உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் சமல் ராஜபக்ஷ பங்கேற்றார்

உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சமல் ராஜபக்ஷ பங்குபற்றியதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவிப்பு பாராளுமன்றத்தில் அண்மையில் (01) மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட இறையாண்மைப் படுகடன் நிலைபெறுதன்மையை மீட்டெடுப்பதற்கு உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சமல் ராஜபக்ஷ பங்குபற்றியதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிவித்துள்ளார். குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சமல் … Read more

ஆந்திரா மாநில முதல்வருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டி அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாய, மருந்துகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது குறித்தும் கலந்துரையாடல் மேற்கொண்டார். BOI ஆடைகள் பூங்கா குறித்தும் , திருகோணமலை துறைமுகத்தில் உள்ள தொழிற்பூங்காவில் முதலீட்டாளர்களை தொழில் பூங்கா அமைக்க ஊக்குவிப்பது குறித்தும் ஆந்திர மாநில அரசிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.இலங்கையில் திருப்பதி திருமலை கோவில் பக்தர்கள் அதிகளவில் … Read more

ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த சாமரி அதபத்து

நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு சதங்களை விளாசி இலங்கை மகளிர் அணியின் தொடர் வெற்றிக்கு உதவிய அணித் தலைவி சாமரி அத்தபத்து துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். அவுஸ்திரேலிய மகளிர் அணியின் பெத் மூனியை பின்தள்ளி சாமரி அதபத்து துடுப்பாட்ட வீராங்கனைகள் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சமரி அதபத்து 3 போட்டிகளில் … Read more

பாராளுமன்றம் இன்று (05) முதல் 07 ஆம் திகதி வரை கூடும்

▪️ ‘நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்’ தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று (05) இடம்பெறும். ▪️ ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இரண்டாவது நாளாகவும் ஜூலை 06 ஆம் திகதி பாராளுமன்றம் இன்று (05) முதல் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் 2023.06.30 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் … Read more

போலியான தர்க்கங்களை முன்வைப்பதை விடுத்து நாட்டை முன்னேற்ற ஒன்றிணையுங்கள்

போலியான தர்க்கங்களை முன்வைத்து தோல்வியைத் தழுவிக் கொள்வதற்கு மாறாக நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்கட்சித் தலைவர் தலைமையிலான முழு எதிர்க்கட்டசிக்கும் அழைப்பு விடுத்தார். தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்கட்சியினால் முன்வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் உண்மைக்குப் புறம்பானதென தெரியவந்துள்ளதால் நாட்டை முன்னேற்றும் வேலைத்திட்டத்திற்கு பங்களிப்புச் செய்த பெருமையுடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கான வாய்ப்பை உருவாக்கிகொள்ளுமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். அவசியம் எனில் பாராளுமன்ற சபாநாயகரிடத்தில் கலந்துரையாடி எதிர்கட்சியினருக்கு … Read more

இலங்கையில் முதலீடு செய்ய உலகம் முழுவதிலும் முதலீட்டாளர்கள் தயாராகவுள்ளனர்

பொருளாதாரத்தை மேம்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு சர்வதேசத்தின் பாராட்டு. கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 டொலர் பில்லியன் முதலீடு.புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலைமொன்றை ஆரம்பிக்கத் திட்டம்- வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி.முதலீட்டுக்குச் சாதகமான சூழலை உருவாக்கிக்கொடுக்கும் வகையில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளும் பட்சத்தில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் தயாராக இருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இந்நாட்டின் வங்கிக் கட்டமைப்பு சரிவடையும் என சில தரப்புக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும், நாட்டின் பொருளாதாரத்தை … Read more

தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்  

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.   2023 ஜூலை 04 ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜூலை 03 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல்,சப்ரகமுவ,மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் … Read more

கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.    அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜூலை 03 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை:புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய … Read more

4வது படைக்குழு அமைதி காக்கும் பணி நிறைவடைந்து நாடு திரும்பியது

மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் மினுஸ்மா பணிகளில் 4 வது இலங்கை அமைதிகாக்கும் படைக்குழு அவர்களின் சேவைக்காலம் நிறைவடைந்து நேற்று (3) நாடு  திரும்பியுள்ளனர். முதல் கட்டத்தின் போது, 6 அதிகாரி மற்றும் 155 சிப்பாய்கள் நாடு திரும்பியதுடன் ஏனையோர் 5 வது படைக்குழு பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட பிறகு நாடு திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 14 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எம்.ஆர்.என்.கே.ஜெயமன்ன ஆர்டப்ளியுபீ, கெமனு ஹேவா படையணி நிலைய தளபதி பிரிகேடியர் டப்ளியூபிஜேகே விமலரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ, … Read more

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமத்தில் ஜனாதிபதி வழிபாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (03) பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புண்ணிய தலத்துக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். கிரிவெஹெர விகாராதிபதி வண. கொபவக்க தம்மிந்த நாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி, அவர்களின் நலம் விசாரித்தன் பின்னர் சிறு உரையாடலிலும் ஈடுபட்டார். பின்னர் ஜனாதிபதி சமய நிகழ்வுகளில் கலந்துகொண்டு ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். கதிர்காமம் வருடாந்த எசல மகா பெரஹராவின் இறுதி நாளான நேற்று பெரஹராவை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கந்துல ஹஸ்தி ராஜாவின் … Read more