இறக்குமதி வழக்கில் அபராதத்தை தள்ளுபடி செய்யக் கோரி விஜய் தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருக்கிறது.  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து ரூ. 63 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 என்ற சொகுசுக் காரை இறக்குமதி செய்திருந்தார். முறையாக சுங்கவரி செலுத்தி இந்தக் காரை இறக்குமதி செய்த நிலையில், இந்தக் கார் தமிழகத்திற்குள் நுழைவதற்கான நுழைவு வரியை … Read more

மாவோயிஸ்ட் தாக்குதல்: சட்டீஸ்கரில் துணை ராணுவப்படை வீரர் உயிரிழப்பு

சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் இந்தோ திபெத் துணை ராணுவப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். நாராயண்பூர் மாவட்டம் சோன்பூர் கிராம பகுதியில் காலை நேரத்தில் துணை ராணுவப் படை வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நிலத்திற்கு அடியில் இருந்த கண்ணிவெடி வெடித்து சிதறியது. அவ்விபத்தில் துணை காவல் ஆய்வாளர் ராஜேந்திர சிங் என்பவர் உயிரிழந்தார். மகேஷ் என்ற மற்றொரு வீரருக்கு காயங்களுடன் சிகிச்சை தரப்பட்டு வருகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

பிக்பாஸ் தர்ஷனின் ‘கூகுள் குட்டப்பா’ திரைப்பட ட்ரெயிலரை வெளியிட்ட சிம்பு

பிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ட்ரெயிலரை நடிகர் சிம்பு சமூகவலைத்தளங்களில் வெளிட்டுள்ளார். சுராஜ் வெஞ்சரமூடு, ஷோபின் ஷாகீர் உள்ளிட்டோர் நடிப்பில், ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், கடந்த 2019-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இந்தத் திரைப்படத்தில் ரஷ்யாவில் வேலைக்கு செல்லும் மகன், தனது வயதான தந்தைக்கு துணையாக ரோபா ஒன்றை விட்டுச் செல்கிறான். ரோபாவை முதலில் வெறுக்கும் சுராஜ் வெஞ்சரமூடு, பின்னர் மகனை … Read more