Marimuthu love for cinema: சினிமா மீது கொண்ட காதல்..ஊரைவிட்டு சென்னைக்கு ஓடிவந்த மாரிமுத்து..!

நடிகரும் பிரபல இயக்குனருமான மாரிமுத்து இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். 57 வயதாகும் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். எதிர் நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கும் போது மயக்கமடைந்த மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. எதிர் நீச்சல் என்ற சீரியலின் மூலம் அனைவரது மனதையும் கவர்ந்த மாரிமுத்து இன்று மறைந்துவிட்டார் என்ற செய்தியை யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இந்நிலையில் இன்று பிரபல நடிகராக வலம் வந்துகொண்டிருந்த மாரிமுத்து தன் சிறுவயதில் … Read more

தென் மாவட்ட வேலைவாய்ப்பு… கூடவே பெரிய சர்ப்ரைஸ்… அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கொடுத்த மெகா அப்டேட்!

சென்னை தரமணியில் உள்ள டைடல் பார்க் தொழில்நுட்ப பூங்காவில் TIDCO-வின் மேம்பட்ட உற்பத்தி மையத்தை (CoEs) தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேரில் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில தொழில் வளர்ச்சி குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது, 2024 ஜனவரியில் தமிழகத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவங்களை டி.ஆர்.பி.ராஜா வழங்கினார் புதிய முதலீடுகள் இதில் பல்வேறு முன்னணி நிறுவனங்களை பங்கேற்க வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த … Read more

சிகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தவன்.. 'எதிர்நீச்சல்' மாரிமுத்து திடீர் மரணம்: திரையுலகினர் இரங்கல்.!

எதிர்நீச்சல் சீரியல் மூலமாக பிரபலமான மாரிமுத்துவின் திடீர் மறைவை ரசிகர்கள் யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒரு சின்ன கேப்பில் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த மாரிமுத்துவின் மறைவு திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பலரும் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் சீரியல். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாவதற்கு முக்கிய காரணமாக மாரிமுத்துவை சொல்லலாம். இந்த தொடரில் ஆதி குணசேகரனாகவே … Read more

மக்களே, மழை கொட்டித் தீர்க்க போகுது: எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை ஆய்வு மையம் ரிப்போர்ட்!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் (செப்டம்பர் 8, 9) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் என நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, ராமநாதபுரம், கோவை, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் செப்டம்பர் … Read more

RIP Thiru. Marimuthu : அவர் மறைவு தமிழ் சினிமாவின் பெரிய இழப்பு ! தமிழ் சினிமாவில் மாரிமுத்து

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து மிகுந்த வரவேற்பை பெற்றார் நடிகர் மாரிமுத்து. இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பு சினிமாவில் நடித்தும் படங்களுக்கு துணை இயக்குனராக பணிபுரிந்தும் இருக்கிறார். இவரின் பேச்சுக்கு பல விமர்சனங்கள் வந்தாலும் இவருக்கேனே ரசிகர்கள் நிலையாக இருந்து வருகின்றனர். மாரிமுத்து சினிமா இயக்குனராக வேண்டும் என மிகுந்த ஆர்வம் கொண்ட மாரிமுத்து வாய்ப்பை தேடி வரும்போது முதலில் ஹோட்டலில் வெய்ட்டராக பணிபுரிந்தார். வைரமுத்துவின் வரிகளுக்கு இவர் … Read more

தேயிலை விலை கடும் வீழ்ச்சி: அரசு உடனே செய்ய வேண்டியது இதை தான் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

பசுந்தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், நீலகிரி மாவட்டத்தில் சுமார் 85 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 1 கிலோ பசுந்தேயிலையின் விலை ரூ. 12/- வரை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அரசு செய்ய வேண்டியவை என்ன? “விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், பசுந்தேயிலைக்கான உண்மையான உற்பத்தி செலவு குறித்த தோட்டக் கலைத் துறையின் பரிந்துரைகள் மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின், விவசாய விளை … Read more

Marimuthu favourite movie: மாரிமுத்துவிற்கு சினிமாவின் மீது ஆசைவர காரணமாக இருந்த படம்..நூறு முறைக்கு மேல் பார்த்துள்ளாராம்..!

மாரிமுத்து இன்று மரணமடைந்த செய்தியை அறிந்து அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். சமீபகாலமாக மாரிமுத்து மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்துகொண்டிருந்தார். சினிமாவிலும் சீரியலிலும் கொடிகட்டி பறந்து வந்தார் மாரிமுத்து. எதிர் நீச்சல் என்ற சீரியல் அவருக்கு மிகப்பெரிய ரீச்சை தந்தது. சன் டிவியில் ஒளிபரப்பான எதிர் நீச்சல் சீரியல் அவரை பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக்கியது. ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார் மாரிமுத்து. இதன் காரணமாக அவருக்கு ஏகப்பட்ட சினிமா … Read more

மாரிமுத்து… நானும் அவரும் அந்தக்காலத்துல… சீமான் சொன்ன உருக்கமான சம்பவம்!

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலை காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமா வட்டாரத்திலும் சின்னத்திரை வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் சீமான், மாரிமுத்து குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தன் உயிர்க்கினிய சகோதரர் மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியை அறிந்து பேரதிர்ச்சியும், பெரும் … Read more

Indian 2: இந்தியன் 2-ல் நடித்த நெடுமுடி வேணு, விவேக், மனோபாலா இப்போ மாரிமுத்து மரணம்: அதில் 3 பேருக்கு மாரடைப்பு

படங்கள், டிவி சீரியல்களில் நடித்து வந்த மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேச சென்னை வடபழனியில் இருக்கும் ஸ்டுடியோவுக்கு சென்ற அவர் பிணமாக வீடு திரும்பியிருக்கிறார். பிச்சிகிட்டு போன ஜவான் பட்ஜெட் – படக்குழு தப்பிக்க வாய்ப்பு இருக்கா.? நன்றாக இருந்த மாரிமுத்து இப்படி திடீரென்று இறந்துவிட்டாரே என பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் … Read more

'பாரதம்' என்று சொன்னாலே பதைபதைத்து போவது ஏன்..? நாராயணன் திருப்பதி கேள்வி

சென்னை: “பாரதம் என்று சொன்னாலே சிலர் பதைபதைத்து போவது ஏன்?” என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வியெழுப்பியுள்ளார். இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என்று மாற்றுவதற்கு மத்திய அரசு எத்தனித்து வருவதாக கூறப்படுகிறது. பாஜக மூத்த தலைவர்கள் பலரும் இதனை ஆதரித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே சமயத்தில், இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. “இந்தியா என்ற பெயரை மாற்றுவதால் மட்டும் நாட்டின் விலைவாசியும், வேலையில்லா திண்டாட்டமும் … Read more