பத்திரிகையாளர் முத்துக்கிருஷ்ணன் உடல் ஒப்படைப்பு.. இலவச அமரர் ஊர்தி வழங்கியது தமிழக அரசு!

சென்னையில் மழை நீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்த புதிய தலைமுறை ஊழியர் முத்துகிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு அவரது  உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றிய முத்துக்கிருஷ்ணன் என்பவர் கடந்த சனிக்கிழமை காசி திரையரங்கம் அருகே உள்ள மழை நீர் வடிகால் கால்வாயில் தவறி விழுந்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முத்துக்கிருஷ்ணனை அவர்களது நண்பர்கள் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவரை நேரடியாக சந்தித்த மருத்துவ … Read more

அடுத்த வாரத்துல இருந்து பட்டாசுதான்.. விஜய் ரசிகர்களை திக்குமுக்காடவைத்த ‘வாரிசு’ படக்குழு

விஜய்யின் 66வது படமாக உருவாகி வருகிறது வாரிசு. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் எமோஷ்னல் டிராமா படமாக உருவாகும் இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் விஜய்யின் வாரிசு படத்துக்கு தமன் இசையமைக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகிபாபு, குஷ்பு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் முக்கிய அப்டேட்களான டீசர், ட்ரெய்லர் வெளியீட்டுக்கு முன்பே தொலைக்காட்சி மற்றும் ஓடிடி உரிமத்துக்கான வியாபாரத்தை முடித்திருக்கிறது தயாரிப்பு … Read more

கோவை கார் வெடிப்பு: ஜமேஷா முபீனுடன் இருந்த அந்த 4 பேர் யார்..? – போலீசார் தீவிர விசாரணை

ஜமேஷா முபீனுடன் சனிக்கிழமை இரவு இருந்த 4 பேர் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து சிதறிய நிகழ்வு தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அதில் சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்ம பொருளை தூக்கி செல்லும் … Read more

நாளை சூரிய கிரகணம்: திருப்பதி கோயில் 12 மணி திறக்கப்படாது – தேவஸ்தானம் அறிவிப்பு

நாளை சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதியில் 12 மணி கோயில் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாளை சூரிய கிரகணமும், நவம்பர் 8-ஆம் தேதி சந்திர கிரகணமும் நிகழ உள்ளது. அந்த நாட்களில் ஏழுமலையான் கோயிலின் கதவுகள் 12 மணி நேரம் மூடப்படும் எனவும், சர்வ தரிசனம் தவிர்த்து அனைத்து வகையான தரிசனங்களும் ரத்து செய்யப்படுகிறது எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. நாளை மாலை 5.11 முதல் 6.27 வரை சூரிய கிரகணம் நடைபெற உள்ளதால் காலை 8.11 … Read more

ஒடிசாவில் கொடூரம்… வாடிக்கையாளர் மீது கொதிக்கும் எண்ணெயை வீசிய உணவக உரிமையாளர்

வாடிக்கையாளர் மீது கொதிக்கும் எண்ணெயை வீசிய உணவக உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இருந்து வடகிழக்கே 45 கிமீ தொலைவில் உள்ள பாலிச்சந்திரபூர் கிராமத்தில் வசிப்பவர் பிரசன்ஜித் பரிதா (48). இவர் கடந்த சனிக்கிழமை அன்று உணவருந்துவதற்காக உள்ளூரில் இயங்கிவரும் ஹோட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளார். சாப்பிட்ட பின் ஓட்டல் உரிமையாளர் பிரவாகர் சாஹூவிடம், சாப்பாட்டு சரியில்லை என்றும் விலைக்கேற்ற மாதிரி ருசியாக இல்லை என்றும் பிரசன்ஜித் பரிதா கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையில் கடும் … Read more

பத்திரிகையாளர் உயிரிழந்த விவகாரம்: சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

‘புதிய தலைமுறை’ பத்திரிக்கையாளர் முத்துகிருஷ்ணன் உயிரிழந்ததின் எதிரொலியாக கட்டுமான பணிகளுக்கு முறையான பாதுகாப்புகளை ஏற்படுத்த வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னையில் மழைநீர் வடிகால் கால்வாயில் பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் இறந்ததன் எதிரொலியாக சென்னை மாநகராட்சி அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் வாய்மொழியாக சில உத்தரவுகளை வழங்கியிருக்கிறது. அதன்படி, கட்டுமானப் பணிகளுக்கு முறையான பாதுகாப்புகளை ஏற்படுத்த வேண்டும். பணி ஆரம்பம் முதல் முடியும் இடம் வரை இரும்பு தடுப்புகள் கொண்டு ஏற்படுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும். இன்று இரவுக்குள் அனைத்து … Read more

தொடரும் ஒருதலை காதல் குற்றங்கள்..காதலிக்க மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் – இளைஞர் கைது

காதலிக்க மறுத்த பட்டதாரி பெண்ணை கத்தியால் குத்தி கொலைசெய்ய முயற்சி செய்ததில் படுகாயமடைந்த பெண், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் முத்துராஜ் (வயது 25) என்பவர் அதே பகுதியில் உள்ள ஹேமலதா என்ற (24 வயது) தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வரும் பெண்ணை காதலிக்க வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பெண் தொடர்ந்து காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த … Read more

மனநலம் பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுடன் தீபாவளி கொண்டாட்டம் – அசத்திய அமைச்சர்

தூத்துக்குடி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடை வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடிய அமைச்சர் கீதா ஜீவன் தீபாவளி கொண்டாடினார். தீபாவளி பண்டிகை நாளை தமிழக முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் தீபாவளி கொண்டாடும் நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தீபாவளி கொண்டாடுவது என்பது கேள்விக்குறிதான். அதிலும் அநாதை ஆசிரமங்களில் தங்கி இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி என்பதே தெரியாத நிலைதான். இந்த நிலையில் தூத்துக்குடியை அடுத்துள்ள கூட்டாம்புளி கிராமத்தில் அமைந்துள்ள அன்பு ஆசிரமத்தில் … Read more

ஒரேநாளில் திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய 1 கிலோ 88 கிராம் தங்கம் – அதிகாரிகள் விசாரணை

திருச்சி விமான நிலையத்தில் ₹55,94,493 மதிப்புடைய, ஒரு கிலோ 88 கிராம் எடையிலான கடத்தல் தங்கத்தை, திருச்சி வான் நுண்ணறிவு போலீசார் பறிமுதல் செய்தனர். சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில், அந்த விமானத்தின் ஊழியர் தனது சாக்ஸில் (socks) மறைத்து கடத்திவந்த, ₹34,14,288 மதிப்புடைய, 666 கிராம் எடையிலான கடத்தல் தங்கத்தை, திருச்சி வான் நுண்ணறிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில், ஒரு … Read more

நெல்லை: தோப்பு ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு – 43 பேர் பத்திரமாக மீட்பு; 2 பேர் மாயம்

பணகுடி கன்னிமாரான் தோப்பு ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 15  பேர் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டனர். 43 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். காணாமல்போன இருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  நெல்லை மாவட்டம் பணகுடி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு முதலே நல்ல மழை பெய்தது. இதனால் கன்னிமாரான் தோப்பு ஓடையில் தண்ணிர் வந்தது. இன்று விடுமுறை என்பதால்  குளிப்பதற்காக நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அந்த பகுதிக்கு கார்களிலும், பைக்குகளிலும்  திரண்டுவந்தனர். கன்னிமாரான் … Read more