அமெரிக்கா முதல் சுவிஸ் வரை.. அடுத்தடுத்து திவால் ஆகும் வங்கிகள்.. இந்திய வங்கிகளின் நிலை?

அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள சில வங்கிகள் திவாலாகி இருக்கும் நிலையில், இந்தியாவில் அதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அடுத்தடுத்த திவாலான வங்கிகள்! அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியான கலிபோர்னியாவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கிக்கு (Silicon Valley Bank) ஏற்பட்ட நிதி நெருக்கடியை தொடர்ந்து வெறும் 48 மணி நேரத்தில் திவாலானதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, கடந்த மார்ச் 10ஆம் தேதி சிலிக்கான் வேலி … Read more

இறந்த மனைவிக்கு சிலை வைத்து கோயில் கட்டி, காலை மாலையென பூஜை செய்துவரும் கணவர்!

திருப்பத்தூர் அருகே இறந்த மனைவியின் நினைவாக மனைவியின் ஆறடி தத்ரூப சிலை வைத்து 15 லட்ச ரூபாய் செலவில் கணவர் கோயில் கட்டியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகத்தில் எந்த உறவு சிறந்தது என்றால் அது தாய்ப்பாசம் என்றே எல்லோரும் சொல்வார்கள். ஆம், நிச்சயம் எல்லாவற்றையும் விட எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னுயிரை கொடுத்து ஒரு உயிரை ஈன்ற தோடு அல்லாமல் அந்த உயிருக்கு எந்த நேரத்தில் என்ன தேவை என்பதை பார்த்து பார்த்து செய்து கொண்டே இருப்பதால்தான் … Read more

”எங்கள் நரேந்திரரே தனித்து வா.. 40-ம் தாமரையை மலர செய்வோம்” – நெல்லையில் பரபரப்பு போஸ்டர்!

“எங்கள் நரேந்திரரே “தனித்து வா”, 40திலும் தாமரையை மலரச் செய்வோம்” என திருநெல்வேலி மாநகர பகுதிகளில் ஒட்டியுள்ள சுவரொட்டிகளால், பாஜக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் ஒரு பரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. ஆளும் திமுக ஆனது, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் கட்சி, மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைத்துள்ளது. ஆனால், அதிமுக கட்சியானது பாரதிய ஜனதா … Read more

எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் எப்படி இருக்கிறார்? அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில்!

“தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுள்ளன. யாருக்கும் தீவிர பாதிப்பு இல்லை. மக்கள் அச்சப்பட வேண்டாம்” ஏன மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத்தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்தும் அவர் பேசியுள்ளார். கோவிட் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒன்றிய அரசின் சுற்றறிக்கை எங்களுக்கு கிடைக்கப் பெற்றது. தமிழ்நாடு, கேரளா … Read more

‘தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள்…’ – வதந்தி பரப்பிய பாஜக பிரமுகருக்கு முன்ஜாமீன்!

பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போல் வீடியோ வெளியிட்ட டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் பிரசாந்த் உம்ராவ் குமாருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது. பிரசாந்த் உம்ராவ் குமார் டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகராக உள்ளார். மேலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 3 ஆம் தேதி பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கொடூரமாக தாக்கி கொலை செய்வது போன்ற வீடியோவை தனது ட்விட்டர் … Read more

“சமூக வலைதளங்கள் என்னை கொன்றுவிட்டன".. பதறிப்போய் வீடியோ வெளியிட்ட சாமி பட நடிகர்!

விக்ரமின் சாமி படத்தில் பெருமாள் பிச்சை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த கோட்டா சீனிவாசன் காலமாகி விட்டதாகச் சொல்லி சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிய நிலையில் அவர் வீடியோவாக வெளியிட்டு மறுத்திருக்கிறார். கோலிவுட்டில் சாமி, திருப்பாச்சி, சகுனி, கோ, ஏய், ஆல் இன் ஆல் அழகுராஜா என ஏராளமான திரைப்படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் கோட்டா சீனிவாச ராவ். இவர் தெலுங்கு சினிமாவின் மூத்த வில்லன் நடிகர்களில் ஒருவராவார். 75 வயதாகும் இவர் இறந்துவிட்டதாகச் சொல்லி … Read more

ஆஸ்கர் வென்ற 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' இயக்குநருக்கு தமிழக முதல்வர் ஊக்கத்தொகை!

ஆஸ்கார் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணப் படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்-க்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகையாக ரூ.1 கோடி வழங்கியுள்ளார். சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்துமுடிந்த 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், ஆவண திரைப்பட பிரிவில், இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றது. இந்தப்படம், நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் தாயை பிரிந்த இரண்டு குட்டி யானைகளுக்கும், அவற்றின் பராமரிப்பாளர்களான … Read more

“ஒளியை பிடிச்சுக்கிட்டேன்..”- வராக நதிக்கரை ஓரம் பாடல் வரியை மாற்றி ரசிகர்களை ஈர்த்த ARR!

ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எந்த சமூக வலைதள பக்கங்களை திறந்தாலும், பத்தில் ஆறு சென்னையில் நடந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சூஃபி கச்சேரி குறித்த பதிவுகளாகவே இருக்கின்றன. சினிமாத்துறையில் பணியாற்றும் லைட் மேன்களின் நிதி ஆதாரத்துக்காக கடந்த மார்ச் 19ம் தேதி நடத்தப்பட்ட நிகழ்ச்சிதான் இந்த சூஃபி கச்சேரி. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்று ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான இனிமையான சூஃபி பாடல்களை கேட்டு மெய்மறந்து போயினர். இது குறித்த ஏராளமான பதிவுகளும் தொடர்ந்து பகிரப்பட்டுக் கொண்டே … Read more

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: இறுதிகட்டத்தை நெருங்கும் விசாரணையில் அடுத்த அப்டேட்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணையை மாவட்ட நீதிபதி ஏப்ரல் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். … Read more

காஞ்சிபுரம்: பள்ளி மாணவிக்கு வன்கொடுமை… கல்லூரி மாணவர் போக்சோவில் கைது!

காஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். காஞ்சிபுரம் அருகே உள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன். இவருடைய மகன் லோகநாதன் (21). இவர் காஞ்சிபுரத்தில் ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.ஏ. படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் இவர், உடற்பயிற்சிக்காக அருகாமையில் உள்ள கிராமம் ஒன்றுக்கு சென்று வந்துள்ளார். அங்கு 9 ஆம் வகுப்பு மாணவியுடன் லோகநாதனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. … Read more