மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வன்கொடுமை செய்து கொலை.. 17 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது..!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 17 வயது சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம்,  குள்ளப்பகவுன்பட்டி பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நிர்வாணமாக படுகொலை செய்யப்பட்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.  அங்கு வந்த காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு … Read more

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது.!

சென்னை விமான நிலையம் மற்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபர் ஒருவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடு மற்றும் சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திலும் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் சென்னை மீனம்பாக்கம் சர்வதேச … Read more

சிதம்பரம் நடராஜர் கோவில்.. கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி.. தமிழக அரசு அரசாணை.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது எறி வழிபட அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக திருக்கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்களிடம் இருந்து பூஜை பொருட்களைப் பெறுதல், அமர்ந்து தரிசனம் செய்தல், சாமிகளை தொட்டு தரிசனம் செய்தல் மற்றும் அங்கப்பிரதட்சணம் செய்தல் ஆகியவை தவிர்க்கப்பட்டு கோயில் வளாகத்தில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் … Read more

உயர் கல்வியில் அதிமுக புரிந்த சாதனையை தான் புரிந்ததாக சொல்லிக் கொள்ளும் தி.மு.க.. ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்.!!

உயர் கல்வியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரிந்த சாதனையை தான் புரிந்ததாக சொல்லிக் கொள்ளும் தி.மு.க. அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிவார்ந்த சமுதாயத்தை படைக்க வேண்டுமென்றால், மனித வளத்தினை மேம்படுத்த வேண்டுமென்றால் அதற்கு முக்கிய காரணியாக விளங்குவது உயர் கல்வி தான் என்பதை நன்கு அறிந்து, கலை, அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம் என அனைத்துப் படிப்புகளிலும் புதிய பாடப் … Read more

நூல் விலையை குறைக்க பியூஷ் கோயலிடம் முதல்வர் முக ஸ்டாலின் வலியுறுத்தல்.!!

பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (19.5.2022) ஒன்றிய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பருத்தி மற்றும் நூல் விலை உயர்வினால் தமிழகத்தில் ஜவுளித் … Read more

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் புரட்டி எடுக்க போகும் கனமழை.!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட உள்தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, … Read more

சென்னையில் ரூ.12 லட்சம் மதிப்பிலான 1000 கிலோ குட்கா பறிமுதல்.! ஆர்.கே.நகர் போலீசார் அதிரடி நடவடிக்கை.!

சென்னையில் ரூபாய் 12 லட்சம் மதிப்புள்ள 1000 கிலோ குட்காவை ஆர்.கே.நகர் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். ஆர்.கே.நகர் போலீசார் கொருக்குப்பேட்டை எழில் நகர் அருகே உள்ள சர்வீஸ் சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு ஷேர் ஆட்டோவில் இருந்து மூட்டை மூட்டையாக பொருட்களை இறுகிக் கொண்டு இருப்பதை பார்த்த போலீசார் சந்தேகம் அடைந்து அந்த மூட்டையை பிரித்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது அரசால் தடை செய்யப்பட்ட … Read more

பேரறிவாளன் விடுதலை.. இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையிலான அதிகாரச் சிக்கலுக்குத் தீர்வினைத் தந்த தீர்ப்பு.. திருமாவளவன்.!

பேரறிவாளன் விடுதலை அமைச்சரவையின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டவரே ஆளுநர்.. இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையிலான அதிகாரச் சிக்கலுக்குத் தீர்வினைத் தந்த தீர்ப்பு. பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனதாரப் பாராட்டி வரவேற்கிறோம். இது மனித உரிமைக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல;  மாநில உரிமைக்குக் கிடைத்த வெற்றியும் ஆகும்!  பேரறிவாளன் உள்ளிட்ட … Read more

9 வயது பள்ளி சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர்.. போக்சோவில் கைது.!

திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் தாலுக்கா சட்டுவநாதாங்கல் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகள் நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமியை, அதே பள்ளியை சேர்ந்த தலைமையாசிரியர் சிறுமியின் ஆடைகளை களைந்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டிற்கு வந்த சிறுமியை தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி பெற்றோரிடம் கூறியுள்ளார். மேலும் இனிமேல் நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என தெரிவித்து கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் செய்யாறு … Read more

இன்றைய (19.05.2022) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.. வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி.!

இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை  மாற்றி அமைக்கப்பட்டு, தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.  தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு … Read more