சில இடங்களில், 50 மி.மீ க்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி

நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  மேல்,சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மேல்,சப்ரகமுவ, தென் மற்றும் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி இடம்பெறக்கூடும் இடியுடன் கூடிய மழை … Read more

மஹரகம அபேக்ஷா மருத்துவமனை மருந்து வகைகளை விற்பனை செய்த மருந்தாளருக்கு சிறைத் தண்டனை

மஹரகம அபேக்ஷா மருத்துவமனையின் மருந்துப் பொருட்களை திருடி அவற்றை புற்று நோயாளர்களுக்கே விற்பனை செய்த அதே மருத்துவமனையின் மருந்தாளர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற வரும் நோயாளர்களுக்கு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறி 21,000 ரூபாவிற்கு மருந்துகளை விற்பனை செய்ய முற்பட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹரகமவில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது 425,970 ரூபா பணமும் மேலும் சில … Read more

வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்

வாகன உரிமையாளர்கள் தமது வாகனங்கள் குறித்து விழப்புடன் செயல்பட வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் (கார்கள்) திருடப்படுகின்றமை தொடர்பாக அண்மையில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிவேரிய பிரதேசத்தில் 32 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் கார் ஒன்று திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாகவும் பெலிசார் குறிப்பிட்டுள்ளனர். பின்னர் பொலிஸார் கையடக்கத் தொலைபேசி தரவுகளை வைத்து விசாரணை நடத்தி குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளனர். காணாமற்போன குறித்த காரை, … Read more

ஏரோ இந்தியா 2023 கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்துவைத்தார்

ஆசியாவின் மிகப்பெரிய விமானக் கண்காட்சியான ஏரோ இந்தியா கண்காட்சியின் 14ஆவது பதிப்பான ஏரோ இந்தியா 2023ஐ பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி அவர்கள் 2023 பெப்ரவரி 13ஆம் திகதி பெங்களூருவில் ஆரம்பித்துவைத்தார். 2023 பெப்ரவரி 13 முதல் 17ஆம் திகதி வரை நடைபெறும் இக்கண்காட்சியானது, பாதுகாப்பு சார்ந்ததுறைகளில் தன்னிறைவடைதற்காகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு சிந்தனையான “மேக் இன் இந்தியா, மேக் போர் த வேள்ட்”  (‘Make in India, Make for the World’) … Read more

கிழக்கு மாகாணத்தில் “ஜப்பான் சமாதான காற்று” ,  கண்காட்சி

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மற்றும் இலங்கை கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த “ஜப்பான் சமாதான காற்று” உள்நாட்டு உணவுச் சந்தைக்கு சேதனப் உற்பத்திகளை அறிமுகப்படுத்தும் கண்காட்சி அங்குரார்ப்பண நிகழ்வு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தலைமையில் நேற்று (16) இடம்பெற்றது. இதன்போது சிறப்பு அதிதியாக பங்கேற்ற ஜப்பான் நாட்டு தூதுவர் ஹிதேஷி மிஷ்கோஷ்சி; விவசாயத்தை பிரதானமாக மேற்கொள்ளும் திருகோணமலை மக்களுக்கு சேதனப் … Read more

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனஜீவராசிகள், வனவளத் திணைக்கள காணிகள் விடுவிப்பு குறித்த கலந்துரையாடல் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்கள காணிகளை விடுவித்தல் மற்றும்  ஏனைய காணிப்பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து விசேட கலந்துரையாடல் இன்று  (17) மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் தலைமையில்  முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது.   வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்கள காணிகளை அபிவிருத்தியின் பொருட்டு விடுவித்தல்  மற்றும் மாவட்டத்தின் நிலவும்  ஏனைய காணிப்பிரச்சினைகளும் கலந்துரையாடப்பட்டதுடன் பிரச்சினைகளுக்கான தீர்வுக்குரிய வழிவகைகள் குறித்தும் ஆராயப்பட்டன.    மக்களது காணிகள், விவசாய நிலங்கள், அரச தேவைக்கான காணிகள் போன்றவற்றை குறித்த … Read more

கினிகத்தேனையில் 3 பஸ்கள் விபத்து

2 இ.போ.ச. பஸ்களுடன்; 1 தனியார் பஸ் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.  கினிகத்தேனை பெரகஹமுல பகுதியில் நேற்று (16)  பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ் ஒன்று பயணிகள் இறங்குவதற்காக பெரகஹமுல பகுதியில் நிறுத்தப்பட்டபோது, கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ் முந்திக்கொண்டு செல்ல முற்பட்ட போதே எதிர் திசையில் ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் … Read more

இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இலங்கை ஏ குழு அறிவிப்பு

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட்போட்டிக்கான இலங்கை ஏ குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை நேற்று (16) வெளியிட்டுள்ள இரண்டாவது போட்டிக்கான குழுவில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாமிக்க கருணாரத்ன, பிரவீன் ஜயவிக்ரம மிலான் ரத்நாயக்க ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இளம் சகலதுறை வீரர் துனித் வெல்லாலகேவுடன், இசித விஜேசுந்தர மற்றும் அம்ஷி டி சில்வா ஆகியோர் இரண்டாவது போட்டிக்கான ஏ குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதேவேளை முதல் போட்டியில் விளையாடியிருந்த … Read more