திரைத் துறையில் பணியாற்றும் கலைஞர்களின் நலனுக்காக சிறப்புக் கடன் திட்டம் ஆரம்பிக்கப்படும்

இந்நாட்டில் திரைத்துறையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களின் நலனுக்காக விசேட கடன் திட்டம் ஒன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர். எச். எஸ். சமரதுங்க தெரிவித்தார். மேலும், திரையுலகம் மற்றும் கலைஞர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ற முன்மொழிவுகளைத் தயாரித்து அரசாங்கத்திடம் வழங்குமாறு அவர் கலைஞர்களைக் கேட்டுக் கொண்டார். இலங்கை சினிமாவை நவீன உலகிற்கு ஏற்றவாறு புதுப்பித்தல் மற்றும் இத்துறையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களின் தொழில்சார் எதிர்காலத்தைப் பாதுகாப்பது தொடர்பான கலந்துரையாடலில் அண்மையில் (02) … Read more

அரசியல் ரீதியில் பல்வேறு நெருக்கடியான தருணங்களில் விஜயதாச ராஜபக்ஷ நாட்டுக்காக என்னுடன் இணைந்தார்

• அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் சட்டத்தரணி வாழ்வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு. அரசியல் ரீதியில் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளில் விஜயதாச ராஜபக்ஷ நாட்டிற்காக தன்னுடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் சட்டத்தரணி வாழ்வின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் (05) இடம்பெற்ற … Read more

அரசியல் கட்சி அமைப்பு நாட்டின் தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும்

• கட்சிகளின் விருப்பத்துக்கேற்ப நாட்டை கட்டியெழுப்ப முடியாது. • அவ்வாறு செய்ய முயற்சித்தே நாட்டுக்கு ஒரு பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது. • சட்டம் ஒழுங்கைப் பேணுவதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல இணையுங்கள் – அனுராதபுரம் மாவட்ட சட்டத்தரணிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி வலியுறுத்தல். கட்சியின் தேவைக்கேற்ப நாட்டின் பொருளாதாரத்தை உருவாக்கவன்றி பொருளாதார ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே இந்நாட்டில் அரசியல் கட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கட்சிகளின் விருப்பத்திற்கேற்ப நாட்டின் … Read more

அரசாங்க வேலைத்திட்டத்தை முன்னோக்கி நகர்த்தி நாட்டை வெற்றியடையச் செய்யும் பொறுப்பு இளைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

• கோஷங்களுக்கும் வாக்குவாதங்களுக்கும் அடிபணிந்து நாட்டின் எதிர்காலத்தை மறந்துவிடக் கூடாது – “என்னில் இருந்து ஆரம்பிப்போம்” அநுராதபுரம் மாவட்ட இளைஞர் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு. நவீன விவசாயம், சுற்றுலா மற்றும் வலுசக்தித் துறைகளில் பரிவர்த்தனை ரீதியிலான மாற்றத்துடன் 2048 ஆம் ஆண்டளவில் வளமான இலங்கையை கட்டியெழுப்பும் பயணத்தை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அந்தப் பயணத்துடன் முன்னோக்கிச் சென்று நாட்டை வெற்றியடையச் செய்யும் பொறுப்பு இளைஞர்களிடம் உள்ளது எனத் தெரிவித்த ஜனாதிபதி, கோஷங்களிலும் … Read more

வெளிநாட்டுக் கடன் மற்றும் வட்டியாக 1,909.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் செலுத்தியுள்ளது

• சிரேஷ்ட பிரஜைகளுக்கு 15% வட்டி வீதம் வழங்குவதாக கூறுவோர் அதற்காக பணம் தேடும் விதத்தையைும் கூற வேண்டும். • 2018 ஆண்டு வரையில் காணப்பட்ட அனைத்து சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புக் கணக்குகளுக்கும் 12 வீத விசேட வட்டி வழங்கப்பட்டது – ஜனாதிபதி சமூக அலுவல்கள் பணிப்பாளர் ரஜித் கீர்த்தி தென்னகோன். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதிலிருந்து 2024 பெப்ரவரி வரையான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் 1909.7 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் மற்றும் … Read more

“துன்ஹிந்த  ஒடிசி” சொகுசுச் சுற்றுலாப் புகையிரதப் பயணம் ஆரம்பம்  

கொழும்பு – பதுளை புகையிரதப் பாதை ஆரம்பிக்கப்பட்டு நூறு வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு பயணத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு “ துன்ஹிந்த   ஒடிசி சொகுசு சுற்றுலாப் புகையிரதம்” போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல பரகுணவர்தனவின் தலைமையில் நேற்று (05) இடம்பெற்றது. கொழும்புக் கோட்டை புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற பல்சமய ஆசிர்வாத நிகழ்வுகளின் பின்னர் காலை 6.30 மணிக்கு ஆரம்பித்த புகையிரதம் பதுளை வரை பயணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன் இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் ஊடாக ஆரம்பிக்கப்படும் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்ட … Read more

ஏனைய வருடங்களை விட டெங்கு பாதிப்பும் இறப்பு சதவீதமும் குறைந்துள்ளது – சுகாதார இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல

ஏனைய வருடங்களை விட இந்த வருடம் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையையும் அதனால் ஏற்படும் இறப்பு வீதமும் குறைந்துள்ளதாக சுகாதார இராஜாங்க அமைச்சர், விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல தெரிவித்தார். இந்த வருடம் ஜனவரி மாதம் வரை 64 டெங்கு அபாய வலயங்கள் காணப்பட்ட போதிலும் இன்று இரண்டு வலயங்கள் வரை அதனைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா … Read more

நவீன தொழில்நுட்பமும் அறிவும் கல்வியின் புதிய ஆயுதங்களாகும்

• அடுத்த 75 ஆண்டுகளில் நாடு முன்னேற வேண்டுமானால் கல்வி முறை புதிய மாற்றத்திற்கு உள்ளாக வேண்டும் – கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதி தெரிவிப்பு. அறிவைப் புதுப்பித்தல் என்பது கல்வியின் பாரிய பணியாக மாறியுள்ளதாகவும், அடுத்த 75 வருடங்களில் நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் கல்வி முறைமையில் புதிய மாற்றம் ஏற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். நவீன தொழிநுட்பமும் அறிவும் கல்வியின் புதிய ஆயுதங்களா … Read more

அரசாங்கம் நாட்டில் ஏற்படுத்திய சாதகமான சூழல் காரணமாக இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது

வலுவான பொருளாதாரத்துடன், நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழல் இன்று நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலை மேலும் வலுப்படுத்தி தேசிய பொருளாதாரத்திற்கு உயர் பங்களிப்பை பெற எதிர்பார்க்கிறோம்- ஜனாதிபதி. கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கம் நாட்டில் முன்னெடுத்த சரியான தீர்மானங்களினால் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதுடன் இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆனால், நாட்டின் பொருளாதாரம் இன்னும் தொங்குபாலத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை … Read more

தேசிய எண்ணெய் தேய்த்தல் விழா ஏப்ரல் 15 ஆம் திகதி வத்தளை ஹெந்தல புராண ரஜமஹா விகாரையில்!

ஏப்ரல் 18 ‘முருங்கை தினம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது – சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி. தமிழ், சிங்களப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் சுப நிகழ்வுகளில் ஒன்றான தலைக்கு எண்ணெய் தேய்த்தல் தேசிய விழா ஏப்ரல் 15 ஆம் திகதி காலை 10.17 க்கு நடைபெறவுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இதனைத் தெரிவித்தார். … Read more