இந்தியா- இலங்கை  முதலாவது T20 கிரிக்கெட் போட்டி மூன்றாம் திகதி ஆரம்பம்

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று T20 மற்றும் 3 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தியா- இலங்கை  அணிகளுக்கிடையிலான  முதலாவது T20 போட்டி எதிர்வரும் மூன்றாம் திகதி இந்தியாவின் மும்பை வான்கடே மைதானத்தில் .நடைபெறவுள்ளது. இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி வீரர்களின் விபரம் நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இதில் T20 போட்டிக்கான இந்திய அணியில் தலைவர் ரோகித் சர்மா, முன்னாள் தலைவர் விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு … Read more

வெளிநாடு செல்வதற்காக உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்குபவர்கள்…….

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்புடன் ஒப்பநோக்குவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெயர். வயது, இருப்பிடம் போன்ற தகவல்களை மாற்றி, போலியான அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டுகளை தயாரித்து தொழில்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, சந்தேகத்திற்கிடமான நபர்களின் தகவல்களை உடனடியாக சரிபார்க்க இதன் மூலம் முடியும். இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (28) கைச்சாத்திடப்பட்டது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் மகேந்திர குமாரசிங்க, பணிப்பாளர் சபை உறுப்பினர் … Read more

திரு. கே. தயாபரனுக்கு இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர் நியமனம்

நிருவாக உத்தியோகத்தராக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சேவையாற்றிய கிருஷ்ணபிள்ளை தயாபரன் ,சேவைத் திறன் அடிப்படையில் நியமனம் பெற்ற 5 வீத இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாவட்ட செயலகத்தில் 30 வருடகாலமாக, மட்டக்களப்பு மாவட்ட 10 அரசாங்க அதிபர்களின் கீழ் பணியாற்றிய அனுபவத்தை தனதாக்கியுள்ளார். அத்துடன் தனது சேவைக்காலத்தில் பேராதனைப் பல்கலைகழகத்தின் இளமாணி மற்றும் மதுரை காமராஜன் பல்கலைகத்தின் முதுமாணி, மற்றும் இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்தில் அலுவலக முகாமைத்துவ டிப்ளோமா ஆகிய … Read more

பிரிட்டன் ,பிரான்ஸ் நடுகளுக்கு பனங்கள் ஏற்றுமதி

ஒரு தொகை பனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தயாரிப்புக்கள் பிரான்ஸுக்கு அண்மையில்; அனுப்பப்பட்டதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி கிருஷாந்த பத்திராஜா தெரிவித்தார். கடந்த நவம்பர் 29ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த ஏற்றுமதி மூலம்  45,000 அமெரிக்க டொலர்கள் வருமானம் பெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, டிசம்பர் மாதம் 14 அம் திகதி பிரிட்டனுக்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு தொகை பனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தயாரிப்புக்கள் ஏற்றுமதி மூலம் 6,300 அமெரிக்க டோலர் வருமானம் பெறப்பட்டதாக தெரிவித்த அவர் … Read more

போதைப்பொருள் பாவனையில் இருந்து சிறுவர்களை மீட்பதற்கு …

சிறுவர்கள் வாழக்கூடிய சிறந்த சூழலை உருவாக்குவதன் மூலம் அவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து மீட்க முடியும் என்று சிறுவர் நோய் விசேட நிபுணர் டொக்டர் பேராசிரியர் பூஜித் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,சிறுவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து விடுவிப்பது ஒட்டுமொத்த சமூகத்தினதும் பொறுப்பாகும். பாடசாலைகளில் மாத்திரமன்றி வீடுகளிலும் பெற்றோர் சிறுவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகளின் நடத்தையிலும் அவர்களுடன் பழகுபவர்களையும் நன்கு அவதானிக்க வேண்டும் … Read more

யாழில் டெங்கு நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

கடந்த 10 வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் (2022) டெங்கு நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மாவட்ட மட்ட சுகாதார மேம்பாட்டுக் குழு கூட்டம் ,யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (27) நடைபெற்ற போதே வைத்திய அதிகாரி இதனை குறிப்பிட்டார். இந்த வருடம் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளானவர்களாக 3,294 பேர் … Read more

ஜனவரி முதல் “சாரதி திறன் மதிப்பெண்” முறை

வாகனங்களை செலுத்தும் பொழுது சாரதிகளினால் இடம்பெறும் தவறுகளுக்காக நடைமுறைப்படுத்தப்படும் “சாரதி திறன் மதிப்பெண் ” “Driver Skill Score System”  முறையை அடுத்த மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இதற்கமைவாக வாகனங்களை செலுத்தும் பொழுது சாரதிகளினால் நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்படும் தவறுக்கு புதிய முறையில் புள்ளி வழங்குதல் மற்றும் அதற்கான தண்டனை வழங்குவதற்கான முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதற்கான ஆரம்ப நடைமுறைகள் தற்பொழுது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அமைச்சரவையின் அனுமதிக்காக … Read more

கிளிநொச்சி புதிய பேருந்து நிலையம் விரைவில் மக்களிடம்….

நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி புதிய பேருந்து நிலையம் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த பேருந்து நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை 94 மில்லியன் ரூபா ஆகும்.  2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனம் இதன் ஒருபகுதியில் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டது. பின்னர், நகர அபிவிருத்தி அதிகாரசபை … Read more