என்னதான் பிரிந்துபோனாலும் !! சமந்தாவை விசாரித்தார் அவர் !!

தமிழ் திரையுலகில் தனது நடிப்பினால் பல ரசிகர்களை கொண்டவர்தான் நடிகை சமந்தா. இவருக்கு தமிழகத்தில் மட்டுமல்லாது, தெலுங்கு திரையுலகிலும் அதிகமான ரசிகர்கள் உள்ளார்கள். அவரது வசீகர சிரிப்புக்கும், இயல்பான நடிப்பிற்கும் ரசிகர்கள் ஏராளம். பல படங்களில் நடித்து வந்த அவர், தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்த பிறகு, சில காலம் ஓய்வெடுக்க வேண்டும் என்று தனது சினிமா வாழ்வுக்கு பிரேக் விடுத்துள்ளார். குஷி நாயகி … Read more

விநாயகர் சதுர்த்தி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – என்னென்ன கட்டுப்பாடுகள்?

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு வைக்கப்படும் விநாயகர் சிலைகளை தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் ஆன சிலைகளை மட்டுமே நீர் நிலைகளில் கரைக்க அனுமதியளிக்கப்படும். விநாயகர் சிலைகளின் ஆபரணங்களை தயாரிக்க உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம். கரூர் சிலைகள் வைத்து வழிபாடு … Read more

"உதயநிதி ஒரு ஜூனியர்".. சனாதனம் பற்றி அவர் அப்படி பேசியிருக்கக் கூடாது.. மம்தா பானர்ஜி 'நறுக்'

கொல்கத்தா: சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையாகிய நிலையில், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியிலும அது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டிக்கும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை பூண்டோடு ஒழிக்க வேண்டும் என்று பேசினார். அதாவது, “டெங்கு, மலேரியாவை நாம் … Read more

சனாதனத்துக்கும் சேகர்பாபுவுக்கும் என்ன சம்மந்தம்? மீண்டும் அண்ணாமலையை திட்டி தீர்த்த காயத்ரி ரகுராம்..

சென்னை தமுஎகச மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி டெங்கு, மலேரியா போல சனாதன தர்மமும் அழிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இது நாடு முழுவதும் விவாதப் பொருளாகியுள்ள நிலையில், இதனை கையிலெடுத்து உதயநிதிக்கு எதிராக அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதியோடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் கலந்துகொண்டார். இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுடன் துணை போகிறவருக்கு, இந்து சமய … Read more

Jailer: ஜெயிலர் வெற்றி..அனிருத்துக்கு பரிசு கொடுத்த கலாநிதிமாறன்..எத்தனை கோடி தெரியுமா ?

ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து ரஜினிக்கும், நெல்சனுக்கும் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் கார் மற்றும் காசோலையை பரிசாக கொடுத்தார். இதையடுத்து தற்போது இசையமைப்பாளர் அனிருத்துக்கு கலாநிதிமாறன் காசோலையை பரிசாக கொடுத்துள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகின்றது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிநடைபோட்டு வருகின்றது. ரஜினிக்கும் நெல்சனுக்கும் தேவையான … Read more

உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி – வாளோடு வரும் சாமியார் – காப்பு மாட்டுமா காவல் துறை?

சென்னையில் செப்டம்பர் 2ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய உதயநிதி, “சனாதனம் சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரானது. டெங்கு, மலேரியா, கொரோனா போல சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியது” என்று பேசியிருந்தார். சனாதனம் தொடர்பான உதயநிதியின் பேச்சுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவிலும் வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அமித்ஷா, நட்டா என பாஜகவின் முன்னணி தலைவர்களின் உதயநிதியின் பேச்சை … Read more

சனாதன தர்மம்: வாய் திறந்த காங்கிரஸ்… உதயநிதி ஸ்டாலின் பேச்சிற்கு கே.சி.வேணுகோபால் பதில்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். குறிப்பாக தமிழக அரசியல் களத்தில் அண்ணாமலையின் நடைபயணம், அதிமுகவின் அட்டாக் அரசியல் உள்ளிட்டவை ஓரங்கட்டப்பட்டு விட்டன. மெயின் டாபிக்கே உதயநிதி ஸ்டாலின் பேசியது தான். முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இதற்கு பதிலடி கொடுக்கிறோம், கருத்து தெரிவிக்கிறோம் என்று அந்த விஷயத்தை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர். அப்படியென்ன பேசினார் எனக் கேட்கலாம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் … Read more

நயன்தாரா இன்ஸ்டாகிராமில் நுழைய இப்படியொரு காரணமா.?: பலே திட்டம்.!

அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தனது முதல் பாலிவுட் படத்திலே ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பை கைப்பற்றி, அதனை சிறப்பாக செய்தும் முடித்துள்ளார் அட்லீ. ஒருப்பக்கம் இந்தப்படத்திற்கான புரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், படத்திற்கான டிக்கெட் முன்பதிவு பணிகள் முழு வேகத்தில் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஷாருக்கான் நடிப்பில் தனது முதல் இந்தி படத்தை இயக்கியுள்ளார் அட்லீ. நீண்ட காத்திருப்புக்கு பிறகு இந்தப்படத்தை … Read more

கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஜாக்பாட்: ஒரே அறிவிப்பில் உயர்ந்த ஊதியம் – தமிழக அரசு அதிரடி!

அரசு பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களின் மதிப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணைவெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 423 கௌரவ உதவியாளர்கள் கடந்த கல்வி ஆண்டில் நியமிக்கப்பட்டனர். கௌரவ விரிவுரையாளர்களாக ஏற்கனவே பணியாற்றியவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. அப்போது தகுதியற்றவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். தகுதியான கௌரவ விரிவுரையாளர்கள் விதிமுறைகளின்படியும், கல்வித் தகுதியின் அடிப்படையிலும் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து … Read more

திருப்பதியை நோக்கி நகரும் ஐடி நிறுவனங்கள் – இளைஞர்களுக்கு அடிக்கும் செம ஜாக்பாட்

இந்தியாவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் என்றாலே பெங்களூரு, ஐதராபாத், சென்னை, டெல்லி போன்ற பெரு நகரங்கள்தான் என சொல்லக்கூடிய நிலைமை இருந்த நிலையில், அது இரண்டாம் கட்ட நகரங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தியாவில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சாதகமான அம்சங்கள் குறித்து நாஸ்காம்- டெலாய்ட் இந்தியா ஆகியவை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கை மூலமாக இந்த சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. 2ம் கட்ட நகரங்களை நோக்கி ஐடி நிறுவனங்கள்நாடு முழுவதும் 26 இரண்டாம் கட்ட நகரங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களின் … Read more