ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு: பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டத்தை மறுசீரமைப்பதற்கான ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (02) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 5 வாக்குகளும் பதிவாகின. 43 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

அமெரிக்க டொலர் எவ்வாறு ரூ.300 ஆக குறையும்: அமைச்சர் அலி சப்ரி விளக்கம்

சர்வதேச நாணய நிதியம் (IMF), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் உலக வங்கி ஆகியவற்றில் இருந்து பெறப்படும் டொலர் மற்றும் நிதி அதிகரிப்பால், ஒரு அமெரிக்க டொலரின் கொள்வனவு 300 ரூபாவாக குறைவடையும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். நிதி ஒதுக்கீடு (திருத்த) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சப்ரி இவ்வாறு கூறியுள்ளார். தற்போது ஒரு அமெரிக்க டொலரின் விலை ரூ. 367. … Read more

இந்தியாவில் புதிதாக 6,168 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு 6,168 ஆக சற்று குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 6 ஆயிரத்து 168 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று 7 ஆயிரத்து 946 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 6 ஆயிரத்து 168 ஆக குறைந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியே 44 இலட்சத்து 36 ஆயிரத்து … Read more

மே 09 பாராளுமன்ற உறுப்பினர் வீட்டிற்கு தீ: 03 பேர் கைது

மே 09 ஆம் திகதி அன்று ஏற்பட்ட போராட்டத்தின் போது ஹோகந்தரவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் இல்லத்தை சேதப்படுத்தி தீ வைத்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள், மாலபே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோகந்தரவில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு சொத்துக்களை சேதப்படுத்தி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் நேற்று ஹோகந்தர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. … Read more

சீனா நகரில் கொரோனா: ஊரடங்கு

சீனா சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. சீனா சிச்சுவான் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை 3 நாளில் 492 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக அந்த மாகாணத்தில் உள்ள செங்டு நகரில் ஊரடங்கு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு 4 ஆம் திகதி வரையில் பொதுமக்கள் வீடுகளை … Read more

எட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை

எட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்னும் நடைமுறையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்று (02) பிற்பகல் 3 மணி வரை அமுலில் இருக்கும் என  தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு  தெரிவித்துள்ளது. இதேவேளை, மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை விழிப்புடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களுகங்கை, ஜின் மற்றும் … Read more

India commissions first indigenous aircraft carrier and unveils the new Ensign of Indian Navy

Prime Minister Narendra Modi unveiled the new Naval Ensign for Indian Navy at Kochi on 2 September 2022 on the sidelines of the commissioning of India’s first indigenous aircraft carrier INS Vikrant. The new Naval Ensign has done away with the Saint George’s Cross in centre which is symbolic of Indian Navy’s historic association with … Read more

உலக வங்கியின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் யூரியா

பெரும்போகத்திற்கான உர விநியோகம் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார். மேலும்இ உலக வங்கியின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் யூரியா உரத்தை நவம்பர் முதல் வாரத்தில் விவசாயிகளுக்கு வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்;. அத்துடன்இ இப் பருவத்தில் பயிரிடப்படும் அனைத்து நெற்பயிர்க தேவையான நீர் கொள்ளளவு போதுமாக உள்ளதாகவும்; அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் சந்திப்பு

தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான உலக உணவுத் திட்டத்தின் பிராந்தியப் பணிப்பாளர் ஜோன் அய்லிஃப், 2022 செப்டெம்பர் 01ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை மரியாதை நிமித்தம் சந்தித்தார். உணவுக்கான அணுகல் மற்றும் உணவு கிடைக்கும் தன்மையை உறுதி செய்வதற்காக உணவு முறைமைகளை வலுப்படுத்தி, குறிப்பாக சமுர்த்தி திணைக்களத்துடன் பிரதிபலிக்கும் பாதுகாப்பு வலையமைப்பு தொடர்பான திட்டங்களை உருவாக்கும் பொருட்டு, தேசிய ஊட்டச்சத்துத் திட்டங்கள் மற்றும் தேசிய பாடசாலை உணவுத் … Read more