சிறுவர்கள் தொடர்பில் அதிக அக்கறை செலுத்துமாறு வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தல்

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சிறுவர்கள் மருத்துவ சிகிச்சையை நாடும் போக்கு காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு காய்ச்சலால் நீர்ச்சத்து குறைய வாய்ப்புள்ளதால், அதிகளவில் தண்ணீiu gUf;f வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். குளிப்பதைக் கட்டுப்படுத்துவதால் வியர்வை கொப்புளங்கள் அதிகரிக்கலாம் எனவும் அதனால் இருமல், சளி எதுவாக இருந்தாலும் குழந்தைகளைக் குளிப்பாட்டுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, குழந்தைகளுக்கு தண்ணீரில் விளையாட … Read more

இரத்மலானை கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள்

இரத்மலானை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்ட பின்னர், முதலாவது விமானம் இன்று (27) காலை 8.45ற்கு இலங்கையை வந்தடைந்தது. இரத்மலானை விமான நிலையத்தின் விமான சேவைகள் 55 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விமான சேவைகள் பிரதானமாக மாலைதீவு மற்றும் இந்தியாவுக்கு இடையில் இடம்பெறுகின்றன. இந்தியா மற்றும் மாலைதீவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை பெரும் எண்ணிக்கையில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த விமான சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சின் … Read more

இந்தியாவின் நடைபெற்ற ஆசிய க்ரோஸ் கன்ரி – சம்பியன்ஷிப் போட்டியில் இராணுவத்தினர் வெற்றி

இந்தியாவின் நாகாலாந்தில் நடைபெற்ற ஆசிய க்ரோஸ் கன்ரி – சம்பியன்ஷிப் ஓட்டப் போட்டியில் 5 வது இலங்கைப் பீரங்கி படையணியின் சார்ஜன் ஆர்.எம்.எஸ் புஷ்பகுமார வெள்ளிப் பதக்கத்தை … அதேபோன்று, 3 போட்டியாளர்களை உள்ளடக்கிய போட்டிகளில் இலங்கை இராணுவ ஆண்கள் அணி போட்டியில் ஒட்டுமொத்தமாக இரண்டாம் இடத்தைப் பிடித்தது. மேலும் இராணுவத்தின் இரண்டு பெண் போட்டியாளர்கள் இந்தப் போட்டியின் போது ஒட்டுமொத்தமாக பெண்களுக்கான இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். போட்டியில் கலந்து கொண்ட மற்ற போட்டியாளர்களின் பெயர்கள் இங்கே … Read more

பிரதமரின் தலைமையில் கொழும்பில் நடைபெறும் பங்களாதேஷின் 51வது சுதந்திரதினக் கொண்டாட்டம்

இலங்கையிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பங்களாதேஷின் 51வது சுதந்திர மற்றும் தேசிய தின நிகழ்வுகள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (26) கொழும்பு கோலஃ;பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் மொஹமட் ஆரிபுல் இஸ்லாம் அவர்களின் அழைப்பின் பேரில், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் பிரதமரின் பாரியார் திருமதி. ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்க்ஷ அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை நிறுவி … Read more

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் ,தென்னாபிரிக்கத் தூதுவருடன் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தென்னாபிரிக்காவின் தூதுவர் சாண்டில் எட்வின் ஷால்க்கை 2021 மார்ச் 25ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அனுபவம் குறித்து இந்த சந்திப்பின் போது முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது. இந்த அனுபவங்கள் இலங்கையின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆக்கபூர்வமாக மாற்றியமைக்கப்படுவதை உறுதி செய்வதில் அக்கறை செலுத்தும் அதே வேளையில் ஏனைய நாடுகளின் நேர்மறையான அனுபவங்களை உன்னிப்பாக ஆராய்வதே இலங்கை அரசாங்கத்தின் நோக்கமாகும் … Read more

இந்திய வெளிவிவகார அமைச்சர், நாளை இலங்கைக்கு விஜயம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை (28) இலங்கைக்கு வரவுள்ளார். கொழும்பில் நடைபெறும் பிம்ஸ்ரக் மாநாட்டின் அமைச்சு மட்ட சந்திப்பிலும் அவர் பங்கேற்பார் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் 2022 போட்டித் தொடர் – கொல்கத்தா அணி,சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று (26) இந்தியாவில் ஆரம்பமானது. தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (26) நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை … Read more

கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவைகள்

விமான நிலையத்தில் 220 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விமான ஓடுபாதையில் இருந்து மீண்டும் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பமாகவுள்ளன. முதலாவது விமானம் இன்று காலை 8.40ற்கு மாலைதீவில் இருந்து இரத்மலானை விமான நிலையத்திதை வந்தடையவுள்ளது. முதலாவது விமானம் வருவதினை முன்னிட்டு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அதிதிகள் பங்கேற்கவுள்ளனர். இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து முதலில் மாலைதீவிற்கான விமான சேவை ஆரம்பமாவதுடன் பின்னர் பிராந்தியத்தில் உள்ள ஏனைய … Read more

மாவனெல்ல பிரதேசத்தில் ,மின்னல் தாக்கம்: 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மாவனல்லை பிரதேசத்தில் 25 பேர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். மாவனல்லை பெமினிவத்தயில் இறுச்சடங்கில் கலந்து கொண்டவர்களே மின்னல் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சேவையில் ஈடுபடும் ரயில்களில் மேலதிக ரயில் பெட்டிகள்

பண்டிகைக் காலப்பகுதியில் சேவையில் ஈடுபடும் ரயில்களில் மேலதிக ரயில் பெட்டிகள் இணைக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதனை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் தற்பொழுது நிலவும் ரயில் சாரதிகள் மற்றும் சமிக்ஞை பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக புதிய ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் தடை ஏற்பட்டிருப்பதாகவும் பிரதி ரயில்வே பொது முகாமையாளர் காமினி செனவிரட்ன தெரிவித்தார்.